• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பெண்குயின் கார்னர் 6 : கன்னித்திரை என்றால் என்ன..? பெண்ணின் கற்பை தீர்மானிக்க இது அவசியமா..?

பெண்குயின் கார்னர் 6 : கன்னித்திரை என்றால் என்ன..? பெண்ணின் கற்பை தீர்மானிக்க இது அவசியமா..?

பெண்குயின் கார்னர் 6

பெண்குயின் கார்னர் 6

கன்னித்திரை  (hymen)என்பதே ஒரு தவறான பெயர்.  ஹைமன் (hymen) பல காரணங்களால் ஒரு பெண்ணுக்கு இல்லாமல் இருக்கலாம் அல்லது திருமணமான பெண்ணுக்கு கூட இருக்கலாம்.

  • Share this:
திருமதி கீதா ஐம்பதைக் கடந்தவர். வட நாட்டைச் சேர்ந்தவர் ஆயினும் சென்னையிலேயே பல ஆண்டுகளாக வசிப்பதால் அழகுத் தமிழில் பேசுவார். அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாருக்கு மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டாலும் அழைத்துக் கொண்டு வருவார். அன்று அதிசயமாக தனியாக வந்திருந்தார்.

அழுது அழுது முகம் சிவந்து கண்கள் வீங்கியிருந்தன. ஏதோ பெரிய சிக்கல் என்று புரிந்து கொண்டேன்.  அவராகவே ஆரம்பித்தார். லண்டனில் இருக்கும் மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும், எல்லாம் கூடி வரும் நேரத்தில்

"மாப்பிள்ளை வீட்டார் திடீரென்று ஒரு பெரிய பிரச்சனையை கிளப்பி விட்டார்கள்".

"பெண் வெளிநாட்டில் இருப்பதால் மருத்துவரிடம் காண்பித்து இன்னும் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்று  நிரூபித்தால் திருமணம் செய்து செய்து கொள்கிறோம் "என்று கூறியதாகவும் கூறினார்.

கீதா, தனக்கு மிகவும் கோபம் வந்து  சண்டையிட்டதாகவும், வரனே வேண்டாம் என்று ஒதுக்கி விட்டதாகவும் கூறினார்.  "ஆனால் இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது??? நீங்கள்தான் எனக்கு ஒரு தெளிவைக் கொடுக்க வேண்டும்" என்றார்.



இது கீதாவின் மகளுக்கு மட்டும் உள்ள பிரச்சினை இல்லை.  இது போன்ற  சூழ்நிலையை பல பெண்களும் சந்திக்கிறார்கள். சென்ற மாதத்தில் ஒரு விமானப்படை அதிகாரி தான் பாலியல் வன்முறைக்கு பலியானதாக புகார் அளித்தபோது அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதை எதிர்த்து பல பெண்களுக்கான அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
" ஒரு பெண்ணின்  கன்னித்தன்மையை எந்த ஒரு மருத்துவராலும் 100% பரிசோதனையின் மூலம் கூற இயலாது."

பெண் குயின் கார்னர் 5 : இரத்த வகை மாறி இருந்தால் திருமணம் செய்யலாமா? குழந்தை பிறப்பதில் சிக்கல் வருமா?

கன்னித்திரை  (hymen)என்பதே ஒரு தவறான பெயர்.  ஹைமன் (hymen) பல காரணங்களால் ஒரு பெண்ணுக்கு இல்லாமல் இருக்கலாம் அல்லது திருமணமான பெண்ணுக்கு கூட இருக்கலாம். கன்னித்திரை என்பது எலாஸ்டிக் போல விரிந்து கொடுக்கக்கூடிய ஒரு மெல்லிய ஜவ்வு. அதன் வழியாகவே  மாதாந்திர சுழற்சியில்(periods), ரத்தம் வெளியேறுகிறது. ஒரு சில பிரசவமான பெண்களுக்கு கூட குழந்தை பிறப்புக்கு பிறகு ஹைமன் இருப்பதை பார்த்திருக்கிறோம்.

அதனால் கன்னித்திரையை மட்டும் வைத்து ஒரு பெண்ணை எடை போடுவதை நிறுத்த வேண்டும். மருத்துவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அது தவறு.



ஒரு பெண்ணின் கன்னித் தன்மையை நிரூபிக்க சொல்லும் சமூகம் ஒரு ஆணின் கன்னித்தன்மையை நிரூபிப்பதற்கு எந்த கேள்விகளையும் வைப்பதில்லை.

உங்கள் மகளை நம்புங்கள். அதுவே உங்களுக்கு மனநிம்மதியைக் கொடுக்கும். சரியான முடிவெடுக்க வழிகாட்டும்.

கீதாவின் மனதில் இருந்த குழப்பம் நீங்கி முகம் தெளிந்ததைப் பார்த்தேன்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: