முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன..? யாருக்கு என்ன சிகிச்சை சிறந்தது..?

புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன..? யாருக்கு என்ன சிகிச்சை சிறந்தது..?

புற்றுநோய்க்கான சிகிச்சைகள்

புற்றுநோய்க்கான சிகிச்சைகள்

பொதுவாகவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு ஒரே ஒரு அறுவை சிகிச்சை மட்டுமே தேவைப்படலாம். புற்று பாதிக்கப்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிய பின், பெரும்பாலான நோயாளிகளுக்கு கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவையும் அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

புற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லும் ஒரு கொடிய நோயாகும். பொதுவாக ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், நோயாளி பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம். எந்த வகையான புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, எந்த அளவுக்கு புற்று பரவியுள்ளது, நோயாளியின் உடல்நிலை எப்படி இருக்கிறது ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாகவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு ஒரே ஒரு அறுவை சிகிச்சை மட்டுமே தேவைப்படலாம். புற்று பாதிக்கப்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிய பின், பெரும்பாலான நோயாளிகளுக்கு கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவையும் அளிக்கப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சை பற்றி தெரிந்துகொள்ள மற்றும் புரிந்து கொள்ள பல்வேறு விஷயங்கள் உள்ளன. புற்றுநோய்க்கான சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கும்போது பதட்டமும் குழப்பமும் ஏற்படுவது இயற்கையானது. ஆனால் உங்கள் மருத்துவரிடம் பேசுவது மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய பல்வேறு வகையான சிகிச்சைகள் பற்றி அறிந்துகொள்வது, உங்களுக்கு பல விதத்தில் உதவியாக இருக்கும். பல்வேறு வகையான புற்றுநோய் சிகிச்சைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

புற்றுநோய் சிகிச்சைக்கான பயோமார்க்கர் சோதனை

பயோமார்க்கர் சோதனை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கானது. பயோமார்க்கர் சோதனை என்பது புற்றுநோயைப் பற்றிய தகவல்களை வழங்கக்கூடிய மரபணுக்கள், புரதங்கள் மற்றும் பிற பொருட்களை (பயோமார்க்ஸ் அல்லது புற்றுக் கட்டி குறிப்பான்கள் என அழைக்கப்படும்) கண்டறிவதற்கான ஒரு வழியாகும்.

பயோமார்க்கர் சோதனை புற்றுநோய்க்கு எந்த வகையான சிகிச்சையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் தீர்மானிக்க உதவும். ஒவ்வொருவருக்கும் அவரவர் புற்று நோய்க்கான குறிப்பிட்ட பயோமார்க்ஸ் உள்ளது. சில உயிரியல் குறிப்பான்கள் சில புற்றுநோய் சிகிச்சைகளின் செயல்திறனை பாதிக்கலாம். கடுமையான புற்றுக்கட்டிகள் மற்றும் லுகேமியா உள்ளவர்களுக்கு பயோமார்க்கர் சோதனைகள் செய்யப்படலாம்.

புற்றுநோய் சிகிச்சைகள்

அறுவை சிகிச்சை: அறுவை சிகிச்சை செய்து நீக்கக்கூடிய இடங்களில் புற்று வளர்ந்து இருந்தால், அறுவை சிகிச்சை முதல் சிகிச்சையாக வழங்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோய் ஸ்டேஜ் 1, கர்ப்ப வாய் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். பெரும்பாலும், ஸ்டேஜ் 1 புற்று நோய்க்கான சிகிச்சையாக அறுவை சிகிச்சை விளங்குகிறது. சில நேரங்களில், அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் புற்று நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும் அல்லது புற்று நோய் செல்களை அறுவை மூலம் நீக்க முடியாத இடத்தில் இருந்தால், கீமோதெரபி சிகிச்சை தொடரும்.

உடலுக்கு அத்தியாவசியமான நல்ல கொலஸ்டிரால் பற்றி தெரியுமா..? எந்த உணவில் கிடைக்கிறது..?

கீமோதெரபி: கீமோதெரபி என்பது புற்றுநோய் செல்களைக் கொல்லும் அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் மருந்துகளைக் குறிக்கிறது. இது, சுருக்கமாக கீமோ என்றும் அழைக்கப்படுகிறது.

புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும், மீண்டும் வருவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கும் அல்லது அதன் வளர்ச்சியைத் தடுக்கவும் அல்லது குறைக்கவும் கீமோதெரபி பயன்படுத்தப்படலாம். வலி மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும் கட்டிகளுக்கு கீமோதெரபி சிகிச்சை பயன்படுத்தப்படலாம்.

பல வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க கீமோதெரபி பயன்படுத்தப்படுகிறது. கீமோ தெரபி சலைன் மூலம் மருந்தாக அல்லது மாத்திரையாக வழங்கப்படுகிறது. சிலருக்கு, கீமோதெரபி மட்டுமே சிகிச்சையாக இருக்கும். ஆனால் கீமோதெரபிக்கு கூடுதலாக வழங்கப்படும் மற்ற புற்றுநோய் சிகிச்சைகளும் உள்ளன.

ஹார்மோன் சிகிச்சை: ஹார்மோன் சிகிச்சை என்பது அட்வான்ஸ்டு புற்றுநோய் சிகிச்சையாகும். பெயரில் இருப்பதைப் போல, ஹார்மோன்களைப் பயன்படுத்ய்ஹி புற்றுநோயின் வளர்ச்சியை மெதுவாக்குகிறது அல்லது நிறுத்துகிறது. இது நாளமில்லா சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும் புற்றுநோய் அறிகுறிகளைப் போக்குவதற்கும் ஹார்மோன் சிகிச்சையைப் பயன்படுத்தலாம்.

ஹார்மோன் சிகிச்சையானது புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம் அல்லது அதன் வளர்ச்சியை முழுவதுமாக நிறுத்தலாம், மீண்டும் புற்று ஏற்படும் அபாயத்தை தடுக்கலாம்.

புரோபயோடிக் உணவுகள் பெண்ணுறுப்பு தொற்று அபாயங்களை தடுக்கிறது - ஆய்வு

அறுவைசிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்த முடியாத புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களில் அறிகுறிகளைக் குறைக்க அல்லது தடுக்க ஹார்மோன் சிகிச்சை பயன்படுத்தப்படலாம்.

புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு ஹார்மோன் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, ஹார்மோன் சிகிச்சை மற்ற புற்றுநோய் சிகிச்சைகளுடன் இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது. எந்த வகையான சிகிச்சை தேவை என்பது புற்றுநோயின் வகை, புற்றுநோய் எந்த அளவிற்கு பரவியுள்ளது, புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஹார்மோன்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளைப் பொறுத்து அமையும்.

ஹைபர்தர்மியா: ஹைபர்தெர்மியா என்பது புற்றுநோய் செல்களை அழிக்கவும், சாதாரண செல்கள் சேதமடைவதைத் தடுக்கவும் உடல் செல்களை 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பப்படுத்தும் ஒரு சிகிச்சையாகும். புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான ஹைபர்தர்மியாவை வெப்ப சிகிச்சை, வெப்ப நீக்கம் அல்லது தெர்மோதெரபி என்றும் அழைக்கப்படுகிறது. ஹைபர்தர்மியா சிகிச்சைக்கு வெப்பத்தை உருவாக்க பல்வேறு வகையான நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஹைபர்தர்மியா என்பது புற்றுநோய்க்கான பரவலாகக் கிடைக்கக்கூடிய சிகிச்சை அல்ல. ஆனால் சில மையங்களில் மூளை புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் சர்கோமா போன்ற சில சிக்கலான புற்றுநோய்களுக்கு கீமோதெரபி போன்ற பிற சிகிச்சைகளுடன் இணைத்து இது பயன்படுத்தப்படுகிறது.

மழைக்காலத்தில் செரிமான அமைப்பு ஏன் மந்தமாகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்...

இம்யூனோதெரபி: இம்யூனோதெரபி என்பது ஒரு வகை புற்றுநோய் சிகிச்சையாகும், இது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் உடலைத் தொற்று மற்றும் பிற நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது வெள்ளை அணுக்கள், உறுப்புகள் மற்றும் நிணநீர் மண்டலத்தின் திசுக்களால் ஆனது. இம்யூனோதெரபி என்பது ஒரு வகையான உயிரியல் சிகிச்சை. உயிரியல் சிகிச்சை என்பது உயிரியல் பொருட்களைப் பயன்படுத்தி அளிக்கப்படும் சிகிச்சையாகும்.

நோயெதிர்ப்பு சிகிச்சை மருந்துகள் பல வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அறுவை சிகிச்சை, கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை போல நோயெதிர்ப்பு சிகிச்சை இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை.

கதிர்வீச்சு சிகிச்சை: கதிர்வீச்சு சிகிச்சையானது ரேடியேஷன் தெரபி என்றும் அழைக்கப்படுகிறது. இது புற்றுநோய் செல்களை அழைக்கவும், புற்றுக்கட்டிகளை சுருக்கவும் அதிக அளவு கதிர்வீச்சைப் பயன்படுத்தும் புற்றுநோய் சிகிச்சையாகும். ரேடியேஷன் தெரபி உங்கள் உடலுக்குள், புற்று பாதித்த இடத்தில் சிறிய அளவிலான கதிர்வீச்சைப் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில், அதிக அளவு கதிர்வீச்சைப் பயன்படுத்தும் சிகிச்சை புற்றுநோய் செல்களை அழிப்பதோடு, டிஎன்ஏவையும் சேதப்படுத்துகிறது மற்றும் அவற்றின் வளர்ச்சியைக் குறைக்கிறது. டிஎன்ஏ-சேதமடைந்த புற்றுநோய் செல்கள் பிரிவதை அல்லது அழிக்கப்படுவதை நிறுத்துகின்றன.

top videos

    சேதமடைந்த செல்கள் அழிக்கப்படும் போது, ​​உடல் அவற்றை வெளியேற்றுகிறது. ஆனால், கதிர்வீச்சு சிகிச்சை புற்றுநோய் செல்களை உடனடியாக அழிக்காது. புற்றுநோய் செல்கள் இறக்கும் விதத்தில் டிஎன்ஏ பாதிப்பு ஏற்பட நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். தொடர்ந்து, கதிர்வீச்சு சிகிச்சை முடிந்த பிறகும் புற்றுநோய் செல்கள் வாரங்கள் அல்லது மாதங்கள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன.

    First published:

    Tags: Cancer, Cancer symptoms