• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Nasal Vaccine : தற்போதுள்ள COVID தடுப்பூசிகளிலிருந்து நாசி தடுப்பூசி எவ்வாறு வேறுபடுகிறது?

Nasal Vaccine : தற்போதுள்ள COVID தடுப்பூசிகளிலிருந்து நாசி தடுப்பூசி எவ்வாறு வேறுபடுகிறது?

தடுப்பூசி

தடுப்பூசி

நாசி ஸ்ப்ரே உதவியுடன் சுவாச பாதைக்கு நேரடியாக தடுப்பூசி ஷாட்டை வழங்குவதே இதன் இலக்கு ஆகும். கடந்த ஆண்டு, விஞ்ஞானிகள் கோவிட் -19 க்கு எதிராக இந்த நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.

  • Share this:
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும், தடுப்பூசி போடுவதற்கும், கொடிய வைரஸின் மூன்றாம் அலைகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்தியாவில் தடுப்பூசிகள் பெரிய அளவில் கிடைக்க செய்வதற்கான உற்பத்தியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்தியாவில் கோவிட்ஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்பூட்னிக் வி ஆகிய மூண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதவிர, நாசி ஸ்ப்ரே தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி நடந்து வருவதாகவும், அது வெற்றியடைந்தால் அது இந்தியாவின் தடுப்பூசி உந்துதலை அதிகரிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாசி தடுப்பூசி என்றால் என்ன?

உங்கள் கைகளில் ஊசி போடுவதன் மூலம் தடுப்பூசி உடலில் செலுத்தப்படுவதற்கு பதிலாக இது உங்கள் மூக்கு வழியாக ஸ்ப்ரே செய்வதன் மூலம் செலுத்தப்படுகிறது. நாசி ஸ்ப்ரே உதவியுடன் சுவாச பாதைக்கு நேரடியாக தடுப்பூசி ஷாட்டை வழங்குவதே இதன் இலக்கு ஆகும். கடந்த ஆண்டு, விஞ்ஞானிகள் கோவிட் -19 க்கு எதிராக இந்த நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இது மூக்கு வழியாக ஒரு டோஸாக கொடுக்கப்படலாம் மற்றும் கொரோனா வைரசால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய எலிகளில் தொற்றுநோயைத் தடுப்பதில் தடுப்பூசி பயனுள்ளதாக இருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.இது தொற்றுநோயைக் கட்டுப்படுத்தக்கூடிய பாதுகாப்பான தடுப்பூசிக்கு வழிவகை செய்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக Cell இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மற்ற தடுப்பூசிகளை போலல்லாமல், மூக்கு வழியாக தடுப்பூசி வழங்கப்படுவது மூலம் இது நோய்த்தொற்றின் ஆரம்ப தளத்தை குறிவைக்கிறது. மேலும் அப்பகுதியில் பரவலான நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது.

சில நாட்களுக்கு முன்பு, உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியதாவது, நாசி தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான சோதனைகள் இந்தியாவில் நடைபெற்று வருவதாகவும், இது குழந்தைகளுக்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்கக்கூடும் என்றும் கூறினார். பாரத் பயோடெக் உருவாக்கிய இன்ட்ரானாசல் தடுப்பூசி BBV154 ஏற்கனவே மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாசி தடுப்பூசியின் நன்மைகள்?

NDTV வெளியிட்ட தகவலின்படி, இந்த வகையான தடுப்பூசி அதன் தனித்து நிற்கும் சில நன்மைகளை உள்ளடக்கியது. மேலும் இது ஒரு non-invasive தடுப்பூசி ஆகும். இதன் பொருள் இந்த தடுப்பூசியின் டோஸ்களை எடுக்க எந்த ஊசிகளும் தேவையில்லை. அதனை உடலில் செலுத்த எந்த சுகாதார ஊழியர்களின் உதவியும் தேவையில்லை. வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ஆய்வின்படி, இன்ட்ரானாசில் தடுப்பூசி ஒரு நேரடி விழிப்புணர்வு தடுப்பூசி ஆகும். அதாவது இது கிருமியின் பலவீனமான வடிவத்தைப் பயன்படுத்துகிறது.நாசி தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது?

நோய்த்தடுப்புக்கான IAP குழுவின் முன்னாள் கன்வீனர் மற்றும் குழந்தை மருத்துவரான டாக்டர் விபின் எம். வசிஷ்டா என்பவர் பிசினஸ் இன்சைடர் எனும் பத்திரிகையிடம் கூறியதாவது, இன்ட்ரானாசில் தடுப்பூசிகளின் குறிப்பிடத்தக்க நன்மை என்னவென்றால், வைரஸ் நுழையும் ஆரம்ப இடமான மூக்கில் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பூசி உருவாக்குகிறது. இதன் மூலம் வைரஸ் உள்நுழையும் போதே அது உடலில் பரவுவதை தடுத்து நிறுத்திவிடும். இந்த கட்டத்தில் வைரஸ் நுழைவதைத் தடுக்க முடிந்தால், அது நுரையீரலுக்குள் சேர்ந்து சேதத்தை ஏற்படுத்தாது. ஒரு பயனுள்ள மியூகோசல் நோயெதிர்ப்பு சக்தி உருவாக்கப்பட்டால், அது ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் மற்றும் வைரஸின் பரவலை மிகவும் திறம்பட குறைக்கும்.

COVID-19 Vaccination: கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா..? உங்கள் சந்தேகங்களுக்கான மருத்துவரின் விளக்கம்

பாரத் பயோடெக்கின் நாசி தடுப்பூசி

தற்போது, பாரத் பயோடெக்கின் நாசி தடுப்பூசி முதலாம் கட்ட சோதனைகளின் கீழ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி உற்பத்தியாளரின் கூற்றுப்படி, இன்ட்ரானாசல் தடுப்பூசி BBV154 நோய்த்தொற்று இடத்தில் (நாசி சளிச்சுரப்பியில்) நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இது கோவிட் -19 இன் தொற்று மற்றும் பரவுதல் இரண்டையும் தடுக்க உதவுகிறது. கோவாக்சின் தயாரிக்கும் பாரத் பயோடெக், இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் நாசி தடுப்பூசியின் பத்து கோடி டோஸ்களை வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போதுள்ள COVID-19 தடுப்பூசியிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?

ஆய்வுகள் படி, COVID-19 ஷாட் மற்றும் நாசி ஸ்ப்ரே இரண்டும் வேலை செய்கின்றன. நாசி தெளிப்பு பொதுவாக குழந்தைகளுக்கு செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரியவர்களுக்கும் நாசி ஸ்ப்ரே காய்ச்சல் ஷாட் போலவே செயல்படுவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: