• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்கள் மனம் உடைவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? எப்படி சரிசெய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்..

உங்கள் மனம் உடைவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? எப்படி சரிசெய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

What Is Broken Heart Syndrome : பொதுவாக இப்படிப்பட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுவதை சில அறிகுறிகளின் மூலம் கண்டறியலாம்.

  • Share this:
உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு மன ஆரோக்கியமும் மிக முக்கியமானதாகும். ஆனால், பெரும்பாலானோர் மன ஆரோக்கியத்தை பற்றி கண்டு கொள்வதில்லை. இதனால் ஏராளமான பாதிப்புகள் உண்டாகுகிறது. இதை உளவியல் ரீதியான பாதிப்புகள் என்று சொல்லலாம். பல நேரங்களில் அதிக மன அழுத்தம், இதய பாதிப்பு, உளவியல் பிரச்சனைகள், இதய நோய்கள் ஆகியவற்றின் காரணமாக நமது மனம் உடைவது போன்ற உணர்வு ஏற்படும்.

இதை ப்ரோக்கன் ஹார்ட் சிண்ட்ரம் (Broken Heart Syndrome) என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடுகின்றனர். இந்த நோயானது ஒரு தற்காலிகமான, மீளக்கூடிய இதய நோயாகும். இது இதயத் தடுப்பு போன்ற அறிகுறிகளால் ஏற்படுகிறது. இந்த அறிகுறியானது மாரடைப்பு போல் இல்லாமல், திடீரென்று உடல் அல்லது மன அழுத்தத்தால் ஏற்படுகின்ற ஒருவித தூண்டல், உங்கள் இதய தசையை வேகமாக பலவீனப்படுத்தும் போது இந்த ப்ரோக்கன் ஹார்ட் சிண்ட்ரம் உங்களுக்கு உண்டாகுகிறது. இப்படியான அறிகுறிகள் பற்றிய பல ஆய்வுகள் தற்போதும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதய தசைகள் பலவீனமாகுதல்: அதிக மன அழுத்தம் அல்லது உடல் அழுத்தத்திற்கு ஆளானவர்களுக்கு 'தகோட்சுபோ சிண்ட்ரம் (Takotsubo syndrome) என்கிற நோய் அறிகுறி ஏற்படும். இருப்பினும், சிலருக்கு இது எப்படி உண்டாகுகிறது என்பதற்கான காரணம் எதுவும் இல்லை. உடலில் ஏற்படும் அழுத்தத்தால் நமது உடல் இயற்கையாகவே அட்ரினலின் மற்றும் நோரட்ரினலின் போன்ற ஹார்மோன்களையும், புரோட்டினையும் வெளியேற்றம் செய்து இது போன்ற நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

also read : காதல் உறவில் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்களா..? இந்த 5 அறிகுறிகளை கவனியுங்கள்

அதிக அளவில் அட்ரினலின் ஹார்மோன் சுரந்தால் அவை இதய தசைகளுக்கு அதிக அழுத்தத்தை உண்டாக்கும். அதாவது அதிகமாக வெளியேறும் அட்ரினலினால் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் சிறிய தமனிகள், அதன் இரத்த ஓட்டத்தை குறைத்து கொள்ளும். இப்படிப்பட்ட நிலையில் தான் ஒருவருக்கு மனம் உடைதல் போன்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த நிலை ஒரு சில நாட்கள் அல்லது சில வாரங்களில் சரியாகி விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்: பொதுவாக இப்படிப்பட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுவதை சில அறிகுறிகளின் மூலம் கண்டறியலாம். மார்பு பகுதியில் அசௌகரியம் கொண்ட உணர்வு, மூச்சு விடுவதில் சிக்கல், மயக்கம் போன்ற அறிகுறிகளால் தெரிந்து கொள்ளலாம். இப்படி யாருக்காவது இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

எப்படி இது வராமல் தவிர்ப்பது?ஒரு முறை உங்களுக்கு ப்ரோக்கன் ஹார்ட் சிண்ட்ரம் வந்து விட்டால் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு இரண்டாவது முறையாக வராமலும் போகலாம். இதை மருந்துகளின் மூலமாகவும், இதய நல சிகிச்சைகளின் மூலமும் குணப்படுத்த முடியும். உங்களுக்கு ஏற்படுகின்ற மன அழுத்தத்தை நீங்களே கையாள கற்று கொண்டால் இது போன்ற மனநிலை பாதிப்புகள் ஏற்படாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: