முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாதவிடாய் சுழற்சி : இர்ரெகுலர் பீரியட்ஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன..?

மாதவிடாய் சுழற்சி : இர்ரெகுலர் பீரியட்ஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன..?

தூக்க சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் முதல் மன அழுத்தம் வரை மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. கர்ப்பமாக இருப்பது மாதவிடாய் தவறியதற்கான ஒரு முக்கியமான காரணமாக இருந்தாலும் கூட பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் பிற காரணிகளும் இங்கே உள்ளன. பொதுவான காரணங்கள் - ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் முதல் தீவிர மருத்துவ நிலைகள் வரை செல்கிறது.

பர்த் கண்ட்ரோல் பில்ஸ் என்று கூறப்படும் கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கும் மருந்துகள் பயன்படுத்தினாலும், IUD என்ற கருத்தடைகள் சாதனங்களைப் பயன்படுத்தினாலும், மாதவிடாய் சுழற்சி முறையற்று காணப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் சுழற்சி வேறுபடும். 28 நாட்கள் என்பது சராசரியான மாதவிடாய் காலம் என்று கூறப்பட்டாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் இது இயற்கையாகவே மாறுபடும். அது மட்டுமின்றி, எத்தனை நாட்கள் உதிரப்போக்கு இருக்கும், அதிகமாக இருக்கிறதா அல்லது குறைவாக இருக்கிறதா, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசௌகரியங்கள் உள்ளிட்ட எல்லாமே ஒவ்வொரு முறையும் மாறலாம்.

ஆனால், ஒவ்வொரு முறையும், வெவ்வேறு இடைவெளியில் பீரியட்ஸ் ஏற்பட்டால் அதற்கு பின்வரும் காரணங்கள் இருக்கலாம். என்ன காரணங்கள் என்பதைக் கண்டுபிடித்து சரியான சிகிச்சையை உடனடியாக பெற வேண்டும்.

சரியான மாதவிடாய் சுழற்சி காலம் என்ன:

  • இளம் பருவ பெண்கள்: சராசரியான அல்லது நார்மல் சுழற்சி என்பது (இரண்டு மாதவிடாய் காலத்துக்கு இடைப்பட்ட நாட்கள்) 21 முதல் 45 நாட்கள் ஆகும்.
  • பெரியவர்கள்: சராசரியான அல்லது நார்மல் சுழற்சி என்பது (இரண்டு மாதவிடாய் காலத்துக்கு இடைப்பட்ட நாட்கள்) 24 முதல் 38 நாட்கள் ஆகும். இந்த காலம் 7 முதல் 9 நாட்கள் வரை வேறுபடலாம்.
  • மாதவிடாய் உதிரப்போக்கு 8 நாட்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

முறையற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

கர்ப்பம், குழந்தை பிறப்பு மற்றும் மெனோபாஸ்

உங்களுக்கான பீரியட்ஸ் பெரும்பாலும் ரெகுலராக இருந்து, ஏதேனும் ஒரு முறை குறிப்பிட்ட காரணமின்றி மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால், அதற்கு கர்ப்பமாகி இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். சிலருக்கு கரு உண்டாகி இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாமல் போகலாம்.

அதே போல, குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பின்பு தான் மாதவிடாய் ஏற்படும். ஆனால், குழந்தை பிறப்புக்கு முன்பு இருந்த மாதவிடாய் சுழற்சி ஏற்படாமல் போகலாம். குழந்தை பிறந்த பின்பு, மீண்டும் பீரியட்ஸ் ரெகுலராக மாற பல மாதங்கள் அல்லது ஓரிரு வருடங்கள் கூட ஆகலாம்.

நாற்பது வயதுக்கு மேல், மாதவிடாய் சுழற்சி நிற்கும் நேரம், சீரற்ற முறையில் தான் மாதவிடாய் ஏற்படும்.

கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்கள்

பர்த் கண்ட்ரோல் பில்ஸ் என்று கூறப்படும் கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கும் மருந்துகள் பயன்படுத்தினாலும், IUD என்ற கருத்தடைகள் சாதனங்களைப் பயன்படுத்தினாலும், மாதவிடாய் சுழற்சி முறையற்று காணப்படும்.

வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கிறதா..? காரணங்களும்... சரி செய்யும் வழிகளும்..!

சினைப்பை கோளாறுகள்

பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் (PCOS), ஃபைப்ராய்ட்ஸ், பெல்விக் பாதிப்பு, என்டோமெட்ரியோசிஸ் உள்ளிட்ட சினைப்பை பிரச்சனைகள் மாதா மாதம் கருமுட்டை உருவாவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை

அதிகப்படியான ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை, சரியாக சாப்பிடாமல் இருப்பது, உடல் எடை அதிகரிப்பு ஆகிய வாழ்க்கைமுறை சம்மந்தப்பட்ட கோளாறுகளால் மாதவிடாய் சுழற்சி தாமதாமாகும்.

First published:

Tags: Irregular periods, Periods