நாக்கின் நிறத்தை வைத்தே உடலில் என்ன பிரச்னை என கண்டுபிடிக்கலாமா..? எப்படி பார்ப்பது..? எந்த நிறம் ஆபத்து..?

நாக்கு

நாக்கில் அசாதாரணமாக கொப்புளங்கள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை பூஞ்சை தொற்று அல்லது புற்றுநோயாக இருக்கலாம்.

  • Share this:
பொதுவாக நாக்கை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு சென்றவுடன், மருத்துவர்கள் நாக்கை பரிசோதிப்பார்கள். இது ஏன் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உடலில் ஏற்பட்டுள்ள நோயின் தன்மை மற்றும் அதன் வீரியம் குறித்து நாக்கின் நிறம் மூலம் யூகிக்க முடியும். நாக்கின் நிறங்கள் என்னென்ன நோய்களுக்கான அறிகுறி என்பதை பார்க்கலாம்

1. வெள்ளை நிற நாக்கு :

நாக்கை சுத்தமாக பராமரிக்காதபோது அல்லது தீவிர நோயின் அறிகுறிகளின்போது நாக்கு வெள்ளை நிறத்தில் மாறும்.

* ஓரல் கேண்டிடியாஸிஸ்

வாய்க்குள் இருக்கும் கேண்டிடா அல்பிகன்ஸ் என்ற பூஞ்சையின் அதிகப்படியான வளர்ச்சி காரணமாக ஈஸ்ட் தொற்று சார்ந்த நோய்கள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன. கேண்டிடா அல்பிகன்ஸ் என்ற பூஞ்சை எப்போதும் வாய்க்குள் இருக்கும். எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக இருக்கும்போது சிம்பயோடிக் பாக்டீரியா கேண்டிடா அல்பிகன்ஸை கன்ட்ரோலில் வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டால் கேண்டிடா அல்பிகன்ஸ் வளர்ச்சியை தடுக்க முடியாது. வாயில் வெள்ளை நிற திட்டுகளாக உருவாகும்.* லூக்கோபிளாக்கியா

லூக்கோபிளாக்கியா வாய்வழி சளி திசுக்களில் இருக்கும் . பாதிக்கப்பட்ட சமயங்களில் வெள்ளை மற்றும் சாம்பல் நிற திட்டுக்களாக வெளியில் தென்படும். சாதாரண லூக்கோபிளாக்கியா என்பது எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தாதது. அடுத்த நிலைகளில் வளர்ச்சி பெறும்போது அவை வாய்வழிப் புற்றுநோயை ஏற்படுத்தும். மிகவும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

* வாய்வழி லைசென்பிளாஸ்

நோய் எதிர்ப்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும்போது வாய்வழி லைசென்பிளான்ஸ் பாதிப்பு ஏற்படும். அப்போது, திசுக்கள் வீக்கமடைந்திருக்கும். நாக்கில் வெள்ளை நிற புள்ளிகள் மற்றும் புண்கள் உருவாகும். தொடக்க நிலையில் இதனை முழுமையாக குணமாக்கிவிட முடியும்.

Mouth Ulcer : வாயில் இப்படி உதடுகளை சுற்றி அல்சர் வந்திருக்கா..? உடனே சரி செய்யும் இந்த வீட்டுக் குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்..!

2. சிவப்பு நாக்கு

நாக்கு சிவப்பு நிறமாக மாறுவதற்கு சில வைட்டமின்கள் குறைபாடு காரணமாக இருக்கலாம்.

* பி-12 குறைபாடு

உடலுக்கு தேவையான வைட்டமின் பி 12 குறைந்தால், நாக்கு சிவப்பு நிறமாக மாறும். அன்றாட உணவு பழக்கத்தில் வைட்டமின் பி 12 சார்ந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் இந்தக் குறைபாடு சரியாகிவிடும். போலிக் அமிலம் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றாலும் நாக்கு சிவப்பாக இருக்கும்.*குளோசிடிஸ்

நாக்கில் வரைபடம் போன்ற நிலையில் சிவப்பாக காணப்படும். இந்த மாதிரியான அறிகுறிகள் தெரிந்தால் அலர்ஜி மற்றும் வைட்டமின்கள் பற்றாக்குறை, நீரிழிவு நோய் அல்லது மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளாக இருக்கலாம்.

* ஸ்கார்லெட் காய்ச்சல்

பாக்டீரியாவால் ஏற்படும் இந்த பாதிப்பால் நாக்கு வீங்கிப்போகும். சிவப்பு நிறத்தில் வீங்கி காணப்படும் நாக்கிற்கு, உரிய சிகிச்சைகளை தொடக்கத்திலேயே எடுக்காவிட்டால் இதயம், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளை பாதிக்கும் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

* கவாசாகி நோய்

இந்த நோய் கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான நோயாகும். இந்த நோயால் பாதிப்படைந்தவரின் நாக்கு சிவப்பு நிறத்தில் தோன்றும். அதிக காய்ச்சல், இரத்த நாளங்களின் அழற்சி போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.3. ​கருப்பு நிற நாக்கு :

கருப்பு நாக்கு தசையின் எபிட்டிலியத்தில் உள்ள பாப்பிலாக்கள் மூலம் வளரக் கூடியது. தொடர்ச்சியான இதன் வளர்ச்சியின் காரணமாக நாக்கின் நிறம் கருப்பாக தோன்றும். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க நல்ல வாய்வழி சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம். புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கு நாக்குகள் கருப்பாக காணப்படும்.

நாக்கில் அசாதாரணமாக கொப்புளங்கள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை பூஞ்சை தொற்று அல்லது புற்றுநோயாக இருக்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published: