Home /News /lifestyle /

அதிகரித்து வரும் மங்கி பாக்ஸ்... இதிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி..?

அதிகரித்து வரும் மங்கி பாக்ஸ்... இதிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி..?

குரங்கு அம்மை நோய்

குரங்கு அம்மை நோய்

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என்பது தீவிரத்தன்மை கொண்டது அல்ல. பெரியவர்களை பொருத்தவரையில் இந்த விஷயத்தில் பெரியவர்களுக்கு பெரிதாக கவலைப்படக் கூடிய விஷயம் ஒன்றுமில்லை. ஆனால், இந்த நோய் என்பது குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கிறது.

மேலும் படிக்கவும் ...
ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பரவிக் கொண்டிருக்கும் குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது குரங்கு அம்மை நோயும் பரவத் தொடங்கியிருப்பது பிரச்சினைக்குரியதாக கருதப்படுகிறது.

குரங்கு அம்மை நோய் என்பது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரக் கூடிய தொற்று நோய் ஆகும். சில நாடுகளில் குரங்கு அம்மை நோய் என்பது பெருந்தொற்று நோய் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என்பது தீவிரத்தன்மை கொண்டது அல்ல. பெரியவர்களை பொருத்தவரையில் இந்த விஷயத்தில் பெரியவர்களுக்கு பெரிதாக கவலைப்படக் கூடிய விஷயம் ஒன்றுமில்லை. ஆனால், இந்த நோய் என்பது குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கிறது. அரிதாக சில இடங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

சின்னம்மை நோயை போலவே, குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகளும் ஏறக்குறைய ஒன்று போலவே இருக்கின்றன. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபர்கள், குறிப்பாக குழந்தைகளை பாதிக்கும்போது அவர்களுக்கு அசௌகரியம், காய்ச்சல், அரிப்பு மற்றும் குளிர் நடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.



தடிப்புகள்:

ஒரு குழந்தை பாதிக்கப்பட்ட உடனே 2ஆவது அல்லது 3ஆவது நாளில் இந்த அறிகுறிகள் தென்பட தொடங்குகின்றன. பொதுவாக தடிப்புகள் முகத்தில் தொடங்கி பின்னர் கைகளுக்கு பரவத் தொடங்குகின்றன. அதற்குப் பிறகு உள்ளங்கைகள் மற்றும் பாதங்களுக்கு பரவுகின்றன. பெரும்பாலான தடிப்புகளில் நீர் நிரம்பியிருக்கிறது.

காய்ச்சல்:

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு மட்டுமே காய்ச்சல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

பேரண்டிங் பற்றி ஐஷ்வர்யா ராய் சொல்லும் டிப்ஸ்... நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...

குழந்தைகளிடம் தொற்று ஏற்படாமல் தடுப்பது எப்படி?

* குரங்குகள், எலி மற்றும் நோய் பாதித்த விலங்குகளுடன் குழந்தைகள் தொடர்பில் வருவதை தடுக்க வேண்டும். அதேபோன்று இறந்த விலங்குகளோடு தொடர்புக்கு வருவதையும் தடுக்க வேண்டும்.
* முழுமையாக வேக வைக்கப்பட்ட இறைச்சியை மட்டுமே சாப்பிட வேண்டும்.
* தொற்று பாதித்த தனிநபர்களுடன் குழந்தைகள் தொடர்பில் இருக்கக் கூடாது.
* சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு எப்போதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
* அல்கஹால் கலந்த சானிடைசரை குழந்தைகள் பயன்படுத்த வேண்டும்.

தற்போது கோடை காலத்தில் இருந்து மழைக்காலம் தொடங்குவதால் கூடுதலாக பருவகால நோய்கள் பரவத் தொடங்கும். இதை மனதில் வைத்து குழந்தைகளுக்கான தற்காப்பு நடவடிக்கைகளை பெற்றோர் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Kids Care, Monkeypox

அடுத்த செய்தி