இந்த ஆண்டு ஆஸ்கர் விருது நிகழ்வில் எந்தத் திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைத்தது என்பதை கடந்து ஆஸ்கர் 2022 என்றாலே மறக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் சம்பவம் பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம். ஆஸ்கர் விருது தொகுப்பாளர் கிரிஸ் ராக் ஹாலிவிட் நடிகர் வில் ஸ்மித் மனைவியின் தோற்றம் குறித்து கிண்டல் செய்ததால், மேடையிலேயே வில் ஸ்மித் அவரை கன்னத்தில் அறைந்தார்.
வில் ஸ்மித் மனைவி ஜடா பின்க்கெட் ஒரு உடல்நலக் குறைபாடு காரணமாக முடி முழுவதையும் இழந்துள்ளார். அதை வேடிக்கையாக குறிப்பிட்டது கோபத்தை கிளப்பியுள்ளது. ஒரு நபரை பொது எவ்வளவு தூரம் நீங்கள் செய்யலாம் என்பதற்கு ஒரு வரையறை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இந்த நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது. இதைக் கடந்து வில் ஸ்மித்தின் மனைவிக்கு ஏற்பட்டுள்ள இந்த குறைபாடு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
பொதுவாக திடீரென்று தலையில் முடியில்லாமல் ஒருவர் மொட்டை தலையுடன் காட்சி அளிக்கும் பொழுது, மூளையில் ஏதாவது மூளை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும் அல்லது கேன்சரால் முடி இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றுதான் பரவலாக நினைக்கிறார்கள். ஆனால் அதைக் கடந்து அலோபேசியா என்ற ஒரு தீவிரமான நோயும் முடியை மொத்தமாக இழக்கச் செய்துவிடும் இதை பற்றி ஜடாவே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு முதல் மன அழுத்தம் வரை பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தீவிரமான முடிவு என்பது பரவலாக அதிகரித்து வருகிறது. ஜடா பின்க்கெட்டை பாதித்த நோய்க்குப் அலோபேசியா. இது ஏன் ஏற்படுகிறது மற்றும் தடுப்பதற்கான சிகிச்சை முறைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
View this post on Instagram
அலோபேசியா என்றால் என்ன
அலோபேசியா ஏரியாட்டா என்பது ஒரு பொதுவான ஆட்டோ இம்யூன் நோய் என்றும், தீவிரமான முடி உதிர்வை ஏற்படுத்தும் என்றும் அறியபப்டுகிறது. அலோபேசியா பாதிப்பால் திட்டு திட்டாக, கொத்தாக முடி உதிர்வதை கண்கூடாக பார்க்க முடியும். சில சமயங்களில், இது திட்டுக்களாக வழுக்கையை உண்டாக்கும்.
நீங்கள் மெனோபாஸ் காலத்தை நெருங்கிவிட்டீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 6 அறிகுறிகள்
அலோபேசியா ஏரியாட்டா ஆண், பெண் இருவரையும் பாதிக்கிறது, அதே போல எல்லா வயதினரையும் தாக்கும். 30 வயதிற்கு முன்பே இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பலர் உள்ளனர். அலோபேசியாவால் பாதிக்கப்படுபவர்களில் ஐந்தில் ஒருவருக்கு, அதே போல பாதிக்கப்பட்ட குடும்ப நபர் ஒரு இருப்பார். அதாவது, இது பரம்பரை ரீதியாக ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம். மன அழுத்தத்தின் விளைவு என்று பொதுவாக பலர் கூறுகிறார்கள், இருப்பினும், அறிவியல் பூர்வமான விளக்கம் எதுவும் இல்லை.
அலோபேசியாவின் அறிகுறிகள்,
அலோபேசியா ஒரு ஆட்டோ-இம்யூன் குறைபாடு என்பதால், இதற்கு மருத்துவ சிகிச்சை இல்லை. முடி விரைவாக வளர உதவும் வழிகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இதைப் பற்றிய மருத்துவ ஆய்வுகளின் படி, கார்டிகோஸ்டீராய்டுகள் ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alopecia, Will Smith