உலகம் முழுவதும் சமீப காலமாக அதிகரித்து இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் விந்தணு குறைபாடு. இதில் குறிப்பாக, இந்திய ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. விந்தனுக்கனில் எண்ணிக்கை குறைவு என்பது ஒலிகோஸ்பெர்மியா என்று கூறப்படுகிறது.
சோம்பேறித்தனமான, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் வேறு சில நோய்கள் அல்லது உடல்நல குறைபாடுகள் காரணமாக இந்த பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது. பொதுவாகவே விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் கரு உருவாவதில் பிரச்சினை ஏற்படுதும், மேலும் உளவியல் ரீதியாகவும் பலவிதமான பாதிப்புகளை உண்டாக்கி, ஒரு ஆணின் வாழ்க்கையை பல விதங்களில் பாதிக்கலாம்.
ஒலிகோஸ்பெர்மியா எதனால் ஏற்படுகிறது..?
விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணங்களாக, புகை பிடித்தல், மதுபானம் அருந்துவது மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவது ஆகிய மூன்றும் கூறப்படுகிறது. இதற்கு அடுத்ததாக, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் இல்லாத வாழ்க்கை முறை ஆகியவற்றால் ஏற்படக்கூடிய உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் வேறு சில லைஃப் ஸ்டைல் காரணிகளால் ஒரு ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்களுடன் அந்த ஒப்பிடும் போது சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டும் இல்லாமல், அதிகப்படியான குடிப்பழக்கம், அனபாலிக் ஸ்டீராய்டு மற்றும் கோகைன் போன்ற போதைப்பொருள் பயன்பாடு ஆகியவையும் இதற்கு காரணங்கள் ஆகும்.
சமீப காலமாக பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அலுவலக வேலை, வீடு, வாழ்க்கை முறை, ஒரே மாதிரியான ரொட்டீன் உள்ளிட்டவற்றால் ஏற்படக்கூடிய மன அழுத்தம் மற்றும் திடீரென்று எடை அதிகரிப்பது அல்லது குறைவது, தூக்கத்தில் பிரச்சனைகள் ஆகியவை காரணமாகவும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையலாம்.
Also Read : காண்டம் பயன்படுத்துவதற்கு முன் இந்த விஷயங்களை சரிபார்க்கவும்.!
பாலியல் நோய்கள், நீண்ட கால ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாடு மற்றும் ஹார்மோன்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை மருத்துவ ரீதியான காரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இடுப்பின் கீழ் பகுதிகளில் உள்ள நரம்பணுக்கள் வீக்கம் அல்லது பெரிதாவது, ஆணுருப்புக்கு ரத்த ஓட்டத்தை தடை செய்து, விந்தணுக்களின் உற்பத்தியைக் குறைக்கும். மேலும் இது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியையும் பாதிக்கிறது.
விந்தணு குறைவு பிரச்சனையை எவ்வாறு தடுப்பது மற்றும் சிகிச்சை முறைகள்
பெரும்பாலான சமயங்களில், ஒலிகோஸ்பெர்மியா என்ற இந்த குறைப்பாட்டை வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலமாகவே சரி செய்ய முடியும். இதற்கு காரணங்களாக கூறப்படும் புகைப்பிடிக்கும் பழக்கம், மதுபானம் அருந்துவது, போதைப் பொருள் பயன்பாடு ஆகிய மூன்றையும் நிறுத்தி விட்டாலே விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல், ஆரோக்கியமான உணவுப்பழக்கம், மன அழுத்தம் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது மற்றும் தினசரி உடற்பயிற்சி செய்வது ஆகிய மூன்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், ஸ்க்ரோட்டம் பகுதியை அதிக வெப்பத்துக்கு உட்படுத்தக்கூடாது.
விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் சிகிச்சையை பொறுத்தவரை, ஒவ்வொரு நபருக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, அதற்கு ஏற்றார் போல தான் சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஒரு சிலருக்கு ஹார்மோன் தெரபியும், ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படும். அதுமட்டுமில்லாமல் மருத்துவர் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட காலம் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Low Sperm Count