இந்த ஓசிடி என்ற நோயைப் பற்றி பலருக்கும் பலவிதமான நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் யாருக்குமே இந்த நோயைப் பற்றிய சரியான முழுமையான புரிதல் இல்லை என்று தான் கூற வேண்டும். சர்வதேச ஓசிடி பவுண்டேஷன் அறிக்கை படி இது ஒரு மனநல சம்பந்தப்பட்ட குறைபாடு ஆகும். மேலும் குறிப்பிட்ட வயதினர் என்று இல்லாமல் அனைத்து விதமான வயதினரையும் இது பாதிக்கும்.
ஓசிடி நோய் என்றால் என்ன?
இது பெரு விருப்ப கட்டாய மனப்பிறழ்ச்சி அல்லது எண்ண சுழற்சி நோய் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதும், அவ்வாறு செய்வதிலிருந்து விடுபட நினைத்தாலும் தன்னாலேயே தன்னை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, அந்த விஷயத்தை கைவிட முடியாத நிலையில் இருப்பது எண்ண சுழற்சி நோய் என்று அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் அப்சசிவ் கம்பல்சிவ் டிசார்டர் என்று அழைக்கிறார்கள்.
இந்த ஒசிடி நோய் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். சிலருக்கு சிறிய சிறிய விஷயங்களை கூட இது பாதிப்பை உண்டாக்கலாம். இந்த நோய் ஒரு மனநல சம்பந்தப்பட்ட நோயாக இருந்தாலும் இதைப்பற்றி பல்வேறு புனைவுகள் இருந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது. இந்த நோயைப் பற்றிய புனைவுகளையும் அதன் உண்மை காரணத்தையும் இப்போது பார்ப்போம்.
Also Read : 30 நாட்கள்தான்.. நுண்ணுயிரி முதல் புழு வரை.. வீடு சுத்தத்தில் கவனிக்க வேண்டியது என்னென்ன?
கூற்று: நாம் அனைவருமே ஒரு விதத்தில் ஓசிடி நோயாளிகள் தான்!
உண்மை: இந்த ஓசிடி நோயானது ஒருவரின் குணாதிசயம் அல்லது தனிப்பட்ட ஒழுக்கத்தை பற்றியது அல்ல. இது ஒருவரின் மனநலம் சம்பந்தப்பட்டது மேலும் மிக அதிக அளவில் ஆன மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் இருந்து வெளிவருவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்களை அவர்கள் யோசிக்கும் விதம் மற்றும் அவர்களின் செயல்களின் மூலமாக கண்டறியலாம்.
கூற்று: அடிக்கடி கைகளை கழுவுவதும் சுத்தமாக இருப்பதும் தான் ஓசிடி குறைபாடு ஆகும்
உண்மை: சுத்தமாக இருப்பதும், கைகளை கட்டாயமாக கழுவ வேண்டும் என்பதும் இந்த நோயின் ஒரு சிறிய பகுதியாகும். இதைத் தவிர இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய கட்டுப்பாடின்மை, மற்றவர்களை காயப்படுத்துதல், தேவையற்ற பாலுணர்வு சிந்தனைகள் மற்றும் பலவிதமான வகைகளில் இந்த நோய் ஏற்படலாம்.
கூற்று: இது மிகப்பெரும் குறைபாடு அல்ல, இதனை பற்றி அதிகம் கவலை கொள்ளவும் தேவையில்லை.
உண்மை: இந்த குறைபாட்டினால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நபர்கள் மிக அதிக அளவிலான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் கவலை மற்றும் பயம் ஆகிய இரண்டும் சேர்ந்து இவர்களின் தினசரி அடிப்படை வேலைகளை கூட செய்ய முடியாத நிலையை உண்டாக்குகிறது. அவர்களை மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு வருவதன் மூலமும் மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களை செய்வதன் மூலமும் அவர்களை குணப்படுத்த முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Depression, Disease, Hygiene