Home /News /lifestyle /

Empty calories என்றால் என்ன..? அதனால் உண்டாகும் உடல்நல பாதிப்புகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

Empty calories என்றால் என்ன..? அதனால் உண்டாகும் உடல்நல பாதிப்புகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

வெற்று கலோரிகள்

வெற்று கலோரிகள்

ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத உணவுகளிலிருந்து பெறப்படும் கலோரிகள் empty calories (வெற்று கலோரிகள்) என்று குறிப்பிடப்படுகின்றன.

உணவு நேரங்களை தவிர சில நேரங்களில் நமக்கு பசி எடுக்கும் போது, பெரும்பாலும் ஊட்டச்சத்துக்கள் அற்ற உணவு பொருட்களை (பேக்கேஜ் ஃபுட்ஸ்) சாப்பிட்டு திருப்தி அடைவோம். பேக் செய்யப்பட்ட உணவுகளை நாம் அதிகமாக சாப்பிட்ட பின் நாம் மந்தமாக உணர்வோம். சிறிய மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத இப்படிப்பட்ட உணவுகளிலிருந்து பெறப்படும் கலோரிகள் empty calories (வெற்று கலோரிகள்) என்று குறிப்பிடப்படுகின்றன.

பல நவீன உணவுகள் மற்றும் பானங்களில் இத்தகைய வெற்று கலோரிகள் உள்ளன. குறிப்பாக அதிக சர்க்கரை, கொழுப்பு அல்லது ஆல்கஹால் உள்ளடக்கம் கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள் வெற்று கலோரிகளை கொண்டுள்ளன.

இத்தகையை உணவுகளை ரெகுலராக சாப்பிடுவது எடை அதிகரிப்பை தவிர, இதய கோளாறு, வாழ்க்கை முறை அபாயம் மற்றும் ஹார்மோன் கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

வெற்று கலோரிகள் பெரும்பாலும் பின்வரும் உணவுகளில் காணப்படுகின்றன:

* மஃபின்ஸ், கேக்ஸ், பேஸ்ட்ரிஸ் போன்ற கார்போஹைட்ரேட் அடிப்படையிலான இனிப்புகள்

* சோடா, எனர்ஜி டிரிங்ஸ், பழச்சாறுகள் உள்ளிட்ட சர்க்கரை பானங்கள்

* கேன்டி பார்ஸ், சாக்லேட் பார்ஸ், ஹார்ட் கேன்டிஸ்

* வெண்ணெய், ஐஸ்கிரீம் போன்ற சில ஃபுல் ஃபேட் பொருட்கள்



* சோயாபீன், கனோலா ஆயில் போன்ற ப்ராசஸ்டு ஆயில்ஸ்

* கெட்ச்அப் மற்றும் பார்பிக்யூ சாஸ் (barbeque sauce) போன்ற காண்டிமெண்ட்ஸ்

* ஆல்கஹால் அடிப்படையிலான பானங்கள்

* பெரும்பாலான ஃபாஸ்ட் ஃபுட்ஸ் மற்றும் பர்கர்கள், சிப்ஸ், பீட்சாக்கள் போன்ற ஜங்க் ஃபுட்ஸ்

மேற்காணும் உணவுகள் பேக்கிங் மற்றும் டின்களில் வருகின்றன் மேலும் அதிக நச்சுத்தன்மை கொண்ட சர்க்கரை மற்றும் கொழுப்புடன் நிரம்பியுள்ளன. கடைகளில் இருந்து வாங்கப்படும் இது போன்ற உணவை தொடர்ந்து சாப்பிட்டால் சிறப்பான & ஃபிரெஷ்ஷான உணவுகளை சாப்பிட முடியாமல் போகும். பல ஆபத்துகள் நிறைந்த வெற்று கலோரிகளை கொண்ட உணவுகளை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிட துவங்க வேண்டும் என்று மக்களை நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.



என்ன செய்யலாம்..?

* இனிப்பான யோகர்ட் சாப்பிடும் பழக்கம் இருந்தால் சுகர்-ஃப்ரீ யோகர்ட்டை சாப்பிடலாம்

* செயற்கையாக இனிப்பு சுவை ஊட்டப்பட்ட தானியத்தை தவிர்க்கலாம்

* குக்கீஸ்களை தவிர்த்து விட்டு மினி க்ளுட்டன்-ஃப்ரீ காக்ரா (khakhra) போன்றவற்றை சிற்றுண்டிகளாக உண்ணலாம்

* ஃப்ரைடு சிக்கனை தவிர்த்து விட்டு க்ரில்டு அல்லது பேக்டு (baked) செய்யப்பட்ட சிக்கனை சாப்பிடலாம்.

குளிர்காலத்தில் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியம் : ஏன் தெரியுமா..?

* ஃப்ரைடு பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்க்கு பதில் ஏர்-ஃப்ரைடு ஸ்வீட் பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ் சாப்பிடலாம்

* ஆல்கஹால் + மிக்சர்களுக்கு பதில் ஆல்கஹால் + சிறிதளவு சோடா+ தண்ணீருடன் குடிக்கலாம்

மெக்னீசியம் பற்றாக்குறை சாக்லேட் அதிகம் தின்ன தூண்டும் என்பதால் ஊட்டச்சத்து நிபுணரின் வழிகாட்டுதலை பெற்று அதை பின்பற்றுவது சிறந்தது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Health tips, Low calorie food

அடுத்த செய்தி