ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இரத்த வகையை வைத்தே உங்கள் இதய ஆரோக்கியத்தை சொல்லிவிடலாம் : எப்படி தெரியுமா..?

இரத்த வகையை வைத்தே உங்கள் இதய ஆரோக்கியத்தை சொல்லிவிடலாம் : எப்படி தெரியுமா..?

இரத்தப் பரிசோதனை

இரத்தப் பரிசோதனை

இரத்தக் குழுக்களில் நேர்மறை மற்றும் எதிர்மறை காரணிகள் ரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதங்களின் அளவை பொறுத்து அமைகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

நமது இரத்த வகைக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?. ஆம், நிபுணர்கள் ஏபிஓ குருதி குழு முறைமை (ABO blood group system) ஒரு நபரின் வயது மற்றும் நோய்களின் பல அளவுகளுடன் ஒத்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.

ஏபிஓ குருதி குழு முறைமை என்பது சிவப்பணுக்களில் உள்ள ஆண்டிபாடி மற்றும் இம்யூனோகுளோபுலினை அடிப்படையாக கொண்டது. நமது இரத்தத்தில் உள்ள வேறுபாடுகள் உண்மையில் இதயம் தொடர்பான நோய்களை தீர்மானிக்க முடியும் என்பதையும் நிரூபித்துள்ளது.

1. ஏபிஓ குருதி குழு முறைமை என்றால் என்ன?

மனித இரத்தம் ABO அமைப்பின் கீழ் குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இரத்தத்தில் A மற்றும் B ஆன்டிஜென்களின் இருப்பு அல்லது இல்லாமையின் அளவைப் பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மனிதர்களின் ரத்த வகை A, B, AB அல்லது O என பிரிக்கப்படுகிறது. A, B மற்றும் O இரத்தக் குழுக்கள் முதன்முதலில் 1901 ஆம் ஆண்டில் ஆஸ்திரிய நோயெதிர்ப்பு நிபுணரான கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் என்பவரால் கண்டறியப்பட்டது.

இரத்தக் குழுக்களில் நேர்மறை மற்றும் எதிர்மறை காரணிகள் ரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதங்களின் அளவை பொறுத்து அமைகிறது. உங்கள் இரத்தத்தில் புரதங்கள் இருந்தால், நீங்கள் Rh நேர்மறை, இல்லையெனில் நீங்கள் Rh எதிர்மறை ஆகும். ‘ஓ’ரத்தப்பிரிவு உள்ளவர்கள் உலகளாவிய ரத்த நன்கொடையாளர்கள் - அவர்கள் தங்கள் இரத்தத்தை அனைத்து பிரிவு ரத்த குழுக்களுக்கும் தானம் செய்யலாம். ஆனால் அவர்கள் ஓ ரத்தப்பிரிவை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் ‘ஏபி’ வகை ரத்தம் கொண்டவர்கள் அனைத்து வகை ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள்.

2. ABO ரத்த குழுக்கள் இதய பாதிப்புகளுடன் தொடர்புடையவை:

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் வெளியிடப்பட்ட 2020 ஆராய்ச்சி முடிவுகளின் படி, A மற்றும் B பிளட் குரூப் கொண்ட நபர்களுக்கு இதய தமனிகளில் ரத்தம் உறையும் நோயான ‘த்ரோம்போம்போலிக்’ ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் O பிளட் குரூப் கொண்ட ஒப்பிடும்போது A மற்றும் B பிளட் குரூப் உடையவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"O பிளட் குரூப் உடன் ஒப்பிடும்போது A பிளட் குரூப் வகையைச் சேர்ந்தவர்களுக்கு ஹைப்பர்லிபிடெமியா, பெருந்தமனி தடிப்பு, தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவை உருவாகும் அபாயம் அதிகம், அதேசமயம் B பிளட் குரூப் கொண்ட நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் அதிகம்” என ஆய்வு முடிவுகள் கண்டறிந்துள்ளன.

மூல நோயில் இருந்து தப்பிக்க கட்டாயம் சாப்பிடக்கூடாத 5 உணவுகள்..!

3. இதற்கான காரணம் என்ன?

கேரியர் புரதமான வான் வில்பிரான்ட் காரணியின் அளவில் ஏற்படும் வேறுபாடுகள் ரத்தம் உறைதல் செயல்முறையில் பெரும் பங்காற்றுகின்றன. வான் வில்பிராண்ட் அல்லாத காரணியின் செறிவு அதிகமாக இருப்பதால் O பிளட் குரூப் உள்ளவர்களை விட O அல்லாத பிளட் குரூப் கொண்டவர்களுக்கு ரத்தக் கட்டிகள் உருவாகும் வாய்ப்பு அதிகம்.

"த்ரோம்போம்போலிக் நோய்கள் மற்றும் ரத்தப்போக்கு ஆபத்து ஆகியவற்றுடன் ABO இரத்தக் குழுவிற்கும் இடையேயான தொடர்புகள் கிளைகோசைல்ட்ரான்ஸ்ஃபெரேஸ் செயல்பாட்டிற்கு இடையிலான உறவால் மட்டும் நிகழ்வது இல்லை. ரத்த உறைதல் காரணிக்கான கேரியர் புரதமான VWF (வான் வில்பிரான்ட் காரணி)-யின் பிளாஸ்மா அளவுகள் மற்றும் உயிரியல் செயல்பாடுகள் மூலமும் ஏற்படலாம்” என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

4. பிற காரணிகள் என்னென்ன?

O அல்லாத பிளட் குரூப் கொண்ட நபர்களுக்கு பெயரளவில் மட்டுமே இரைப்பை குடல் இரத்தப்போக்கு அபாயம் குறைவாக இருப்பதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. O அல்லாத பிளட் குரூப் கொண்ட நபர்களை, O பிளட் குரூப் கொண்ட நபர்களுடன் ஒப்பிடும் போது, இதய ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளைக் குறைக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

5. பிற ஆய்வு முடிவுகளின் விபரம்:

மற்ற பல ஆராய்ச்சி ஆய்வுகளின் படி, O அல்லாத பிளட் குரூப் உடையவர்களுக்கு இதயப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளன. 2012 ஆம் ஆண்டு ஹார்வர்ட் ஹெல்த் அறிக்கையின்படி, “20 ஆண்டுகளில் 89,500 பேரைத் கண்காணித்த இரண்டு நீண்டகால ஆராய்ச்சி ஆய்வுகளின் தரவுகளின் அடிப்படையில், AB இரத்த வகை உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட 23% இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். B வகை பிளட் குரூப் உள்ளவர்களுக்கு 11% அதிக ஆபத்து இருப்பதும், A வகை உடையவர்களுக்கு 5% ஆபத்து அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Blood Group, Heart health