ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Pancreatic Cancer : கணைய புற்றுநோய் என்றால் என்ன..? அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்..!

Pancreatic Cancer : கணைய புற்றுநோய் என்றால் என்ன..? அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்..!

கணைய புற்றுநோய்

கணைய புற்றுநோய்

நமது மலத்தின் நிறம் மாறுவதுதான் கணைய புற்றுநோயின் பிரதான அறிகுறி ஆகும். அதாவது, புற்றுநோய் ஏற்பட்டவுடன் கணையத்தில் பைல் திரவம் சுரப்பது தடுக்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புற்றுநோய்களில் பல வகை உண்டு என்றாலும் அவற்றில் ஒருசில வகை உயிருக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை ஆகும். அது மாதிரியான புற்றுநோய்களில் ஒன்றுதான் கணைய புற்றுநோய். இந்த நோய் தாக்கிய ஆரம்ப கட்டத்திலேயே நம் உடலில் மிகத் தீவிரமான அறிகுறிகளை காட்டத் தொடங்கும்.

குறிப்பாக, அதிகாலையில் நாம் முதல் வேளையாக மேற்கொள்ளும் மலம் கழிக்கும் விஷயத்திலேயே இதற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம். வெகு விரைவாக அறிகுறிகளை நாமே கண்டுபிடித்து விட்டால் உயிர் ஆபத்தை தவிர்க்க முடியும்.

கணைய புற்றுநோய் என்றால் என்ன..?

நமது அடி வயிற்றுப் பகுதியில் தான் இந்த கணையம் இருக்கிறது. இதன் திசுக்கள் மீது புற்றுநோய் வளரத் தொடங்குவதையே கணைய புற்றுநோய் என்று குறிப்பிடுகின்றனர். நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கு தேவையான திரவத்தை இந்த கணையம் தான் உற்பத்தி செய்கிறது.

அத்துடன் வெகுஜன மக்களை ஆட்டிப் படைக்கும் சர்க்கரை நோயை தடுப்பதிலும் கணையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. கணையத்தில் சுரக்கும் இன்சுலின் தான் நமது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது.

இன்சுலின் சுரப்பு குறையும் பட்சத்தில் ரத்த சர்க்கரை அதிகரிக்கிறது. அதைத்தான் நீரிழிவு நோய் எனக் குறிப்பிடுகின்றனர்.

மலத்தின் நிறம் மாறக் காரணம் என்ன..?

நமது மலத்தின் நிறம் மாறுவதுதான் கணைய புற்றுநோயின் பிரதான அறிகுறி ஆகும். அதாவது, புற்றுநோய் ஏற்பட்டவுடன் கணையத்தில் பைல் திரவம் சுரப்பது தடுக்கப்படும். இதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும். இதைத்தொடர்ந்து மலம் வெளிறிய நிறத்தில் இருக்கும். கண்கள், சருமம், சிறுநீர் ஆகியவை மஞ்சள் நிறம் தென்படும். குறிப்பாக சருமத்தில் அரிப்பு ஏற்படும்.

Also Read : இளைஞர்கள் இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம் : ஏன் தெரியுமா..?

இந்த அறிகுறிகளை கவனிக்கவும்..!

மலம் நிறமின்றி வெளிறிய நிலையில் இருப்பதுதான் கணைய புற்றுநோய்க்கான பிரதான அறிகுறி ஆகும். சில சமயம் மலம் மிகுந்த துர்நாற்றத்துடன் வெளியேறும். கழிவறையில் இதை நீங்கள் அவ்வளவு எளிதாக ப்ளஷ் செய்ய முடியாது. சில சமயம் இளம் பச்சை, அடர் மஞ்சள், வெள்ளை நிறத்திலும் கூட மலம் வெளியேறும்.

பிற அறிகுறிகள்

கணைய புற்றுநோய் பாதித்தவர்களுக்கு வேறுபல அறிகுறிகளும் தென்படும். குறிப்பாக மஞ்சள்காமாலை வரும். செரிமானக் கோளாறுகள் உண்டு. திடீரென்று உடல் எடை குறையத் தொடங்கும். குமட்டல் மற்றும் வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பசி உணர்வு குறையத் தொடங்கும். தோள்களில் மிகுதியான வலி ஏற்படும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்..?

மேற்கண்ட அறிகுறிகள் தென்படும்போது நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக மலம் வெளிறிய நிலையில், துர்நாற்றத்துடன் மிக அதிக அளவில் வெளியேறுகிறது என்றால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை நடத்தவும்.

First published:

Tags: Pancreatic Cancer