சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். மூக்கடைப்பு, தலைவலி, மற்றும் தலை பாரமாக உணரக்கூடும். நீர் கோர்த்துக் கொள்வது என்று பொதுவாக கூறப்படுவது சைனஸ் பிரச்சனையைக் குறிக்கும். சைனஸ் என்றால் என்ன? இந்த பிரச்சனை ஏன் ஏற்படுகிறது, இதற்கான சிகிச்சை, தடுப்பது எப்படி ஆகியவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சைனஸ் என்றால் என்ன..?
சைனஸ் என்பது முகம் மற்றும் மண்டை ஓட்டின் எலும்புகளில் உள்ள காற்று துவாரங்களைக் குறிக்கும். இந்த சைனஸ்கள் இரண்டு கண்களுக்குக் கீழேயும், நெற்றியில் கண்களுக்கு மேலேயும், இரண்டு கண்களின் நடுவிலும், மூக்கின் பின்பகுதியிலும் அமைந்துள்ளன. சைனஸ்கள் மண்டை ஓட்டின் எடையைக் குறைக்கின்றன. இந்த சைனஸ் என்று கூறப்படும் எலும்பின் பகுதிகள் வீங்குவது (inflammation) சைனசிடிஸ் என்று அழைகப்படுகிறது.
சைனசில் நான்கு வகைகள் உள்ளன: மேக்சில்லரி, எத்மாய்டு, ஃப்ரண்டல் மற்றும் ஸ்பெனாய்டு. ஒவ்வொரு சைனசிற்கும் மூக்கின் உள்ளே கதவுகள் போல சிறிய ஒப்பனிங் திறக்கப்படுகின்றன. இந்த சைனஸ்கள் தொடர்ந்து 'மியூகஸ்' எனப்படும் மெல்லிய சுரப்பை உருவாக்குகின்றன. சைனஸால் உற்பத்தி செய்யப்படும் சளி முதலில் மூக்கிற்குள் நுழைகிறது, பின்னர் நாசி வழியாக தொண்டைக்குள் நுழைகிறது.
இந்த செயல் அனைத்துமே நாம் அறியாமலே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில காரணங்களால் சைனஸில் உற்பத்தி செய்யப்படும் சுரப்பு அதிகரித்தால், சுரப்பு மூக்கு வழியாக தொண்டைக்கு செல்ல முடியாது மற்றும் நாசி வழியாக பாய ஆரம்பிக்கும். அதாவது, அதிகமாக மியூக்கஸ் உற்பத்தியாகும் போது, அது மூக்கில் சளியாக வெளிவருவது, தொண்டை வலி, கண்களில் நீர் வடிவது உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படும்.
சைனஸ்கள் மிகவும் மெல்லியதாகி, நாசிப் பாதையில் திரவமாக வெளியேறினால், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய நோய்த்தொற்றுக்குப் பிறகு, மூக்கின் வழியாக ஓடும் நீர் கெட்டியாகி வெளியேறத் தொடங்குகிறது. மூக்கடைப்பு ஏற்பட்டு சுவாசிப்பதில் சிரமம் உண்டாகிறது. இது தான் சைனசிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. நம் நாட்டில், லட்சக்கணக்கான மக்கள் சைனசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உஷார்... வெள்ளைப்படுதல் இந்த நிறங்களில் இருந்தால் அது தொற்றாக இருக்கலாம்...
சைனஸின் அறிகுறிகளுக்கும் ஜலதோஷத்தின் அறிகுறிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அவ்வளவு எளிதாகக் கூற முடியாது. பொதுவாக ஜலதோஷம் ஏற்பட்டால், அது ஒரு அதிகப்படியாக ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்குள் சரியாகி விடும். ஆனால், ஜலதோஷம் குறையவில்லை என்றால், அல்லது அடிக்கடி ஜலதோஷம் ஏற்பட்டால், அது சைனஸ் பிரச்சனையாக இருக்கலாம். சைனஸ் தீவிரமாக மாறாமல் இருக்க நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை மற்றும் மருந்துகள் பெறுவது அவசியம்.
மூக்கு ஒழுகுதல், மூக்கில் அடைப்பு, கடுமையான தலைவலி, அதிக காய்ச்சல், தொடர் இருமல் மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை சைனசிடிஸின் அறிகுறிகளாகும். இவற்றை விட அதிகமான பிரச்சனைகளை உண்டாக்கினால், அது சைனசிடிஸ் நோயின் தீவிரமாகி உள்ளதைக் குறிக்கிறது.
சைனஸ் பாதிப்பின் வகைகள்
சைனசின் தீவிரத்தைப் பொறுத்து, நோய் கடுமையானது, சப்அக்யூட் மற்றும் நாள்பட்டது என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
தேன் சாப்பிட்டால் உடல் எடையை குறைகிறதா? இதோ தேன் ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக...
நாட்பட்ட சைனசிடிஸ்
கடுமையான சைனசிடிஸ் என்பது முகத்தின் கனமாக உணர்தல், முகம் மற்றும் கன்னங்கள் வீக்கம், முன்னோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ வளைந்திருக்கும் போது தலை மற்றும் கன்னங்களில் வலி, மேல் பற்கள் இறுகுதல் ஆகிய அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது.
சைனஸ் பிரச்னை மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்தால், அதை மருத்துவ ரீதியாக 'க்ரானிக் சைனசிடிஸ்' என்பார்கள். முகம் தொடர்ந்து பாரமாக இருப்பது போல உணர்வு, புத்துணர்வாக இல்லாமல் இருப்பது, நாட்பட்ட மூக்கடைப்பு, ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
அடிக்கடி பாதிப்பு ஏற்படுத்தும் சைனசிடிஸ்
சிலருக்கு 'ரிகரன்ட் சைனசிடிஸ்' எனப்படும் சைனஸ் தொந்தரவு மீண்டும் மீண்டும் வரும். இது ஒவ்வொரு 2-3 மாதங்களுக்கும் ஏற்படும். மேலும், ஒரு முறை பாதிப்பு, குறைந்தது 10 நாட்களுக்கு நீடிக்கும். சைனஸ் அறிகுறிகள் ஒவ்வொரு முறையும் தீவிரமாக மாறும்.
வளைந்த நாசியினால் சைனஸ் பாதிப்பு ஏற்படலாம்
ஒரு சிலருக்கு இயற்கையாக அமைந்திருக்கும் வளைந்த நாசிப் பாதைகளும் சைனஸ் பிரச்சனைகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். நாசிப் பாதைகள் செப்டம் என்று கூறப்படும். அனைவருக்குமே இது ஒரு பக்கமாக சிறிய அளவில் வளைந்திருக்கும். யாருக்குமே இந்த செப்டம் நேராக இருக்காது. இந்த இரு நாசித் துவாரங்களையும் பிரிக்கும் சவ்வு குருத்தெலும்பு மற்றும் எலும்பினால் ஆனது. எனவே எந்த பிரச்சனையும் இல்லை என்றால், கவலைப்பட எந்த காரணமும் இல்லை.
மார்பகப் புற்றுநோய் எப்படி உருவாகிறது..? காரணங்களும்... அறிகுறிகளும்...
சில சமயம் இயற்கையாகவோ அல்லது விபத்தாலோ மூக்கு வளைந்திருந்தால், மூக்கு வளைந்திருக்கும் பக்கத்தில் மட்டும் சுவாசம் தடைபடும். வளைந்த நாசிப்பாதை இருக்கும் பக்கத்திலுள்ள சைனஸில் தொற்று ஏற்பட்டு சரியாக சுவாசிக்க முடியாமல் போகும். இதனால் தூக்கத்தில் குறட்டை உண்டாகும். மூக்கில் இருந்து ரத்தம் வரும். காதுகளில் நீர் வடிதல், தற்காலிக காது கேளாமை, காது கேட்பதில் குறைபாடு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே சிகிச்சை. செப்டோபிளாஸ்டி அறுவை சிகிச்சை அல்லது சப்மியூகஸ் ரிசெக்ஷன் அதாவது SMR அறுவை சிகிச்சை மூக்கின் வளைந்த பகுதியில் செய்யப்படுகிறது.
சைனஸ் பிரச்சனைக்கான நிவாரணங்கள்
சைனசிடிஸ் ஒரு பொதுவான நோய் என்றாலும், அது தீவிரமானால் இயல்பு ஆபத்தானது. எனவே, சரியான நேரத்தில் சரியான சிகிச்சை பெற வேண்டியது அவசியம். எனவே, அடிக்கடி உங்களுக்கு சளி பிடித்தால், அது விரைவில் குணமடையாமல் போனால், மேலே குறிப்பிட்ட மற்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headache, Migraine Headache, Sinus