• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்கள் உடலில் ஹார்மோன் கட்டுப்பாடே இல்லாமல் ஏறினால் என்ன ஆகும் தெரியுமா..?

உங்கள் உடலில் ஹார்மோன் கட்டுப்பாடே இல்லாமல் ஏறினால் என்ன ஆகும் தெரியுமா..?

ஹார்மோன் சமநிலையின்மை

ஹார்மோன் சமநிலையின்மை

உடலில் உள்ள சுரப்பிகள் தான் ஹார்மோன்களை சுரக்க வைக்கிறது. இவை இரத்த நாளங்களின் வழியாக சென்று நமது திசுக்களுக்கும், இரத்தத்திற்கும் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடும்.

  • Share this:
நமது உடலின் எல்லா செயல்பாடுகளையும் சரியான முறையில் நடக்க உதவுபவை இந்த ஹார்மோன்கள் தான். உடலில் ஹார்மோன்கள் சரியான் அளவு சுரக்கவில்லை என்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு நீண்ட நாட்களாக ஹார்மோன் சமநிலையில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை பற்றிய புரிதல் இல்லாமலே இருக்கக் கூடும். மாறிவரும் வாழ்வியல் முறை, உணவு முறை, மரபு ரீதியான பாதிப்புகள் போன்றவை தான் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது.

இதை பற்றி இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள முதலில் இந்த ஹார்மோன்கள் நமது உடலில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை பார்ப்போம். உடலில் உள்ள சுரப்பிகள் தான் ஹார்மோன்களை சுரக்க வைக்கிறது. இவை இரத்த நாளங்களின் வழியாக சென்று நமது திசுக்களுக்கும், இரத்தத்திற்கும் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடும். எனவே உடலில் சுரக்கும் ஹார்மோனின் அளவில் மாறுபாடு ஏற்பட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதை சில அறிகுறிகளின் மூலம் கண்டறியலாம்.

மனநிலை மாற்றங்கள், சட்டென உடல் எடை கூடுதல் அல்லது குறைதல், மன அழுத்தம், எப்போதும் கவலையாக இருத்தல், மலச்சிக்கல், முடி கொட்டுதல், முடி உடைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளின் மூலம் உங்களுக்கு ஹார்மோன் சமநிலையில் பாதிப்பு உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு மேலும் சில பாதிப்புகள் இவற்றால் உண்டாகும். சீரற்ற மாதவிடாய், முகத்தில் முடி வளர்தல், உடலில் பிற இடங்களில் அதிகமாக முடி வளர்தல், மார்பு பகுதி மற்றும் கன்னங்களில் முகப்பருக்கள் வருதல், பிறப்புறுப்பு பகுதி வறண்டு போகுதல் ஆகிய பாதிப்புகளின் மூலம் பெண்களின் ஹார்மோன் சுரப்பில் பிரச்சனை உள்ளது என அறியலாம்.



இவற்றை இயற்கையான முறையில் சரிசெய்ய ஆயுர்வேத நிபுணர்கள் முக்கியமான வழிமுறைகளை பரிந்துரைக்கின்றனர். கருஞ்சீரகம், அஸ்வகந்தா, பிளாக் கோஹேஷ், சேஸ்ட்டில்பெர்ரி, மார்ஜோரம் ஆகிய முக்கிய மூலிகைகளுக்கு ஹார்மோனை சமநிலையில் கொண்டு வருவதற்கான ஆற்றல் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கருஞ்சீரகத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகம் உள்ளது. மேலும் இதில் தைமோகுவினோன் என்கிற மூலப்பொருள் இருப்பதால், இது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை சமநிலையில் வைக்க உதவும். இத்துடன் மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் பாதிப்புகளை இது குறைக்கும்.

காலை எழுந்ததும் நகங்களை இப்படி தேய்த்தால் தலை முதல் கால் வரை பல நன்மைகள் கிடைக்குமாம்...!

2019 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வின்படி அஸ்வகந்தா மிக சிறந்த மூலிகையாக உடலில் செயல்படும் என கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் தினமும் 125-300 மி.கி அளவு அஸ்வகந்தாவை எடுத்துக்கொண்ட 60 பேருக்கு குறைவான அளவு மன அழுத்தம், நிம்மதியான தூக்கம், இரத்தத்தில் கார்டிசோல் அளவு குறைதல் போன்ற நல்ல முடிவுகளை இது தந்தது. ஹார்மோன் சமநிலையில் பாதிப்பு உள்ளோருக்கு இந்த அஸ்வகந்தா எப்படியெல்லாம் உதவும் என்பது இன்னும் ஆய்வில் உள்ளது.

இதே போன்று சேஸ்ட்டில்பெர்ரி மூலிகையும் ப்ரோலாக்டின் ஹார்மோன் அளவை சமநிலையில் வைக்க உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் கார்டிசோல், எஸ்ட்ராடியல், இன்சுலின் ஆகிய ஹார்மோன்களை சமநிலையில் வைக்க மார்ஜோரம் மூலிகை உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: