ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வயதுக்கு ஏற்ப ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நார்மலாக இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்..?

வயதுக்கு ஏற்ப ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நார்மலாக இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்..?

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

Normal BP range in men and women : பெண்களுக்கு இரத்த அழுத்தம் வந்தால் ஆரம்ப அறிகுறிகளை காட்டாது. அமைதியான அறிகுறியாகவே இருக்கும். அப்படி பெண்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கும்போது, ​​சில அறிகுறிகள் அரிதாகவே தெரியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

Normal BP range in men and women : காலையில் எழுந்தவுடன் உங்களுக்கு தலைசுற்றல் அல்லது சில சமயங்களில் மூக்கில் இரத்தம் வருமா..? இது தவிர, தொடர்ந்து தலைவலி அல்லது உணர்வின்மை போன்ற அறிகுறிகளை நீண்ட நாட்களாக அனுபவிக்கிறீர்கள் எனில், நிச்சயமாக உங்கள் இரத்த அழுத்தம் அசாதாரணமாக உள்ளது என்று அர்த்தம். உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளவது அவசியம்.

உண்மையில், இன்று பெரும்பாலான மக்கள் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். WHO இன் கூற்றுப்படி, உலகளவில் சுமார் 1.28 பில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் 46 சதவிகிதத்தினருக்கு தங்களுக்கு இரத்த அழுத்த நோய் இருப்பதைக் கூட அறியாமல் இருக்கிறார்கள். வேறு சில பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற சென்றபோது, ​​அவர்களுக்கு பிபி அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுமார் 70 கோடி பேர் பி.பி.க்கு சிகிச்சை கூட எடுக்காமல் இருக்கிறார்கள். இரத்த அழுத்தம் காரணமாக, இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் பிற நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நபரும் தனது நார்மல் இரத்த அழுத்த அளவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

பெண்களுக்கு இரத்த அழுத்தம் என்னவாக இருக்க வேண்டும் :

புகழ்பெற்ற சுகாதார வலைத்தளமான இமோஹாவின் கூற்றுப்படி, பெண்களுக்கு இரத்த அழுத்தம்  வந்தால் ஆரம்ப அறிகுறிகளை காட்டாது. அமைதியான அறிகுறியாகவே இருக்கும். அப்படி பெண்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கும்போது, ​​சில அறிகுறிகள் அரிதாகவே தெரியும். அதனால்தான் இது அமைதியான சமிக்ஞை என்று அழைக்கப்படுகிறது. அதுவே பெண்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, சில அறிகுறிகள் தெரியும். அப்படி , இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, கண்களுக்கு அருகில் சிவப்பு புள்ளிகள், தலைச்சுற்றல் மற்றும் தோலில் தடிப்புகள் ஆகிய அறிகுறிகள் தென்படும்.

Also Read : பூண்டை இப்படி சாப்பிட்டா சுகர் கன்ட்ரோல் ஆகுமா..? நீரிழிவு நோயாளிகளுக்கு பூண்டு தரும் நன்மைகள்..!

ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு 21 முதல் 25 வயதுக்குள் 115.5 முதல் 70.5 வரை இரத்த அழுத்தம் இருக்க வேண்டும், அதே சமயம் 31 முதல் 35 வயதிற்குள் இரத்த அழுத்தம் குறையத் தொடங்குகிறது. அதாவது இந்த வயதில், பெண்களின் இரத்த அழுத்தம் 110.5 மற்றும் 72.5 க்கு குறைவாக இருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் ஆண்களின் வயதுக்கு ஏற்ப சரியான பிபி அளவு :

வயதுஆண்பெண்
18-39119/70110/68
40-59124/77122/74
60 வயதுக்கு மேல்133/69139/68

ஆண்களுக்கு எவ்வளவு பிபி இருக்க வேண்டும் :

பெண்களை விட ஆண்களில் இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது. 31 முதல் 35 வயது வரையிலான ஆண்களுக்கு 114.5 முதல் 75.5 வரை இருக்க வேண்டும். ஆனால் 40 வயதிற்கு பிறகு, இரத்த அழுத்தம் அளவீடு சிறிது அதிகரிக்கிறது. 61 முதல் 65 வயது வரை உள்ள ஆண்களின் இரத்த அழுத்தம் 143 முதல் 76.5 வரை இருக்கலாம்.

இரத்த அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது..?

இரத்த அழுத்தம் அதிகரித்தால், இதயம் தொடர்பான பல ஆபத்து இங்கிருந்தே தொடங்குகிறது. எனவே, இரத்த அழுத்தம் அதிகரித்தால், உடனடியாக உங்கள் வாழ்க்கை முறையை கவனிக்கவும். அதாவது தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிகரெட், மது, பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக சர்க்கரை, அதிக உப்பு சாப்பிடுவதை தவிர்க்கவும். மன அழுத்தம் உங்களை துரத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். அவர் தரும் மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

First published:

Tags: Blood Pressure, High Blood Pressure