ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆணுறுப்பில் துர்நாற்றம் வீசுவது இயல்பானதா..? இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..?

ஆணுறுப்பில் துர்நாற்றம் வீசுவது இயல்பானதா..? இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..?

ஆணுறுப்பில் துர்நாற்றம்

ஆணுறுப்பில் துர்நாற்றம்

உட்புற சருமம் சிவப்பாக மாறுதல், அரிப்பு, வீக்கம் , மேலடுக்கு சருமம் முற்றிலுமாக மூடாமல் தூக்கிக்கொள்ளுதல் போன்றவை இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆணுறுப்பில் துர்நாற்றம் வீசுவது இயல்பானதுதான் என்றாலும் அதை பல சமயங்களில் சாதாரணமாக கடந்துபோக முடியாது. அது ஏதேனும் நோய் தொற்றின் அலர்ட் அறிகுறியாகவும் இருக்கலாம். மேலும் பொதுவாகவே ஆணுறுப்பில் ஏன் துர்நாற்றம் வீசுகிறது என்ற கேள்வியும் பலருக்கு இருக்கும். இதை எப்படி போக்குவது என நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கான தகவல்தான் இது.

  அணுறுப்பில் துர்நாற்றம் வீச என்ன காரணம்..?

  ஆணுறுப்பின் உட்புற சருமம் மிகவும் சென்சிடிவானது என்பதால் அதை எந்த தொற்றும் தாக்காமல் இருக்க அதன் மேல் பகுதி மற்றொரு சருமத்தால் லேயர் போல் மூடப்பட்டிருக்கும். இந்த சருமமும் சென்சிடிவானது. அப்படி ஆணுறுப்பின் உட்புற சருமத்தின் மேல் ஸ்மெக்மா என்கிற சுரப்பி சுரக்கும். இது ஈரப்பதம், எண்ணெய் தன்மை மற்றும் சரும செல்களை உருவாக்க உதவுகிறது.

  ஏனெனில் ஆணுறுப்பின் உட்புற சருமத்திற்கு ஒருவிதமான வழவழப்புத் தன்மை தேவைப்படுகிறது. எனவேதான் ஸ்மெக்மா என்னும் சுரப்பி சுரந்து ஈரப்பதம் மற்றும் எண்ணெய் தன்மையை அளிக்கிறது. சில சமயங்களில் உங்களுக்கு அதிகமாக வியர்த்தாலோ அல்லது சரியான பராமரிப்பு இல்லை என்றாலோ ஸ்மெக்மாவின் சுரப்பு அதிகமாகும். அப்போதுதான் அது ஆண்குறியின் நுனியில் வெள்ளை திட்டுக்கள் போல் குவிந்து துர்நாற்றத்தை வீசும். அதோடு அவை பாக்டீரியா வளர்ச்சியையும் தூண்டும்.

  இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..?

  உங்கள் ஆண்குறின் மேல் சருமத்தை பின்னோக்கி நகர்த்த வேண்டும்.

  பின் உட்புற சருமத்தை கெமிக்கல் கலப்படமற்ற மற்றும் நறுமணமற்ற சோப் கொண்டு கழுவ வேண்டும்.

  பின் தண்ணீர் கொண்டு நன்கு கழுவ வேண்டும்.

  Also Read : சுய இன்பத்திற்கு பின் நல்ல தூக்கம் வர என்ன காரணம்..?

  ஸ்மெக்மாவை சுத்தம் செய்தபின் ஈரப்பதத்தை எடுக்க வேண்டும். அதற்கு மென்மையான துணி கொண்டு துடைக்க வேண்டும். அதற்காக கரடுமுரடாக தேய்த்து துடைக்கக் கூடாது.

  ஈரப்பதம் போன பின் மேலடுக்கு தோலை மீண்டும் இயல்புநிலைக்கு நகர்த்திவிடுங்கள்.

  இப்படி ஸ்மெக்மாவை சுத்தம் செய்தபின் துர்நாற்றம் நீங்கிவிடும். இப்படி இந்த முறையை தினமும் குளிக்கும்போது செய்தாலே துர்நாற்றம் வீசுவதை தவிர்க்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முறை கழுவினாலே போதுமானது.

  எப்போது மருத்துவரை அணுக வேண்டும்..?

  உட்புற சருமம் சிவப்பாக மாறுதல், அரிப்பு, வீக்கம் , மேலடுக்கு சருமம் முற்றிலுமாக மூடாமல் தூக்கிக்கொள்ளுதல் போன்றவை இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.

  சில நேரங்களில் அவை சிறுநீர் பாதை தொற்று, ஈஸ்ட் தொற்று, மொட்டு தோல் அழற்சி, கிளமிடியா என்னும் கிருமி தொற்று போன்ற நோய் அறிகுறிகளின் காரணமாகவும் துர்நாற்றம் வீசலாம். நீங்கள் எவ்வளவு பராமரிப்பை பின்பற்றினாலும் இந்த நோய் அறிகுறி காரணமாக துர்நாற்றம் இருக்கும். எனவே உடனே மருத்துவரை அணுகி காரணத்தை உறுதி செய்துகொண்டு சிகிச்சை பெறுவது அவசியம்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Penis Health, Penis Infection