‘லாங் கோவிட்’ என்றால் என்ன? தீவிர கொரோனாவிற்குப் பிறகு கடும் உடற்பயிற்சி செய்யலாமா?- மருத்துவ நிபுணரின் பயனுள்ள விளக்கம்

லாங் கோவிட் என்றால் என்ன?- மருத்துவர்கள் விளக்கம்

கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்ற ஒரு கொடிய நோயிலிருந்து உலகம் மீள போராடி வரும் நிலையில், ‘லாங் கோவிட்’ என்ற புதிய சொல் ஒன்று புழக்கத்துக்கு வந்துள்ளது. இது மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்குமே பெரிய கவலையளிக்கும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.

 • Share this:
  டெல்லி செயிண்ட் ஸ்டீபன் மருத்துவமனையின் எலும்பியல் நிபுணர் டாக்டர் மேத்யூ வர்கீஸ் இந்த ‘லாங் கோவிட்’ என்ற வார்த்தை ட்விட்டரில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் கோவிட்டிலிருந்து மீண்டவர்கள், குணமடைந்தவர்களில் சிலருக்கு ஏற்படும் நீண்ட நாளைய உடல் உபாதைகளைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறியுள்ளார். கோவிட் தொற்று ஏற்பட்ட பிறகு 4-5 வாரங்களில் சில உபாதைகள் சில நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன என்கிறார் டாக்டர் வர்கீஸ்.

  லாங் கோவிட் என்றால் என்ன?

  நுரையீரல் மற்றும் காசநோய் நிபுணர் டாக்டர் நிகில் நாராயண் பாண்ட்டே என்ன கூறுகிறார் என்றால், “கொரோனா வந்து மீண்ட நோயாளிகளில் 50 முதல் 70% நோயாளிகளுக்கு சில வகை நோய்களின் அறிகுறிகள் ஒரு 3 அல்லது 6 மாதக் காலத்தின் தென்படலாம்” என்கிறார்.

  டாக்டர் மேத்யூ வர்கீஸ் கூறும்போது, கோவிட்டினால் நீண்ட பாதிப்புக்கு உள்ளானோர் தங்களுக்கு நெகட்டிவ் என்று பிறகு வந்தாலும் தாங்கள் ஆரோக்கியமாக உணர்வதில்லை என்கின்றனர். கடும் களைப்பு, மூச்சு விடுதலில் சிரமம், உடல் வலி, நாடித்துடிப்பில் இயல்பின்மை, தலைவலி, சரும நோய், நெஞ்சு வலி, வயிற்றுப்போக்கு, ரத்த தமனிகளில் ரத்தக்கட்டு, வாசனை தெரியாமை, ருசி தெரியாமை ஆகியவற்றை உணர்வதாக நோயாளிகள் பலர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பிறகும் தெரிவிக்கின்றனர்.

  இதோடு மனக்கவலை, பதற்றம், மறதி, ஆகியவையும் சிலருக்கு ஏற்படுகிறது. முதலில் லாங் கோவிட் அறிகுறிகள் வயதானோருக்கு மட்டுமே இருந்தது என்று கருதினால் இப்போது அனைத்து வயதினருக்கும் இது ஏற்படுவதை பார்க்கிறோம் என்கிறார் டாக்டர் வர்கீஸ். மேலும் குழந்தைகளுக்கு ரத்தக்குழாய் ரத்தக் கட்டு ஏற்படுவதையும் பார்க்கிறோம், கோவிட் பாதித்து மீண்ட குழந்தைகளின் மனநல பிரச்னைகளை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்கிறார்.

  கோவிட் வந்து குணமடைந்தவர்கள் கடும் உடல் பயிற்சிகள் செய்யாதீர்!

  கொரோனா வைரஸ் தீவிரமாகப் பாதித்தவர்கள் உடனே அவசரப்பட்டு தீவிர உடற்பயிற்சியில் இறங்க வேண்டாம் என்று டாக்டர் வர்கீஸ் எச்சரிக்கிறார். 3 மாதங்கள் வரை தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்கிறார். கோவிட்டிலிருந்து மீண்டு தீவிர பயிற்சி செய்கிறேன் என்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்களும் உண்டு என்கிறார் டாக்டர் வர்கீஸ்.

  மேலும் ஆண்ட்டிபாடிகள் அதிகம் உற்பத்தியாவதால் லாங் கோவிட் நோயாளிகளில் அது எதிர்ப்பதற்கான கிருமிகள் இல்லாத போது நம் திசுக்களையே அது பதம் பார்க்கும் ஆட்டோ இம்யூன் நோய்களினால் பலருக்கு கோவிட்டுக்குப் பிறகு மூட்டுகளில் வீக்கம் வலி ஏற்படுகிறது. கோவிட் பாதிப்பின் போது சிகிச்சையில் கடுமையாக ஸ்டீராய்ட் கொடுக்கப்படுவதுதான் லாங் கோவிட்டுக்கான பிரச்சினை என்கிறார் டாக்டர் வர்கீஸ். எலும்புகளுக்கு நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ரத்தம் செல்லாமையான ‘அவாஸ்குலர் நெக்ரோசிஸ்’ என்ற ஒரு நோயும் மேலதிகமான ஸ்டீராய்ட் சிகிச்சை பெற்றவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. அனைத்து வயதினரும் தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வது அவசியம்.

  அவசியம் உணவில் சேர்க்க வேண்டியது:

  டயட் பற்றி கூற வேண்டுமெனில் உணவில் கட்டாயம் புரோட்டீன் அல்லது புரதச்சத்து சேர்க்கப்பட்டேயாக வேண்டும். மேலும் கால்சியம், வைட்டமின் டி, பால், பால்பொருட்கள், ட்ரை ஃபுரூட்ஸ், கால்சியம் சத்து அதிகமுள்ள உணவு வகைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் வைட்டமின் டி எடுத்துக் கொள்வதில் எச்சரிக்கை தேவை ஏனெனில் இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். அதனால் அது நம் உடலில் சேமிக்கப்படும். இதனால் பிற கோளாறுகள் ஏற்படலாம். சூரிய ஒளிதான் வைட்டமின் டி-க்கான சிறந்த ஆதாரம், ஆனால் மாசு அடைந்திருப்பதால் அதுவும் நம் உடலை முறையாக வந்து அடைவதில்லை, என்று டாக்டர் வர்கீஸ் எச்சரிக்கிறார்.
  Published by:Muthukumar
  First published: