நிபா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் மற்றும் இதுவரை அந்நோயால் உயிரிழந்தவர்களின் விவரங்கள்.
பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவும்
நிபா வைரஸ் பாதிப்புள்ளவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படும். பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவக் கூடிய இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள வவ்வால்கள் சாப்பிட்ட பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும்.

நிபா வைரஸ்
நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் விலகி இருக்கவும்
மரங்களில் வவ்வால் எச்சம் படிந்திருக்க வாய்ப்புள்ளதால், மரம் ஏறுவதை தவிர்க்கலாம். நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நிபா வைரசால் நிகழ்ந்த உயிரிழப்பு
இந்தியாவில் மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் 2001-ம் ஆண்டு முதன் முதலாக பரவியது. இதில்,45 பேர் உயிரிழந்தனர். அதற்கு பின் அண்டை நாடான வங்கதேசத்தில் 2011-ம் ஆண்டு பரவிய நிபா வைரசால் 50 பேர் உயிரிழந்தனர்.
இந்த வைரஸ் காய்ச்சலால் இந்தியாவின் தென் மாநிலமான கேரளத்தில் கடந்த ஆண்டு 17 பேர் உயிரிழந்தனர். நிபா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலி லினி என்பவரும் நோய் தாக்கி உயிரிழந்தார்.
நிபா வைரஸின் முக்கியமான அறிகுறிகள்
லேசான காய்ச்சலுடன் இந்த வைரஸ் பாதிக்கும். பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடினமான தலைவலி , மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், கோமா, ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறும். இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் கூறப்படுகிறது.

நிபாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
தடுப்பு மருந்துகள் கிடையாது
நிபா வைரசுக்கு என்று தனிப்பட்ட மருந்துகளோ தடுப்பூசிகளோ கிடையாது. ஆனால் இந்த வைரஸை தரமான நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு நடைமுறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். அதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பன்றிகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்றும், திறந்தவெளி குடிநீரை குடிக்க கூடாது என்றும் மரத்தில் இருந்து கீழே விழும் பழங்களை உண்ண கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Also see... நிபா வைரஸின் தோற்றமும்... பரவலும்...!
கேரளாவில் மாணவருக்கு நிபா வைரஸ்... சோதனையில் உறுதியானது...!
Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.