• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Eye Twitching : உங்கள் கண் துடிப்பதை கவனித்திருக்கிறீகளா..? அதற்கு என்ன காரணம் தெரியுமா..?

Eye Twitching : உங்கள் கண் துடிப்பதை கவனித்திருக்கிறீகளா..? அதற்கு என்ன காரணம் தெரியுமா..?

கண்கள் துடித்தல்

கண்கள் துடித்தல்

கண் துடித்தல் என்பது கண் இமை தசைகளின் ஏற்படும் பிடிப்பால் உண்டாகிறது. இது மிகவும் பொதுவான நிகழ்வு மற்றும் மேல் கண்ணிமையில் இது பெரும்பாலும் ஏற்படும்.

  • Share this:
நம் உடலில் நடைபெறும் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் மூடநம்பிக்கைகளை கொண்டிருக்கிறோம். உதாரணமாக கண் துடித்தல். பொதுவாக வலது கண் துடித்தால் நல்லது நடக்கப்போகிறது, நல்ல செய்தி கிடைக்கும் என்ற எண்ணமும், இடது கண் துடித்தால் நல்லது அல்ல என்றும் கூறப்படுகிறது. ஆனால் உங்கள் கண் துடிப்பதற்கான உண்மையான காரணம் என்ன இருக்கலாம் என நீங்கள் எப்போதாவது யோசித்து பார்த்தது உண்டா? உங்கள் கண் துடிப்பதற்கான காரணமும், இதற்கு நீங்கள் மருத்துவரை அணுக வேண்டுமா என்பதையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

கண் துடித்தல் மற்றும் அதன் வகைகள் :

கண் துடித்தல் என்பது கண் இமை தசைகளின் ஏற்படும் பிடிப்பால் உண்டாகிறது. இது மிகவும் பொதுவான நிகழ்வு மற்றும் மேல் கண்ணிமையில் இது பெரும்பாலும் ஏற்படும், ஆனால் சில நேரங்களில் இரு இமைகளிலும் ஏற்படக்கூடும். இதை 3 வகைகளாக பிரிக்கலாம்.,

1. மயோகிமியா (Myokymia)
2. பிளெபரோஸ்பாஸ்ம் (Blepharospasm)
3. ஹெமிஃபேசியல் பிடிப்பு (Hemifacial spasm)

மயோகிமியா

மயோகிமியா கண் துடித்தலின் பொதுவான வகையாகும். இது வாழ்க்கை முறை தொடர்பான காரணிகளால் ஏற்படுகிறது. இது தசையின் தன்னிச்சையான சுருக்கம் காரணமாக ஏற்படுகிறது. பொதுவாக கீழ் கண் இமைகளில் இது ஏற்படுகிறது. இது ஒரு குறுகிய காலத்திற்கு நீடிக்கும் மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் வரலாம்.



பிளெபரோஸ்பாஸ்ம் மற்றும் ஹெமிஃபேஷியல் :

பிளெபரோஸ்பாஸ்ம் மற்றும் ஹெமிஃபேஷியல் வகை கண் துடித்தல் என்பது மரபியல் ரீதியாக ஏற்படும் தீவிரமான நிலையாகும். பிளெபரோஸ்பாஸ்ம் மிகவும் கடுமையானது, இந்த வகை கண் துடிப்பு விநாடிகள், நிமிடங்கள் மற்றும் சில நேரங்களில் மணிநேரம் நீடிக்கும். இதில், கண்களை மூடிக்கொள்ளும் அளவுக்கு பிடிப்பு வலுவாக இருக்கும். இதற்கு மருத்துவரின் ஆலோசனை தேவைப்படலாம்.

கண் துடிப்பதற்கான காரணங்கள் :

முன்பு கூறியது போல கண் துடிப்பது இமை பகுதிகளில் ஏற்படும் தசை பிடிப்பு காரணமாக ஏற்படுகிறது. அரிதான சந்தர்ப்பங்களில், மூளை அல்லது நரம்பு பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக கூட ஏற்படலாம்.

இவற்றில் பெல் பால்சி, டிஸ்டோனியா, கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியா, மல்டிபிள் ஸ்களீரோசிஸ், பார்கின்சன் நோய் மற்றும் டூரெட் நோய்க்குறி போன்ற காரணங்களால் ஏற்படலாம். கண் துடிப்பதற்கான பொதுவான காரணங்கள் வாழ்க்கை முறையும் தொடர்புடையது. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

மன அழுத்தம் :

கண் துடிப்பதற்கு மன அழுத்தம் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். உங்கள் கண் துடிப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு மன அழுத்தத்தைத் தரும் விஷயங்களில் இருந்து நீங்கள் வெளியே வர முயற்சி செய்யுங்கள். இதற்கு யோகா, பாடல் கேட்பது, நீச்சல் அடிப்பது என உங்களுக்கு விருப்பமான விஷயங்களில் ஈடுபடலாம்.



கண் சிரமம் :

தற்போது பெரும்பாலானோர் டிவி, லேப்டாப், கணினி போன்ற திரைக்கு முன் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். கண் துடித்தால் உங்கள் முழு நாளையும் ஒரு திரையின் முன் செலவிடாமல் அடிக்கடி இடைவெளி எடுக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும்.

Cardiac Arrest | நிலைகுலைய செய்யும் மாரடைப்பு! இந்த எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்காம விட்றாதீங்க..!

தூக்கம் இல்லாமை :

நீங்கள் சரியாக ஓய்வு எடுக்காமல் இருந்தாலும் கண் துடிக்கும். ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் குறைந்தது 7-9 மணி நேரம் தூக்கம் தேவை. எனவே கூடுதல் நேரம் செலவழித்து உங்கள் உடலுக்கு நல்ல ஓய்வு கொடுங்கள். சரியான ஓய்வு இருந்தாலே கண் துடிப்பது சரியாகிவிடும்.

அதிகப்படியான காஃபின் அருந்துவது :

அதிகப்படியான காபி குடிப்பது உங்கள் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது. காஃபின் உட்கொள்ளல் அதிகமாக இருந்தால், அதைக் குறைக்க முயற்சி செய்து, அதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படுத்துகிறதா? இல்லையா? என்பதைக் கவனியுங்கள். முன்னேற்றம் இருந்தால் காபி குடிப்பதை குறைத்து விடுங்கள்.



வறண்ட கண்கள் :

வறண்ட கண்கள் கண் இடிப்பதற்கும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனால் உங்கள் கண்கள் வறண்டதாக தோன்றினால் தண்ணீரில் கண்களை கழுவலாம். அல்லது மருத்துவரை அணுகலாம்.

மது அருந்துதல் :

காஃபின் போலவே, மதுபானம் போன்ற ஆல்கஹால் அருந்துவது அதிகமாக இருந்தால் மங்கலான பார்வையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கண் துடிக்கும் பிரச்னையும் ஏற்படுத்துகிறது. இதனால் மதுபானம் அருந்துவதை அறவே தவிர்த்து விடுங்கள். இது உங்கள் கண்களுக்கு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

Tulsi Side Effects : துளசி அதிகமாக சாப்பிட்டால் பக்கவிளைவுகளை உண்டாக்குமா..? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது..?

உங்கள் கண் துடிப்பதை எவ்வாறு நிர்வகிப்பது?

மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை தவிர்த்து சரியான வாழ்க்கை முறையை பின்பற்றினால் கண் துடிக்கும் பிரச்சனையை தவிர்க்க முடியும். ஆனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்றால், நீங்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: