உலக அளவில், மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் டிமென்ஷியா நோய் 7ஆம் இடத்தை பிடித்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. வயதான மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படவும், உடல் குறைபாடுகள் ஏற்படவும் இது காரணமாக அமைகிறது.
முதலில் டிமென்ஷியா என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மூளையில் ஏற்படும் பாதிப்பு அல்லது மூளையில் ஏற்படும் காயம் போன்றவற்றால் ஏற்படும் குறைபாடு ஆகும். இது நம் சிந்தனைத் திறன், நினைவாற்றல் போன்றவற்றை பாதிக்கிறது. அல்சைமர் மற்றும் ஸ்டிரோக் ஆகிய பாதிப்புகளின் எதிரொலியாகவும் டிமென்ஷியா நோய் உண்டாகும்.
டிமென்ஷியாவுக்கு குறிப்பிட்ட மருத்துவம் எதுவும் தற்போது வரை இல்லை என்றாலும், இந்த நோய் பாதிக்காமல் தடுக்கவும், தீவிரத்தன்மை அடையாமல் கட்டுப்படுத்தவும் சிகிச்சைகள் உள்ளன. அவை என்னவென்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
நாளங்களின் ஆரோக்கியம் முக்கியம் :
நாளங்களில் ஏற்படும் நோய் என்பது நமது ரத்த குழாய்களை பாதிக்க கூடியதாகும். நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லக் கூடியதாக ரத்த குழாய்கள் உள்ளன. திசுக்களில் இருந்து கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதன் காரணமாக நாளங்களில் பாதிப்பு ஏற்படுகிறது.
also read : கொளுத்தும் வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள்!
உங்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டாலும் இந்தப் பாதிப்பு வரலாம். இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைப்பதாக இது அமைகிறது. நீரிழிவு நோய் காரணமாகவும் ரெடினோபதி என்னும் கண் பாதிப்பு, நெப்ரோபதி என்னும் சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படும். இதயத்துடன் தொடர்பு உள்ளவை என்பதால் நாளங்களின் ஆரோக்கியத்தை கடைப்பிடிப்பது மிக முக்கியமாகும்.
also read : உங்கள் மெட்டாபாலிசத்தை தெரிந்துகொண்டால் உடல் எடையை சீக்கிரமே குறைத்துவிடலாம் : எப்படி தெரியுமா..?
எதனால் ஏற்படுகிறது?
டிமென்ஷியா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மூளைக்கான ரத்த விநியோகம் பாதிக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்பாடான அளவை தாண்டி இருப்பது இந்த நோய் பாதிப்பு ஏற்பட காரணமாகும். நாளங்களில் லேசான பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, நாளடைவில் நம் மூளைக்கான ரத்த விநியோகத்தை அது பாதிக்கும். இறுதியாக டிமென்ஷியா பாதிப்பு ஏற்படலாம்.
பாதிப்பை எப்படி கட்டுப்படுத்துவது?
புகை பிடிக்க கூடாது. மது அருந்தும் பழக்கம் இருந்தால் மிதமான அளவில் கட்டுப்படுத்த வேண்டும். உடல் ரீதியாக, மன ரீதியாக நல்ல சுறுசுறுப்புடன் செயலட வேண்டும். சீரான உணவு பழக்க வழக்கம் முக்கியமானது. உடலில் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். வயது அதிகரிக்கும் சூழலில், நமது மூளை நலன் குறித்து நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dementia Disease