ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் கடும் உடல் வலி ஏற்பட என்ன காரணம்..? வலியை குறைக்க உதவும் டிப்ஸ்!

குளிர்காலத்தில் கடும் உடல் வலி ஏற்பட என்ன காரணம்..? வலியை குறைக்க உதவும் டிப்ஸ்!

உடல் வலி

உடல் வலி

குளிர்காலத்தில் பெரும்பாலும் நாம் அனைவரும் அதிகமாக உட்கார்ந்தே தான் இருப்போம். உடல்செயல்பாடுகளும் வெகுவாக குறைகிறது. இதன் காரணமாக தசைகள் மற்றும் மூட்டுகளில் விறைப்பு மற்றும் வலி ஏற்படுகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் செயல்பாடுகள் அதிகமின்றி நம்மை மிகவும் சோம்பலாக உணர வைக்கும் சீசன் ஒன்று உண்டு என்றால் அது குளிர் சீசன் தான். ஆண்டின் மற்ற எல்லா சீசன்களையும் விட குளிர்காலத்தில் பெரும்பாலானோருக்கு உடல் வலி அதிகரிக்கிறது.

இந்த சீசனில் நமது பிசிக்கல் ஆக்டிவிட்டி வெகுவாக குறைவதால் உடல்நலத்தில் பல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. பொதுவாக உடல்செயல்பாடுகளை குறைத்து உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது கடுமையான உடல் வலி ஏற்படுத்தும் காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. நமது உடல் சுறுசுறுப்பாக இருக்கும் போது சிறப்பாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் குளிர்காலத்தில் அதிகாலை மற்றும் மாலை பனி அதிகமாக இருப்பதால் ரெகுலராக உடற்பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் கூட வெளியே சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதில்லை. இதனால் இயல்பாகவே எளிதாக நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. ஒரே இடத்தில் முடங்கி இருப்பது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள் நிபுணர்கள். ஆக மொத்தம் குளிர் சீசனில் வழக்கமான உடல்செயல்பாடுகளை குறைப்பது அல்லது தவிர்ப்பது ஒருவரது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மோசமாக்கும். குளிர்காலத்தில் ஏற்படும் நாள்பட்ட உடல் வலிகளுக்கு என்ன காரணம், குளிர் சீசனில் அதிகரிக்கும் உடல்வலியை எப்படி சமாளிப்பது என்பதற்கான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

உடல் செயல்பாடின்றி இருப்பது:

குளிர்காலத்தில் பெரும்பாலும் நாம் அனைவரும் அதிகமாக உட்கார்ந்தே தான் இருப்போம். உடல்செயல்பாடுகளும் வெகுவாக குறைகிறது. இதன் காரணமாக தசைகள் மற்றும் மூட்டுகளில் விறைப்பு மற்றும் வலி ஏற்படுகிறது. மேலும் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது மோசமான தோரணை, கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படுத்தும். நாள்பட்ட வலி அறிகுறிகள் மோசமாகும்.

Also Read : முதுகு வலியால் அவதியா? மருந்து, மாத்திரை எதுவும் வேண்டாம்... இந்த யோகாசனங்களை செய்யுங்க போதும்!

ஏற்கனவே இருக்கும் ஆர்த்தோ கண்டிஷன்ஸ்:

மூட்டுவலி உள்ளவர்கள் மற்றும் தசை அல்லது மூட்டு வலியை எதிர்கொள்பவர்களின் நிலையை குளிர் சீசனில் நிலவும் தட்பவெப்ப நிலை மேலும் மோசமாக்கலாம். இந்த நிலை வீக்கத்தை ஏற்படுத்தும் பாரோமெட்ரிக் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது.

நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது:

குளிர்காலத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அதிக நேரம் இருப்பது அதுவும் உட்கார்ந்தே இருப்பது மிகவும் பொதுவானது. அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பது முதுகு தசைகள் மற்றும் ஸ்பைனல் டிஸ்க்ஸ்களில் அழுத்தத்தை அதிகரித்து வலிகளுக்கு காரணமாகிறது.

டிப்ஸ்கள்:

- உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக முழங்கால் அல்லது மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து வலியை ஏற்படுத்தும். குளிர்காலத்தில் எடை எளிதில் அதிகரிக்க கூடும் என்பதால், சரியான உடல் எடையை பராமரிப்பதை உறுதி செய்யுங்கள். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முயற்சிகளை செய்யுங்கள்.

- சிறிய விஷயங்களுக்கு கூட மன அழுத்தத்திற்கு உள்ளாகாதீர்கள். உங்கள் மனதை எப்போதுமே ரிலாக்ஸாக வைத்து கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். ஏனென்றால் மன அழுத்தம் உங்கள் தசைகளை பாதித்து காலப்போக்கில் உடலின் எந்தப் பகுதியிலும் வலியை ஏற்படுத்தலாம்.

- புகை மற்றும் மது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களை தவிர்க்கவும். ஏனெனில் இவை இதய ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். இந்த பழக்கங்கள் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன், இதய பிரச்சனைகள், அசாதாரண இதய துடிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தீவிர நிலைகளுக்கு வழிவகுக்கிறது.

- மூட்டு ஆரோக்கியத்தை பராமரிக்க மற்றும் உடலை கட்டுக்கோப்பாக மற்றும் வலுவாக வைத்திருக்க தினசரி உடற்பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடுங்கள்.

First published:

Tags: Body Pain, Winter