முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அதிகளவு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா..?

அதிகளவு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா..?

நீரேற்றமாக இருங்கள் : விருந்தில் அதிகப்படியான உணவு சாப்பிடுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஒரு நாளில் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளாதது. போதுமான அளவு தண்ணீர் அருந்துவது நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது மற்றும் உணவை ஆர்டர் செய்யும் போது ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்ய உதவுகிறது. நீங்கள் நீரிழப்புடன் இருக்கும்போது, ​​​​உங்கள் மனம் அதை பசியின் அறிகுறியாக மாற்றி அதிக உணவை சாப்பிடத்தூண்டும். குளிர்காலத்தில் மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. ஏனெனில் அந்த சமயங்களில் பெரும்பாலும் தாகத்தை உணர்வதில்லை. இது அவர்களை அதிகமாக சாப்பிட வைக்கிறது.

நீரேற்றமாக இருங்கள் : விருந்தில் அதிகப்படியான உணவு சாப்பிடுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஒரு நாளில் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளாதது. போதுமான அளவு தண்ணீர் அருந்துவது நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது மற்றும் உணவை ஆர்டர் செய்யும் போது ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்ய உதவுகிறது. நீங்கள் நீரிழப்புடன் இருக்கும்போது, ​​​​உங்கள் மனம் அதை பசியின் அறிகுறியாக மாற்றி அதிக உணவை சாப்பிடத்தூண்டும். குளிர்காலத்தில் மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. ஏனெனில் அந்த சமயங்களில் பெரும்பாலும் தாகத்தை உணர்வதில்லை. இது அவர்களை அதிகமாக சாப்பிட வைக்கிறது.

தினமும் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் நமது உடலில் உள்ள செல்களில் பாதிப்பதை ஏற்படுத்துகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அனைத்து வயத்தினரும் போதுமான அளவு நீரேற்றத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நீரேற்றமாக இருப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எந்தவொரு உணவு பொருளையும் அதிகமாக எடுத்து கொண்டால் பாதிப்பு ஏற்படும் என்பதை போலவே, அதிகப்படியான நீரேற்றமும் தீங்கு விளைவிக்கும்.

சமீப காலமாக ஒருவர் தினமும் 3 லிட்டர் அல்லது அதற்கு மேல் தண்ணீர் அருந்த வேண்டும் என பரிந்துரைக்கின்றன. இருப்பினும் நீரிழப்பைப் போலவே அதிமாகவும் தண்ணீர் அருந்துவதும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. கூடுதலாக தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிய ஊட்டச்சத்து நிபுணர் ரேணு ரகேஜா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

அந்த வீடியோவில் அதிகளவு நீரேற்றம் எலக்ட்ரோலைட் அளவுகளைக் குறைக்க வழிவகுக்கும், இதன் விளைவாக தலைவலி மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்துகிறது. எலக்ட்ரோலைட்டுகளில் பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அடங்கும், இவை இரண்டும் இதயம் மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது என்பதால் அதிக அளவு தண்ணீர் அருந்துவதும் இவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் நமது உடலில் உள்ள செல்களில் பாதிப்பதை ஏற்படுத்துகிறது, அதாவது அதிக அளவு தண்ணீர் எடுத்து கொள்ளும் போது செல்கள் நிறைவுற்றதாக மாறுகிறது. இதனால் மூளை பாதிப்பு, எடை அதிகரிப்பு மற்றும் தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அவர் விளக்கியுள்ளார். மேலும் அதிக அளவு தண்ணீர் அருந்துவதை உணர்த்தும் அறிகுறிகள் குறித்த தகவல்களையும் அவர் ஷேர் செய்துள்ளார்.,

1. தாகம் இல்லாத போதும் தண்ணீர் குடிப்பது.

2. உங்கள் சிறுநீர் மிகவும் தெளிவான வெள்ளை நிறத்தில் இருப்பது (சரியான அளவு தண்ணீர் அருந்தும் ஒருவரின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கிறது, அதேபோல அடர் மஞ்சள் சிறுநீர் நீரிழப்பை குறிக்கிறது)

3. தினமும் 6-10 முறைக்கு மேல் சிறுநீர் கழிப்பது.

4. உங்கள் தசைகள் நடுங்கி பலவீனமாக உணர்வது.

5. நீங்கள் தொடர்ந்து சோர்வாக உணர்கிறீர்கள்

6. குழப்பம் அல்லது கவனச்சிதறல் ஏற்படும்.

தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்?

ஒருவர் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பது அவரது வாழ்க்கை முறை மற்றும் தேவையை பொறுத்து மாறுபடுகிறது. தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை விட தாகம் எடுக்கும் போது மட்டும் தண்ணீர் அருந்தினால் போதுமானது என ரேணு தெரிவித்துள்ளார். ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) தினமும் 2 லிட்டர் தண்ணீர் அருந்துமாறு பரிந்துரைக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிசிஓஎஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சாப்பிட வேண்டிய 5 வகையான உணவுகள்

சிறந்த நீரேற்றத்திற்கு செய்ய வேண்டியது :

1) நாம் தண்ணீர் அருந்துவது மட்டுமின்றி, தினமும் சாப்பிடும் உணவு பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தும் நமக்கு நீர் சத்து கிடைக்கிறது. நாம் சாப்பிடும் உணவில் இருந்து சராசரியாக 20% தண்ணீரை பெறுகிறோம். உதாரணமாக, தர்பூசணி மற்றும் கீரை போன்றவற்றில் மற்றும் பழங்களில் தண்ணீர் சத்து நிறைந்திருக்கிறது.

2) அடிக்கடி தேங்காய் தண்ணீர் குடிக்கவும். இதில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் ஆரோக்கியமானது மற்றும் நீரேற்றமாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது என ரேணு தெரிவித்துள்ளார். இந்த பதிவை இதுவரை 4 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

இதற்கு கமெண்ட் செய்துள்ள ஒருவர், ஒரு நாளைக்கு 4 லிட்டருக்கு மேல் தண்ணீர் அருந்தியதால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் இந்த வகையான பலவீனத்தை அனுபவித்தேன் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல ஏராளமானோர் நல்ல தகவலை ஷேர் செய்துள்ளதாக நன்றி கூறியுள்ளனர்.

First published:

Tags: Drinking water, Water