ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

க்ளூட்டன் ஒவ்வாமை பற்றி ஆயுர்வேதத்தில் சொல்லப்படுவது என்ன..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை...

க்ளூட்டன் ஒவ்வாமை பற்றி ஆயுர்வேதத்தில் சொல்லப்படுவது என்ன..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை...

க்ளூட்டன் ஒவ்வாமை

க்ளூட்டன் ஒவ்வாமை

கோதுமை பார்லி போன்ற உணவுகளை சாப்பிடுபவர்கள் ஒரு சிலருக்கு எளிதாக செரிமானம் ஆகாது. எனவே பெரிதாக மருத்துவ பிரச்சினைகள் இல்லை. இருந்தாலும் வயிறு கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது என்ற காரணத்தால் பலரும் இதை தவிப்பார்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பலருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்படும். ஒருசில உணவுகள் சாப்பிட்டால், சருமத்தில் அலர்ஜி, தடிப்பு மற்றும் எரிச்சல், ஃபுட் பாய்சனிங் ஆகியவை ஏற்படும். அவற்றில் ஒன்றுதான் க்ளூட்டன் இன்டாலரன்ஸ் என்று கூறப்படும் ஒவ்வாமையாகும். ஒரு சில தானிய வகைகளில் இருக்கும் இந்த க்ளூட்டன் என்ற இந்த காம்பவுண்ட்டை சிலரால் செரிமானம் செய்ய முடியாது. எனவே அது உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். சமீபகாலமாக அதிகரித்து வரும் இந்த ஒவ்வாமை பற்றி ஆயுர்வேதத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

க்ளூட்டன் என்றால் என்ன?

சமீப காலமாக க்ளூட்டன்-ஃப்ரீ டயட் என்பதை நீங்கள் அடிகடி கேட்டிருப்பீர்கள். எடை குறைக்க வேண்டும், கவனச்சிதறல் இருக்க கூடாது, நினைவாற்றல், வயிறு உப்புசம் இருக்கக் கூடாது என்று பல காரணங்களுக்காக க்ளூட்டன் இல்லாத உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற பழக்கம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. க்ளூட்டன் என்பது ஒரு வகையான புரதம். இது கோதுமை, பார்லி உள்ளிட்ட தானியங்களில் காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கோதுமை, மைதா கொண்டு தயார் செய்யப்படும் பெரும்பாலான உணவுகளில் குளூட்டன் இருக்கின்றது.

கோதுமை பார்லி போன்ற உணவுகளை சாப்பிடுபவர்கள் ஒரு சிலருக்கு எளிதாக செரிமானம் ஆகாது. எனவே பெரிதாக மருத்துவ பிரச்சினைகள் இல்லை. இருந்தாலும் வயிறு கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது என்ற காரணத்தால் பலரும் இதை தவிப்பார்கள். க்ளூட்டன் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு சீளியாக் நோய் ஏற்பட்டு அது உடலில் தீவிரமாக வெளிப்படும். ஆனால், உங்களுக்கு க்ளூட்டன் அலர்ஜி இல்லை என்றாலும், க்ளூட்டன் இருக்கும் தானியங்களை சாப்பிட்டால் உங்களுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை ஏற்படுகிறது என்றால் அது உளவியல் ரீதியான பிரச்சனை தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆயுர்வேத மருத்துவத்தில் உணவு :

பொதுவாக உணவு ஒவ்வாமை என்பதைத் தவிர்த்து, ஹோலிஸ்டிக் மருத்துவம் என்று கூறப்படும் பழங்கால மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் உணவுகள் என்பது உயிர்ச்சத்து; உணவுகள் என்பதை மருந்து, என்று கூறப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் க்ளூட்டன் இன்டாலரன்ஸ் என்ற ஒவ்வாமையை ஆயுர்வேதம் எப்படி பார்க்கிறது?

Also Read : வாய் துர்நாற்றம், பாக்டீரியாக்களை நீக்க உதவும் தேங்காய் எண்ணெய்..? எப்படி , எப்போது பயன்படுத்த வேண்டும்..?

ஆயுர்வேத உணவு முறையை பொறுத்தவரை, எந்த உணவாக இருந்தாலும் ஒவ்வொரு வேளையும் புதிதாக சமைத்து சாப்பிட வேண்டும். பருவ காலங்களுக்கு ஏற்ற உணவுகளை சாப்பிட வேண்டும். நீங்கள் வசிக்கும் இடத்தில் எந்தெந்த உணவுகள் அதிகம் விளைகிறதோ அதையே சாப்பிட வேண்டும் என்று தான் கூறுகிறது.

அதுமட்டுமில்லாமல், ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்றவாறு குளிர்ச்சியான தன்மை கொண்ட அல்லது வெப்பமான தன்மை கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். ஒவ்வாமை என்பது உடலின் சமநிலை மாற்றத்தால் ஏற்படும் என்பது ஆயுர்வேத மருத்துவத்தின் கூற்று. ஆனால் சமீப காலமாக அதிகரித்து வரும் க்ளூட்டன் ஒவ்வாமை ஆயுர்வேத மருத்துவத்தில் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தில் க்ளூட்டன் :

ஆயுர்வேத மருத்துவத்தைப் பொறுத்தவரை செரிமானப் பிரச்சனை என்றாலே, நம் உடலின் நெருப்பு ஆற்றல் சமமாக இல்லாததை தான் குறிக்கிறது. உடலால ஒரு சில உணவுகளை செரிமானம் செய்ய முடியவில்லை என்று வரும் பொழுதே உடலில் செரிமானத்திற்கு தேவையான அக்னி இல்லை என்று தான் பொருள். எனவே குளிர்ச்சியான உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது.

Also Read : இலவங்கப்பட்டை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துமா..? நிபுணர்கள் கருத்து

க்ளூட்டன் ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய நோய், உணவுக் குழாயை பாதிக்கும். எனவே ஒவ்வாமை இருப்பவர்களுக்கு வயிறு உப்பசம், செரிமான கோளாறு, மலச்சிக்கல், வாந்தி, சோர்வு, உடல் வலி, மூட்டு வலி, மந்த நிலை ஆகியவையும் ஏற்படக்கூடும்

க்ளூட்டன் கொண்ட தானியங்களுக்கு மாற்றாக பல விதமான சிறுதானியங்கள் உள்ளன. வரகு, கேழ்வரகு, பனிவரகு, குதிரைவாலி, திணை என்று வெவ்வேறு சிறுதானியங்களை பயன்படுத்தலாம். இது ஊட்டச்சத்து நிறைந்ததோடு மட்டுமல்லாமல் செரிமான கோளாறையும் தவிர்க்க உதவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Ayurvedic medicine, Digestion Problem