ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மோலார் பிரக்னன்ஸி என்றால் என்ன..? அறிகுறிகள் மற்றும் ஆபத்துகள்..!

மோலார் பிரக்னன்ஸி என்றால் என்ன..? அறிகுறிகள் மற்றும் ஆபத்துகள்..!

மோலார் பிரக்னன்ஸி

மோலார் பிரக்னன்ஸி

இந்த நஞ்சுக்கொடி உருவாவதற்கு காரணமான இருக்கும் செல்கள் அதிவேகமாக வளர்ப்பதுதான் மோலார் கர்ப்பத்தை உருவாக்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கருத்தரிப்பதில் அல்லது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஒரு சில அரிதான பிரச்சினைகள் ஏற்படும். உதாரணமாக கரு குழாயில் கரு உருவாகும், கர்ப்பப்பைக்கு வெளியே கரு உருவாகும், மேலும், போலி கர்ப்பம் போன்ற நிலைகள் பரவலாகக் காணப்படும். ஆனால் இதை கடந்து அரிதான ஒரு நிலையம் இருக்கிறது. அதன் பெயர் மோலார் கர்ப்பம். கர்ப்பகாலத்தில் பிளசென்டாவாக வளரும் செல்கள் அதிவேகமாக வளரும் நிலை தான் மோலார் கர்ப்பம் என்று கூறப்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது மற்றும் இது ஆபத்தானதா என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஒரு பெண் கருத்தரித்தவுடன் கர்ப்பப்பைக்குள் ஒரு உறுப்பு உருவாகி குழந்தைக்கு தேவையான ஆக்சிஜனையும் சத்துக்களையும் வழங்கும். அதன் பெயர்தான் பிளசன்டா எனப்படும் நஞ்சுக்கொடி. அது மட்டுமின்றி இந்த பை கருவில் இருக்கும் சிசுவின் ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களையும் தேவையற்ற பொருட்களையும் நீக்கும். நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் சுவருடன் ஒட்டியிருக்கும்.

20 வயதுக்கு முன்னதாக அல்லது 35 வயதுக்கு மேற்பட்டு கர்ப்பமாகும் பெண்களுக்கு மோலார் கர்ப்பம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது.

மோலார் கர்ப்ப வகைகள்

இந்த நஞ்சுக்கொடி உருவாவதற்கு காரணமான இருக்கும் செல்கள் அதிவேகமாக வளர்ப்பதுதான் மோலார் கர்ப்பத்தை உருவாக்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மோலார் கர்ப்பம் இரண்டு வகைப்படும். முதலாவதாக முழுமையான மோலார் கர்ப்பம் (Complete molar pregnancy) இரண்டாவதாக பார்ஷியல் மோலார் கர்ப்பம் (partial molar pregnancy) என்று கூறப்படுகிறது.

முழுமையான மோலார் கர்ப்பம் என்பது நஞ்சுக்கொடியின் உள்ள திசுக்கள் அப்-நார்மலாகவும் வீக்கமாகவும் காணப்படும். மேலும் நஞ்சுக்கொடியில் நீர்க்கட்டிகளும் உருவாகும். இதனால், வயிற்றில் வளரும் சிசுவின் திசு வளர்ச்சியும் முழுமையாகாது.

பார்ஷியல் மோலார் கர்ப்பத்தில் நஞ்சுக்கொடியில் உள்ள திசுக்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டு இருக்காது. பகுதியளவு நஞ்சுக்கொடி மட்டுமே அப்நார்மல் திசுக்களால் பாதிக்கப்பட்டு இருக்கும். அதுமட்டுமின்றி கருவில் குழந்தை உருவாகி வளர்ந்து வந்தாலும் கரு உருவாகிய சில வாரங்களிலேயே கருச்சிதைவு ஏற்பட்டுவிடும்.

பிரசவத்திற்குப் பின் பெண்களின் உடலில் நடக்கும் மாற்றங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

மோலார் கர்ப்பம் என்பது புற்றுநோய் இல்லை

பொதுவாகவே செல்களின் அசுர வளர்ச்சி என்பது புற்றுநோயைக் குறிக்கும். நம்முடைய உடலில் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதி மற்றும் உறுப்புகளில் இருக்கும் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைவது தான் கேன்சர் பாதிப்பு என்று கூறப்படுகிறது. மோலார் கர்ப்பத்திலும் நஞ்சுக்கொடியில் இருக்கும் செல்கள் அதிவேகமாக வளரும் ஆனால் இது கேன்சர் கிடையாது.

மோலார் கர்ப்ப அறிகுறிகள்

ஒரு பெண் கருத்தரிக்கும் போது ஏற்படும் அனைத்து அறிகுறிகளும் மோலார் கர்ப்பத்திலும் தோன்றும். ஆனால் மோலார் கர்ப்பம் தான் என்பதை கண்டறிவதற்கு கூடுதலாக சில அறிகுறிகள் உள்ளன.

* கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்குள் ரத்தப்போக்கு ஏற்படுவது

* ரத்த போக்கு அடர் சிவப்பு முதல் பிரவுன் நிறத்தில் காணப்படும்

* மசக்கை மற்றும் தீவிரமான வாந்தி

* சில நேரங்களில் பிறப்புறுப்பில் இருந்து திராட்சை போன்ற கட்டிகள் வெளியேறுதல்

* பெல்விக் பகுதியில் அழுத்தம் மற்றும் வலி

* கர்ப்பப்பையால் தாங்க முடியாத அளவுக்கு அதிவேகமான வளர்ச்சி

* உயர் ரத்த அழுத்தம்

* உயர் இரத்த அழுத்தத்துடன் இணைந்த அதிக புரோட்டீன் அளவு (இவை மருத்துவ பரிசோதனையில் தெரிய வரும்)

* கருமுட்டைக்குள் நீர்க்கட்டிகள்

* இரத்த சோகை மற்றும் ஹைப்பர் தைராய்டிசம்

மோலார் கர்ப்பம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக ஜீன்கள் மற்றும் DNA ஆகியவை தான் குறிப்பிடப்படுகிறது. அது மட்டுமின்றி கரு உருவாக்கும் தன்மை இல்லாத முட்டை விந்தணுவுடன் இணையும் பொழுது மோலார் கர்ப்பம் உருவாகிறது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy Risks