Home /News /lifestyle /

யோகாசனங்கள் பற்றி மக்களிடையே உள்ள பொய்யான கருத்துக்கள் என்னென்ன?

யோகாசனங்கள் பற்றி மக்களிடையே உள்ள பொய்யான கருத்துக்கள் என்னென்ன?

யோகா

யோகா

Yoga Benefits | யோகா செய்தால் உண்மையில் எடையை குறைக்க முடியுமா, எந்த மாதிரியான யோகாசனங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    யோகா என்பது எடையை குறைக்கவும், சீராக வைத்து கொள்ளவும் உதவ கூடிய ஒரு முக்கிய பயிற்சியாகும். ஆனால், எடையை குறைக்க நினைப்போர் மத்தியில் இது குறித்த பல கட்டுக்கதைகள் உள்ளன. யோகா செய்தால் உண்மையில் எடையை குறைக்க முடியுமா, எந்த மாதிரியான யோகாசனங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதற்கு பின்னுள்ள அறிவியல் பூர்வமான சான்றுகளையும் புரிந்து கொள்ளலாம்.

    கட்டுக்கதைகள்

    நீங்கள் கட்டுக்கதைகளை கண்மூடித்தனமாக நம்புபவர்களில் ஒருவராக இருந்தால், முதலில் அதை நிறுத்த வேண்டிய நேரம் இது. நமது மனித உடலானது, எலும்புகள் மற்றும் தசைகளால் ஆனது. எலும்புக்கூடு உடலுக்கு வடிவத்தையும் கட்டமைப்பையும் தருகிறது, எனவே ஒரு உடல் மற்றவர்களை விட நெகிழ்வானதாக இருந்தால், அவரால் எளிதாக யோகாசனங்களை செய்ய இயலும்.

    மேலும் இது உடல் எடையை எளிதாக குறைக்க உதவும் முக்கிய பயிற்சியாக கருதப்படுகிறது. பொதுவாக யோகா, ஒரு உட்புற பயிற்சி வடிவமாக இருந்தாலும், நிறைய ஆசனங்கள் மற்றும் அசைவுகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் உட்கார்ந்த இருக்க கூடிய வாழ்க்கை முறையை கொண்டோருக்கு இது செய்வது சற்று கடினமாக இருக்கும்.

    ஆசனங்கள்

    யோகா என்பது ஆசனங்களைப் பற்றியது மட்டுமல்ல. உண்மையில், ஆசனங்கள் யோகாவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. சுமார் 200 யோகா வழிமுறைகள் உள்ளன, அவற்றில் ஒன்று தான் ஆசனங்கள்.

    யோகா பயிற்சி என்பது யோகாவின் 8 இன்றியமையாத அம்சங்களை அல்லது மூட்டுகளை பயிற்சி செய்வதாகும். இது வெறும் ஆசனங்கள் மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். யோகாவின் 8 உறுப்புகள் யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரதாயாஹாரம், தாரணை, தியானம் மற்றும் சமாதி என்று அழைக்கப்படுகிறது.

    Read More : கர்ப்பகாலத்தில் யோகா செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?


    பயிற்சி நேரம்

    எதையாவது சாதிக்க, நீங்கள் எங்கிருந்தோ ஒரு இடத்தில் இருந்து தொடங்கியாக வேண்டும். 30 நிமிடம் யோகாசனம் செய்தாலும் அதைச் சரியாக செய்யுங்கள். மேலும் படிப்படியாக உங்களின் நேரத்தை அதிகரிக்கலாம். வெறும் சில நிமிடங்கள் செய்யும் பயிற்சி என்பது உங்களுக்கு பலனை தராது. எனவே யோகாவில் அதன் பயிற்சி நேரமும் முக்கியமானதாகும்.

    யோகாவும் வயதும்

    யோகா என்பது வயது தொடர்பானது அல்ல. உடல் மற்றும் மன நலனைப் பயிற்சி செய்வதில் ஆர்வமுள்ள எவரும் யோகா பயிற்சியை செய்யலாம். யோகா என்பது குறைந்த தாக்கம் கொண்ட பயிற்சி வடிவமாகும், ஆனால் தொடர்ந்து செய்யும் போது அது மற்ற எந்த பயிற்சி வடிவத்தையும் போலவே பயனுள்ளதாக இருக்கும். எனவே, வயதானோர் என்பதால் யோகா ஆசனங்களைத் தவிர்த்து வந்தால், அது சரியாகாது. ஆதலால், உங்கள் யோகா பாயை விரித்து இப்போதே யோகா செய்ய தொடங்குங்கள்.

    கற்றக்கொள்ள எளிது

    யோகா ஆசனங்களைப் பற்றி பல புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் வீடியோக்கள் உள்ளது. யோகாவை முழுமையாகப் பயிற்சி செய்ய நினைத்தால் மட்டுமே அதைக் கற்றுக்கொள்வது எளிது. அதைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற விரும்புவோர், நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் யோகா ஆசனங்களைப் பயிற்சி செய்வது சிறந்தது.

    சுவாச கோளாறுகள்

    சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு பிராணயாமா யோகா என்பது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. பிராணயாமா உண்மையில் ஆஸ்துமா நிலையில் உள்ளவர்களுக்கு உதவ கூடியது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன. இது நுரையீரல் திறனை மேம்படுத்துகிறது மற்றும் அதிக மருந்துகளை எடுத்து கொள்ளும் நிலையில் இருந்து ஒருவரது காப்பாற்றுகிறது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Health, Yoga, Yoga Health Benefits

    அடுத்த செய்தி