கோடை காலத்தில் பெண்கள் என்ன ஆடைகள் அணியலாம்..

கோடை காலத்தில் பெண்கள் என்ன ஆடைகள் அணியலாம்..

கோப்புப் படம்

தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் கோடை காலத்தில் என்ன ஆடை அணியலாம் என்பது தொடர்பாக பெண்களுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன.

  • Share this:
கோடை காலத்தில் பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்கள் குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் இதமான ஆடையாக பருத்தி விளங்குகிறது. பெண்கள் வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கறுப்பு மற்றும் பளிர் என இருக்கும் நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்க்க வேணடும். ஏனெனில் அவற்றுக்கு வெப்பத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற இளம் நிறங்களில் உடைகள் அணியலாம். பருத்தி ஆடைகளை அணிந்தால் இன்னும் சிறப்பு.

மேலும் உச்சி வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்கலாம். அவ்வாறு வெளியே செல்ல நேர்ந்தால் குடை எடுத்து செல்ல வேண்டும். இல்லையெனில் குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்ல வேண்டும்.  கோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடை பருத்தி ஆடைகளே ஆகும். தமிழகத்தில் பெரும்பான்மையான பெண்களும் விரும்புவது பருத்தி ஆடைகளே. பருத்தி ஆடைகள் தான் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

கோடைக்காலத்தில் பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்கள் குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் இதமான ஆடையாக பருத்தி விளங்குகிறது. இதில் பலவகையான இந்திய காட்டன் உடைகள் இருந்தாலும் கோடைக்காலத்தில் பயன்படுத்தவும் , அணியவும் சிறந்த துணி வகையாக காதி ஆடைகள் விளங்குகிறது.

இந்த காதி ஆடையை பெண்கள் சேலையாகவும், சுடிதாராகவும் மற்றும் பாவாடையாகவும் அணியலாம். மேலும், இந்த கோடை வெயிலின் தட்ப வெப்பநிலைக்கு தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும். உடலை ஒட்டியவாறு உள்ள ஜீன்ஸ், லெக்கீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட்களை அணிவதை தவிர்க்க வேண்டும். அவை பெண்களுக்கு உகந்த ஆடைகள் கிடையாது.

மேலும் படிக்க... மகப்பேறுக்கு பிறகு முடி, தோலில் பிரச்சனையா? காரணங்களும்..சிகிச்சை முறைகளும்..!

பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை புடவை தான் என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஏனென்றால் நமது முன்னோர்கள் அனைவருமே கோடைக்காலத்தில் பருத்தி சேலைகளையே அனிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நீளமான பாவாடைகளே பெண்களுக்கு வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாகவும் வைத்திருக்க உதவும் . முடிந்த வரை பருத்தி பாவாடைகளை அணிவது சிறந்தது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: