ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆன்டிபயாடிக்ஸ் அதிகமா எடுத்துக்கிறீங்களா..? அதன் ஆபத்தான பக்கவிளைவுகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

ஆன்டிபயாடிக்ஸ் அதிகமா எடுத்துக்கிறீங்களா..? அதன் ஆபத்தான பக்கவிளைவுகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

ஆன்டிபயாடிக்ஸ்

ஆன்டிபயாடிக்ஸ்

ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் பெரும்பாலும் வயிற்றில் அசிடிக் ரியாக்ஷனை ஏற்படுத்தலாம் அல்லது குடலில் இரைப்பை குடல் விளைவுகளை (gastrointestinal effects) ஏற்படுத்த கூடும். இதனால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி மற்றும் பல அறிகுறிகள் வெளிப்படலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்டிபயாடிக்ஸ் அல்லது ஆன்டி-பாக்டீரியல்ஸ் என்பவை உடலில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை குறைக்கும் மருந்துகள் ஆகும். பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சக்திவாய்ந்த மருந்துகளாக ஆன்டிபயாடிக்ஸ்கள் இருக்கின்றன.

பாக்டீரியாக்களால் நமக்கு ஏற்பட்டுள்ள தீவிர தொற்றுக்களை ஆன்டிபயாடிக்ஸ் குணப்படுத்துவது மட்டுமின்றி, தொற்றுக்கு காரணமாக இருக்கும் பாக்டீரியாக்கள் மேற்கொண்டு உடலில் பெருகுவதை தடுக்கின்றன. எனினும் பல மருந்துகளை போலவே ஆன்டிபயாடிகளும் பல பக்கவிளைவுகளை கொண்டுள்ளன.

ஆன்டிபயாடிக்ஸ் எடுத்து கொள்வதால் ஏற்படும் பெரும்பாலான பக்கவிளைவுகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்காது என்றாலும் சில அரிய சந்தர்ப்பங்களில் உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்பட கூடியவையாக இருக்கும். எனவே மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர்கள் எத்தனை நாட்கள் ஆன்டிபயாடிக்ஸ் எடுத்து கொள்ள சொல்கிறார்களோ அதனை நாட்கள் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். சில மருத்துவர் அறிவுறுத்தலையும் தாண்டி பல நாட்கள் ஆன்டிபயாடிக்ஸ் எடுப்பது மிதமானது முதல் தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளால் ஏற்படும் சில பொதுவான பக்கவிளைவுகள்:

- ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் ஃபோட்டோசென்சிட்டிவிட்டி எனப்படும் நிலையை ஏற்படுத்த கூடும். சூரிய ஒளியில் வெளியே செல்லும் போது சருமத்தை அதிக சென்சிட்டிவ் கொண்டதாக இந்த நிலை ஆக்குகின்றன. சருமத்தில் நிறமாற்றம் ஏற்பட்டு சன்பர்ன் போன்று காணப்படலாம் அல்லது வெளியே வெயிலில் செல்லும் போது கண்கள் கூசலாம்.

Also Read : மஞ்சள் காமாலை வந்தாலே கல்லீரலில் பிரச்சனை இருக்குனு அர்த்தமா..? மருத்துவர் தரும் விளக்கம்

- ஆன்டிபயாடிக்ஸ் எடுத்து கொள்ளும் பெண்களுக்கு ஈஸ்ட் தொற்று பொதுவானது. யோனியில் காணப்படும் லாக்டோபாகிலஸ் எனப்படும் ஈஸ்ட் தொற்றை கட்டுப்படுத்தும் பயனுள்ள பாக்டீரியாக்களின் உற்பத்தி ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளால் குறைக்கின்றன. யோனியில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களும் சேர்ந்தே அழிவதால் ஆன்டிபயாடிக்ஸ் எடுக்கும் போது ஈஸ்ட் அதிகமாக வளர்கிறது.  சில ஆன்டிபயாடிக்ஸ் ஏற்படுத்தும் பொதுவான பக்கவிளைவுகளில் பற்களின் இயற்கை நிறத்தில் ஏற்படும் மாற்றமும் ஒன்று.

ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளால் ஏற்படும் சில தீவிர பக்க விளைவுகள் :

- ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் பெரும்பாலும் வயிற்றில் அசிடிக் ரியாக்ஷனை ஏற்படுத்தலாம் அல்லது குடலில் இரைப்பை குடல் விளைவுகளை (gastrointestinal effects) ஏற்படுத்த கூடும். இதனால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி மற்றும் பல அறிகுறிகள் வெளிப்படலாம்
- அரிதான சந்தர்ப்பங்களில் ஒரு சில ஆன்டிபயாடிக்ஸ் சில கடும் அலர்ஜிகளை ஏற்படுத்த கூடும். கடும் அலர்ஜி என்பதில் ஹைவ்ஸ் (சரும அழற்சி), தொண்டை மற்றும் நாக்கில் வீக்கம், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பல அறிகுறிகள் ஏற்பட வழிவகுக்கும்.
- சில ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் எடுத்து கொள்பவரின் ரத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்த கூடும். வெள்ளை ரத்த அணுக்களை குறைப்பது போன்ற விளைவுகளால் உடலில் தொற்றுகள் அதிகரிக்க கூடும். அதே போல ரத்தத்தில் இருக்கும் பிளேட்லெட்ஸ் குறைவதால் ஈறுகளில் ரத்தப்போக்கு, ரத்தம் மெதுவாக உறைதல் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
- ஃப்ளோரோக்வினொலோன்ஸ் எனப்படும் பொதுவான வகை ஆன்டிபயாடிக்ஸ் சில இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். இதற்கான சாத்தியம் அரிது என்றாலும், சில ஆன்டிபயாடிக்ஸ் சீரற்ற இதயத் துடிப்பு, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை உருவாக்கலாம்.
- நம் உடலில் இருக்கும் தசைநாண்கள் எலும்புகளை தசைகளுடன் இணைக்கும் தடிமனான நாண்களாக இருக்கின்றன. சில அரிதான சந்தர்ப்பங்களில் ஆன்டிபயாடிக்ஸ் தசைநார் சிதைவை ஏற்படுத்த கூடும்.
First published:

Tags: Antibiotics, Side effects