Fatigue syndrome : நாள் முழுவதும் சோர்வாகவும், தூக்கம் தூக்கமாகவும் வருகிறதா?  என்ன காரணம்..சிகிச்சை முறைகள் என்ன..? 

Fatigue syndrome : நாள் முழுவதும் சோர்வாகவும், தூக்கம் தூக்கமாகவும் வருகிறதா?  என்ன காரணம்..சிகிச்சை முறைகள் என்ன..? 

மாதிரி படம்

சோர்வின் நிலையான உணர்வு உண்மையில் ஒரு நோய்க்குறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

  • Share this:
சோர்வு என்பது பெரும்பாலும் மோசமான ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு குறைவது மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றாலும், சோர்வின் நிலையான உணர்வு உண்மையில் ஒரு நோய்க்குறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆங்கிலத்தில் Chronic fatigue syndrome என்றழைக்கப்படும் நாள்பட்ட சோர்வு நோய்க்குறி நிரந்தர மற்றும் நிலையான சோர்வுக்கு வழிவகுக்கிறது. இது ஒரு சிக்கலான கோளாறு ஆகும். மேலும் இந்த பிரச்சனை ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்கும் போது தீவிர சோர்வு நிலைக்கு வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் 30 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இந்த வகையான அசதி அதிகமாக வருகிறது. இந்த வகை சோர்வு உடல் மற்றும் மன செயல்பாடுகளை மிகவும் மோசமாக்கும். மேலும் ஓய்வெடுப்பதன் மூலம் நாள்பட்ட சோர்வு நோய்க்குறியை சமாளிப்பது கடினம். ஆனால் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலமும் சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலமும் சிகிச்சையளிக்க முடியும்.

நாட்பட்ட சோர்வு நோய்க்குறியைக் கையாள்வதற்கான சிறந்த வழிகள்:

1. நல்ல உறக்கம் :

நாள்பட்ட சோர்வு நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட சிலர் மோசமான தூக்கம் மற்றும் தூக்கமின்மையால் கூட பாதிக்கப்படுகின்றனர். உங்கள் உடலுக்கு சரியான ஓய்வு கிடைக்காத போது, நீங்கள் சோர்வாகவும் அசதியாகவும் உணருவது இயற்கையானது. எனவே, நாள்பட்ட சோர்வு நோய்க்குறிக்கு சிகிச்சையளிக்க, முதலில், நீங்கள் உங்கள் தூக்க அட்டவணையை சரிசெய்ய வேண்டும். சரியான உறக்கம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வழிவகுக்கும். தேவைப்பட்டால், ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.



2. வைட்டமின் டி ஊட்டச்சத்து:

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் காணப்படும் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளில் வைட்டமின் குறைபாடு ஒன்றாக இருக்கிறது. இது பல்வேறு செயல்பாடுகளுக்காக உடலுக்குத் தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நாள்பட்ட சோர்வு நோய்க்குறிக்கு சிகிச்சையளிப்பதில் மற்றும் உங்கள் ஆற்றல் அளவை அதிகரிப்பதில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் உணவில் அதிக வைட்டமின் டி சேர்த்துக் கொள்ளுங்கள் மற்றும் நோய்க்குறியை கட்டுப்படுத்த சிறிது நேரத்திற்கு சூரிய ஒளியை பெறுவது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

3. உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள்

நம் உடலுக்கு ஆற்றலின் முதன்மை ஆதாரமாக விளங்குவது உணவு. நீங்கள் நாள்பட்ட சோர்வு நோய்க்குறியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கொழுப்பு, வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிட கூடாது. சர்க்கரை உட்கொள்ளலை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

வேலை, குடும்பம் இரண்டையும் பேலன்ஸ் செய்வதோடு ஃபிட்னஸையும் கவனிக்கும் கமலா ஹாரிஸ் : ஜாகிங் செய்த வீடியோ வைரல்

4. உடற்பயிற்சி

உடற்பயிற்சி உங்கள் ஆற்றலை வெளியேற்றுவதாக அறியப்பட்டாலும், அது உண்மையில் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்தது. காலப்போக்கில் உங்கள் உடலில் வலிமையையும் சக்தியையும் உருவாக்க உடற்பயிற்சிகள் உதவும். நாள்பட்ட சோர்வு நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி சிகிச்சை உதவும். உடலை எளிதில் சரிசெய்ய உதவும் வகையில் உங்கள் உடற்பயிற்சியின் தீவிரத்தையும் இயக்கங்களையும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.



சில இயற்கை வைத்தியங்கள்:

வீட்டில் இருக்கும் சில மருத்துவ குணம் மிகுந்த பொருட்களை கொண்டு இந்த நாள்பட்ட நோய்க்குறியை குணப்படுத்தலாம். அந்த வகையில் வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய சில கஷாயங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

* சிறிதளவு கிராம்பு, நிலவேம்பைச் சம அளவு எடுத்துத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்தக் கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு குறையலாம்.

* ஒரு டம்ளர் அன்னாசிப் பழச் சாற்றுடன் மிளகுத் தூள் சேர்த்துத் தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையலாம்.

*கேரட்டைச் சுத்தம் செய்து அரைத்துச் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தச் சாற்றில் பத்து மிளகு, தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் உடல் அசதி குறையலாம்.

* இந்துப்பு, மிளகு, பொடுதலைக் காய், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒரு அவுன்ஸ் வீதம் அருந்திவந்தால் உடல் அசதி குறையும் என இயற்கை வைத்தியம் சொல்கிறது.

 

 

 
Published by:Sivaranjani E
First published: