Home /News /lifestyle /

ப்ளூபெர்ரி பழங்களை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

ப்ளூபெர்ரி பழங்களை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

காட்சி படம்

காட்சி படம்

ப்ளூபெர்ரியை பழங்களை தினசரி உட்கொண்டு வந்தால், நமது இதய ஆரோக்கியத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

மாதவிலக்கு காலம் முடிந்த பெண்களுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இதய நோய் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி, உலர்ந்த ப்ளூபெர்ரி பவுடர் 22 கிராம் (ஒரு கப் புது ப்ளூபெர்ரி பழங்களுக்கு ஈடானது) அளவுக்கு எடுத்து, தண்ணீரில் கலந்து அருந்த வேண்டும். இதை 12 வாரங்களுக்கு கடைப்பிடிக்கும்போது நம் ரத்த நாளங்களின் உட்புறச் சுவர்களின் செயல்பாடு மேம்படுகிறது.

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் இதுகுறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் கொரோலாடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சரா அர்தானே ஜான்ஸன் கூறுகையில், “ரத்த நாள உட்புறச் சுவர்களான எண்டோதீலியலின் செயல்பாடு, ப்ளூபெர்ரி உட்கொள்வதன் மூலமாக மேம்பாடு அடைகிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த எண்டோதீலியலின் செயல்பாடு குறையும் போது இதயநோய் வளர்ச்சி அடையத் தொடங்குகிறது’’ என்று குறிப்பிட்டார்.



also read : கோடைகாலத்தில் கிடைக்கும் நாவல் பழம்... யாரெல்லாம் சாப்பிட கூடாது..?

ஸ்ட்ரெஸ் குறைகிறது:

உடலில் உள்ள ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைப்பதன் மூலமாக எண்டோதீலியலின் செயல்பாட்டை ப்ளூபெர்ரி ஊக்குவிக்கிறது என்றும் அவர் கூறினார். உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களை பாதிக்கக் கூடியதாக ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் இருக்கிறது.

பாலிபினால்ஸ் மற்றும் பாலிபினால் நிறைந்த ப்ளூபெர்ரி போன்ற உணவுகள் நம் உடலில் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது என்று முந்தைய ஆய்வு மூலமாக தெரிய வந்தது.



இதுகுறித்து ஜான்ஸன் கூறுகையில், “மனித உடலில் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைப்பதிலும், எண்டோதீலியலின் செயல்பாட்டை அதிகரிப்பதிலும், ப்ளூபெர்ரிகளின் பங்கு குறித்து ஆய்வு செய்தோம். இது மட்டுமல்லாமல் இதய நாளச் சுவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இது எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மனித உடலில் இது நேரடியாக ஏற்படுத்தும் பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நம் உடல் நலனுக்கு இது உண்மையிலேயே முக்கியமானது என்பதை உணர முடிந்தது’’ என்று தெரிவித்தார்.

also read : தக்காளியை ஃபிரிட்ஜில் வைப்பது அதன் சுவையை பாதிக்குமா..? எப்படி சேமித்து வைப்பது சிறந்தது..?



பிற உணவுகளிலும் இதேபோன்ற பலன் உண்டு : 

ப்ளூபெர்ரியை போன்றே குறிப்பிட்ட சில காய்கறி மற்றும் பழங்களை தினசரி உட்கொண்டு வந்தால், நமது இதய ஆரோக்கியத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. கொக்கோ, சாக்கலேட், டீ, நட்ஸ், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் மசாலா பொருட்கள் போன்றவற்றில் இதே பலன் கிடைக்கிறது.

ப்ளூபெர்ரியில் கிடைக்கும் இதர பலன்கள் : 

ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஆய்வுகளின் படி, நம் உடலில் வேறுசில நோய்களை கட்டுப்படுத்தவும் ப்ளூபெர்ரி உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரவும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும், சிறுநீர் நோய்த்தொற்று பிரச்சனையில் இருந்து விடுபடவும் ப்ளூபெர்ரி உதவிகரமாக இருக்கும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Fruits

அடுத்த செய்தி