ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Body Contouring சிகிச்சை பற்றி தெரியுமா..? இதன் சாதக , பாதகங்களை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்..!

Body Contouring சிகிச்சை பற்றி தெரியுமா..? இதன் சாதக , பாதகங்களை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உடல் திருத்த சிகிச்சைக்கு பிறகு உங்கள் உடல் இயங்குவதற்கு மிகுந்த சிரமம் அடையலாம். மருத்துவர் உங்களுக்கு பூரண குணமடைந்துவிட்டதாக ஒப்புதல் அளிக்கும் வரையில் கடினமான காரியங்களை செய்ய வேண்டாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் உடல் கொஞ்சம் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்ற பலவித கற்பனைகளுடன் நீங்கள் ஏங்கியது உண்டா? இந்த இடத்தில் சதை மிகுதியாக உள்ளது. அதை கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பாட்டாலும், அது மாறவில்லையே என்ற கவலை இருக்கிறதா?உங்களுக்கான தீர்வை தரக் கூடியதாக Body Contouring என்ற சிகிச்சை முறை இருக்கிறது. அதாவது, நம் உடலில் சதை மற்றும் கொழுப்பு மிகுதியாக இருக்கிறது என்று நாம் கருதுகின்ற இடங்களில், அவற்றை கொஞ்சம் குறைத்து பொலிவான தோற்றத்தை ஏற்படுத்துவதுதான் இந்த சிகிச்சையின் அடிப்படையாகும்.

அதாவது, உடலை திருத்தி அமைக்கும் சிகிச்சை முறை என்று சொல்லலாம். இன்னும் புரியும்படி சொல்வதென்றால் ஒரு கல்லையோ, மரத்தையோ செதுக்கி அழகிய வடிவமாக சிற்பி மாற்றுவதைப் போல, அறுவை சிகிச்சை மூலமாக அல்லது அறுவை சிகிச்சை இல்லாமலும் உடலை செதுக்கும் நடவடிக்கை என்றே குறிப்பிடலாம்.தொளதொளவென்று இருக்கும் சதைப் பகுதிகள் மற்றும் கொழுப்பை குறைக்க வேண்டும் என்று எவ்வளவோ உடற்பயிற்சி செய்தும், அது முடியவில்லை என்றால், இத்தகைய சிகிச்சை உங்களுக்கு பலன் அளிக்கும்.

Read More : பெண்களே உஷார்.! சானிட்டரி நாப்கினால் புற்றுநோய்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

உடல் திருத்த சிகிச்சையின் பலன்கள் என்ன?

உடல் எடை வேகமாக குறையும் :

நம் வயிறு, தொடை போன்ற பகுதிகளில் மிகுதியாக உள்ள கொழுப்பு மற்றும் அளவுக்கு மீறி வளர்ச்சி அடைந்துள்ள சதைப்பகுதிகளை உடல் திருத்த சிகிச்சையின் மூலமாக மாற்றி அமைக்க முடியும் என்பதால் உடல் எடை கொஞ்சம் குறையும் என்பது உண்மை தான். ஆனால், இதே பலனை நீடித்த அளவில் பெறுவதற்கு ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை அவசியம்.

பாதுகாப்பான தொழில்நுட்பம் :

ஒவ்வொரு நாளும் பல விதமான தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், உடல் திருத்த சிகிச்சை என்பது பாதுகாப்பானது தான். அறுவை சிகிச்சை செய்து கொள்வதென்றால், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடம் செய்து கொள்ள வேண்டும்.

வலியற்ற சிகிச்சை மற்றும் நீடித்த பலன் :

செய்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப்போல உடலை செதுக்குவது என்றால் உரித்து எடுத்து விடுவார்கள் என்ற அச்சம் வேண்டாம். லைட், இன்ஃப்ராரெட், எல்இடி போன்றவை மூலமாக மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சையால் எந்தவித வலியும் ஏற்படாது. வெதுவெதுப்பான உணர்வு தோன்றும். அதே சமயம், நீண்ட காலத்திற்கு இதன் பலன்களை நீங்கள் அனுபவிக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி அவசியமாகும்.

உடல் திருத்த சிகிச்சையின் பக்கவிளைவுகள் :

வடு மற்றும் புண் : உடல் திருத்த சிகிச்சையால் ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகளில் ஒன்று உடலில் வடு தோன்றுவதாகும். உடல் திருத்த சிகிச்சை காரணமாக உடலில் ஆங்காங்கே ஏற்படக் கூடிய புண்கள் அவ்வளவு எளிதில் ஆறாது.
ரத்தக்கசிவு : உடலின் உட்புறப் பகுதிகளில் ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பொதுவாக மிகுதியான ரத்தம் முழுவதுவாக வடிந்துவிடும். ஆனால், அப்படி நிகழாத பட்சத்தில் கூடுதலாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம்.
அதிக சிரமம் : உடல் திருத்த சிகிச்சைக்கு பிறகு உங்கள் உடல் இயங்குவதற்கு மிகுந்த சிரமம் அடையலாம். மருத்துவர் உங்களுக்கு பூரண குணமடைந்துவிட்டதாக ஒப்புதல் அளிக்கும் வரையில் கடினமான காரியங்களை செய்ய வேண்டாம்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Weight loss