Home /News /lifestyle /

பிரெயின் ஸ்ட்ரோக் என்றால் என்ன..? அறிகுறிகள் மற்றும் காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்..

பிரெயின் ஸ்ட்ரோக் என்றால் என்ன..? அறிகுறிகள் மற்றும் காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

Brain Stroke : கடும் அச்சுறுத்தலாக இருக்கும் மூளை பக்கவாதத்திற்கு ஒருவரது அன்றாட வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் முக்கிய காரணம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தொற்றாத நோய்களில் உலகளவில் இறப்புக்கான மிக முக்கிய காரணமாக இருக்கின்றது பிரெயின் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை பக்கவாதம். உலகளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கானோர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மடிகின்றனர்.இந்தியாவில் ஒவ்வொரு 40 வினாடிகளிலும் ஒருவருக்கு ஸ்ட்ரோக் ஏற்படுவதாகவும், இதில் நான்கில் ஒரு பகுதியினர் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்னும் அதிர்ச்சி டேட்டாக்களும் உள்ளன.

மூளை பக்கவாதம் என்றால் என்ன?

பிரெயின் அட்டாக் என அழைக்கப்படும் இந்த ஸ்ட்ரோக் மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் திடீரென தடைபடும் போது ஏற்படுகிறது. அதாவது மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டு, இயங்குவதற்கு போதுமான சக்தி இல்லாமல் மூளையின் செல் தசைகள் பாதிக்கப்படுவது அல்லது முற்றிலும் சேதமடையும் போது இது நிகழ்கிறது. இதன் போது மூளை திசுவானது தனக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல் போகிறது.

இதன் விளைவாக நீண்டகால இயலாமை சில நேரங்களில் மரணம் ஏற்படுகிறது. மூளை செல்கள் தொடர்ந்து இறக்கும் சூழலில் மூளையின் சில பகுதிகளால் கட்டுப்படுத்தப்படும் திறன்களையும் ஒருவர் இழக்க நேரிடுகிறது. எனவே உடல் உறுப்புகள் செயலிழந்து போவது அல்லது மரணம் ஏற்படுவதை தவிர்க்க சரியான நேரத்தில் சிகிச்சை அல்லது நோயறிதல் செய்யப்பட வேண்டும். அதுவும் கோல்டன் பீரியட் என்றழைக்கப்படும் 3 -4 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களை உரிய சிகிச்சைக்கு அழைத்து சென்று விட்டால் அவர்களை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகரிக்கும்.

அதே போல பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவரை அடையாளம் காண உதவும் அறிகுறிகளின் சுருக்கம் BE FAST என குறிப்பிடப்படுகிறது. இதில் B - பேலன்சை இழப்பது, E - பார்வையில் பிரச்சனை, F - முகம் இழுத்து கொள்வது, A - கைகளில் பலவீனம், S - பேசுவதில் சிக்கல், T - நேரம் முக்கியம் என குறிப்பிடப்படுகிறது.இந்தியாவில் விழிப்புணர்வு :

Boehringer Ingelheim India சமீபத்தில் "The State of Stroke" என்ற தலைப்பிலான சர்வேயை நடத்தியது. இதில் பங்கேற்றவர்கள் சுமார் 70% பேர் மட்டுமே பிரெயின் ஸ்ட்ரோக் என்ற சொல் தெரியும் என்று கூறியுள்ளனர். மேலும் மூளை பக்கவாதத்தின் ஆபத்து காரணிகள் மற்றும் அறிகுறிகளைப் பற்றி 20% பேருக்கு மட்டுமே தெரியும் என்பதையும் இந்த சர்வே வெளிப்படுத்தி உள்ளது.

also read : டிமென்ஷியாவில் இருந்து தப்பிக்க இந்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும்...

எப்படி தடுப்பது?

கடும் அச்சுறுத்தலாக இருக்கும் மூளை பக்கவாதத்திற்கு ஒருவரது அன்றாட வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் முக்கிய காரணம். ஆரோக்கியமற்ற பழக்கங்கள் மற்றும் அலட்சியம் காரணமாகவும், மரபணு ரீதியாகவும் பக்கவாதத்திற்கு தெற்காசியர்கள் எளிதில் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க ஆரோக்கிய வாழ்க்கை முறை உதவியாக இருக்கும் என்கின்றனர்.அபாயத்தை குறைக்க எது உதவும்?

உப்பு நிறைந்த உணவுகளை குறைத்து கொள்வது, புகையிலை பயன்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பது, மது குடிப்பதை கட்டுப்படுத்துவது, தினசரி உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்டவை வாழ்க்கை முறை பழக்கங்கள் ஸ்ட்ரோக் அபாயத்தை கணிசமாக குறைக்க உதவும். மன அழுத்தத்தை தவிர்ப்பதும் முக்கியமான ஒன்று.

ஸ்ட்ரோக்கிற்கு பிறகு..

பக்கவாதத்தில் இருந்து மீளுவோருக்கு மருத்தவர்களின் ஆலோசனைகளை பின்பற்றுவது இன்றியமையாதது. மருந்துகளை தவறாமல் சாப்பிடுவதோடு பழையபடி உடல் செயல்பாடுகளில் ஈடுபட படிப்படியாக முயற்சிக்க வேண்டும். மனதளவில் நோயிலிருந்து மீள நோயாளிகளை கவனித்து கொள்வோரின் அக்கறையும், கனிவும் குணமடையும் கட்டத்திற்கு பெரிய அளவில் உதவும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Brain Health

அடுத்த செய்தி