தினமும் இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்படும் பலருக்கும் தூக்கமின்மை மனித உடலுக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவிப்பதா..? போதுமான தூக்கம் இல்லையென்றால் என்ன செய்வது..? உள்ளிட்ட பல் கேள்விகள் எழுகின்றன. நல்ல தரமான தூக்கத்தை பெற முடியாமல் தவிக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்குமே... அடுத்த நாள் நீங்கள் எப்படி உணருவீர்கள்.! சோர்வாகவும், எரிச்சலாகவுமே இருந்திருப்பீர்கள்..
தூக்கமின்மையால் நீண்டகால விளைவுகள் ஏற்படும் என்பது உண்மையே. ஒவ்வொரு இரவும் சராசரியாக 7 - 9 மணிநேரம் தூண்மகள் இருப்பது ஒருவரை மந்தமாக மற்றும் கோபமாக ஆக்குவதோடு மட்டுமல்லாமல் மன திறன்களை குறைக்கிறது மற்றும் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. ஏனென்றால் மோசமான தூக்கம் பல உடல்நல பிரச்சனைகளுடன் தொடர்புடையது. சரியாக தூங்காவிட்டால் ஏற்படும் சில ஆரோக்கிய தீங்குகள் குறித்து பார்க்கலாம்.
மத்திய நரம்பு மண்டலம்:
நமது மத்திய நரம்பு மண்டலம் உடலின் முதன்மை தகவல் நெடுஞ்சாலை (primary information highway) ஆகும். இது சரியாக வேலை செய்ய நல்ல தூக்கம் அவசியம். ஆனால் பல நாட்கள் நீடிக்கும் தூக்கமின்மை பொதுவாக தகவல்களை அனுப்பும் மற்றும் செயலாக்கும் நடைமுறைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலம்:
தூங்கும் போது நமது நோயெதிர்ப்பு மண்டலம் ஆன்டிபாடிகள் மற்றும் சைட்டோகைன்கள் போன்ற பாதுகாப்பு, தொற்று-எதிர்ப்பு பொருட்களை உற்பத்தி செய்கிறது. ஆனால் சரியாக தூங்காவிட்டால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிறது. போதுமான தூக்கம் இல்லையென்றால் நாம உடலுக்குள் ஊடுருவும் தொற்றுக்களை எதிர்த்து போராட முடியாமல் போகும். நீண்ட கால தூக்கமின்மை நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நாட்பட்ட நோய்களை உருவாக்கும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
also read : இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 5 உணவுகள் - பெண்களுக்கான ஸ்பெஷல் கைட்லைன்ஸ்!
சுவாச மண்டலம்:
தூக்கத்திற்கும் சுவாச அமைப்புக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. OSA போன்ற இரவுநேர சுவாசக் கோளாறு உங்கள் தூக்கத்தில் குறுக்கிட்டு தூக்கத்தின் தரத்தை குறைக்கலாம். இரவு முழுவதும் சரியாக தூங்க முடியாமல் போவதால் ஏற்படும் தூக்கமின்மை கோளாறு ஆஸ்துமா போன்ற ஏற்கனவே இருக்கும் சுவாச பிரச்சனைகளை மேலும் மோசமாக்கும்.
செரிமான மண்டலம்:
அதிகமாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதுடன், தூக்கமின்மை அதிக எடை மற்றும் பருமனாக மாறுவதற்கான மற்றொரு ஆபத்து காரணியாக உள்ளது. சில நேரங்களில் உடற்பயிற்சி செய்ய முடியாத அளவு மிகவும் சோர்வை தூக்கமின்மை ஏற்படுத்துகிறது. போதுமான கலோரிகளை எரிக்காமல் விட்டுவிடுவதால் காலப்போக்கில் உடல் எடை அதிகரித்து கொண்டே செல்லும். சாப்பிட்ட பிறகு உடலில் இன்சுலின் குறைவாக வெளியிட காரணமாகிறது தூக்கமின்மை மற்றும் இன்சுலின் எதிர்ப்போடு தொடர்புடையது. இந்த இடையூறுகள் நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
also read : T-செல்ஸ் குறித்து தெரியுமா? உடலில் எப்போது உற்பத்தியாகும்? தூங்கும் முன்பு இவற்றை கவனிங்க!
இதய அமைப்பு:
போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தூக்கமின்மை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது. இவை தவிர வளர்ச்சி ஹார்மோன் உற்பத்தியை தூக்கமின்மை பாதிக்கலாம், இந்த ஹார்மோன்கள் உடல் தசைகளை உருவாக்கவும், செல்கள் மற்றும் திசுக்களை சரிசெய்யவும் உதவுகின்றன. சரியான தூக்கம் மற்றும் செயல்பாடு தான் இந்த ஹார்மோனை வெளியிட உதவுவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.