ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆண்களின் விந்தணுக்கள் குறைய என்ன காரணம்..? இதற்கான சிகிச்சை முறைகள் என்ன..?

ஆண்களின் விந்தணுக்கள் குறைய என்ன காரணம்..? இதற்கான சிகிச்சை முறைகள் என்ன..?

விந்தணுக்கள் ஆரோக்கியம்

விந்தணுக்கள் ஆரோக்கியம்

செமன் அனலைசீஸ் பரிசோதனை செய்து கொள்வதன் மூலமாக விந்தணு குறைபாடு குறித்து தெரிந்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

குழந்தையின்மை பெண்கள் மட்டுமே காரணம் என்று சமூகத்தில் இதற்கு முன்பாக பொதுவாக கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம் இன்றைய சூழலில் உடைந்து வருகிறது. ஆண்களுக்கு இருக்கும் குறைபாடுகள் காரணமாக குழந்தைப் பேறு உண்டாகுவதில் சிக்கல் வருகிறது. தங்களுக்கு பிரச்சினை இருப்பது குறித்து ஆண்களுக்கு தெரிய வந்தாலும், அதுகுறித்து வெளியே சொல்லுவதற்கு மிகுந்த அச்சம் கொள்கின்றனர். குறிப்பாக, ஆண்மையை குறைகூறி கிண்டலும், கேலியும் வரும் என நினைத்து மன உளைச்சல் அடைகின்றனர்.

ஆனால், பிரச்சினை எது என்றாலும், எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைப்பதற்கான வழிமுறைகள் இன்றைய நவீன மருத்துவத்தில் உண்டு. ஆண்களில் பலருக்கு விறைப்புதன்மை குறைபாடு, விந்து முந்துதல், விந்து குழாய் தொற்று போன்ற சிக்கல்கள் எழுகின்றன. இவை இன்றைக்கு பெரிதும் பலரால் அறியப்பட்ட குறைபாடுகளாக உள்ள அதேவேளையில், பலரும் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்கின்றனர். அதே சமயம், ஆண்களுக்கு நிலவும் ‘ஒலிகோஸ்பெர்மியா’ என்னும் விந்தணு குறைபாடு குறித்தும், அதற்கு எப்படி சிகிச்சை பெறுவது என்பது குறித்தும் இந்த செய்தி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

சராசரி உயிரணு எண்ணிக்கை எவ்வளவு

எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரியான எண்ணிக்கையில் விந்தணுக்கள் இருப்பதில்லை. உலகில் உள்ள ஒவ்வொரு இன மக்களுக்கும், ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. ஆணின் வயது, தேக பலம் போன்றவை அடிப்படையிலும் இது மாறுபடும். அதே சமயம், சராசரி விந்தணு எண்ணிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள மதிப்பீடுகளுக்கு கீழே இருந்தால், உங்களுக்கு விந்தணு குறைபாடு பிரச்சினை இருப்பதாகக் கருதப்படும். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள சராசரி அளவு ஒரு மில்லி லிட்டருக்கு 15 மில்லியன் உயிரணுக்கள் ஆகும்.

  • லேசான விந்தணு குறைபாடு பிரச்சனை (10-15 மில்லியன் / எம்எல்)
  • மிதமான விந்தணு குறைபாடு பிரச்சனை (5 - 10 மில்லியன் / எம்எல்)
  • தீவிரமான விந்தணு குறைபாடு பிரச்சனை (0-5 மில்லியன் / எம்எல்)

செமன் அனலைசீஸ் பரிசோதனை

முற்றிலுமாக விந்தணு குறைபாடு இருப்பது ‘அசூஸ்பெர்மியா’ என்று சொல்லப்படுகிறது. செமன் அனலைசீஸ் பரிசோதனை செய்து கொள்வதன் மூலமாக விந்தணு குறைபாடு குறித்து தெரிந்து கொள்ளலாம். உங்கள் மனைவி ஆரோக்கியமாக இருந்தும் கருத்தரிப்பதில் சிக்கல் இருந்தால், உங்களிடம் செமன் அனலைசீஸ் பரிசோதனையை மருத்துவர் மேற்கொள்வார். விந்தணு எண்ணிக்கை, தரம், அதன் நகரும் தன்மை, குறைபாடு உடைய அணுக்களின் எண்ணிக்கை உள்பட பல்வேறு விஷயங்கள் இந்தப் பரிசோதனை மூலமாக தெரிய வரும்.

நீங்கள் ஒருவர் மீது கண்மூடித்தனமான அன்பு கொண்டுள்ளீர்கள் என்பதற்கான 5 அறிகுறிகள்

விந்தணு குறைபாடு காரணங்கள்

ஆண்களின் விதைகளில் ஏற்படும் வெரிகோசில் என்னும் நரம்புச் சுருட்டு பிரச்சினை, விந்து கடந்து வரும் குழாய்களில் தொற்று, விந்து வெளியேறுவதில் சிக்கல் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சினை ஏற்படலாம். மது அருந்துவது, போதைப்பொருள் பயன்பாடு போன்ற காரணங்களாலும் இந்த குறைபாடு ஏற்படலாம்.

சிகிச்சை முறைகள்

வெரிகோசிஸ் பிரச்சினை இருப்பது உறுதி செய்யப்பட்டால், அறுவை சிகிச்சை செய்து விந்து விதைப்பைகளுக்கு ரத்து ஓட்டம் சீராக இருக்க வழிவகை செய்யப்படும். ஹார்மோன் குறைபாடு என்றால் அதை சரி செய்வதற்கான சிகிச்சை அளிக்கப்படும். தொற்று பாதிப்பு என்றால், அதை சரி செய்ய ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் வழங்கப்படும்.

வாழ்வியல் மாற்றங்கள்

மது, புகை, போதைப்பொருள் பழக்கத்தை கைவிடுவது, மன அழுத்தத்தை குறைப்பது, ஆரோக்கியமாக சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற முறைகள் மூலமாக விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

First published:

Tags: Low Sperm Count, Male infertility, Pregnancy