Home /News /lifestyle /

வெயில் காலங்களில் உண்டாகும் அக்கி... சின்னம்மை நோயின் அறிகுறியா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்

வெயில் காலங்களில் உண்டாகும் அக்கி... சின்னம்மை நோயின் அறிகுறியா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்

சின்னம்மை

சின்னம்மை

தலைவலி, வயிறு மற்றும் மார்பில் சொறி ஏற்படுதல், பிறப்புறுப்புகள், முகம் மற்றும் கண்களில் தோன்றக்கூடிய சொறி, தொடும் போது வலித்தல், காய்ச்சல், சோர்வு, அரிப்பு, திரவத்தால் நிரப்பப்பட்ட கொப்புளங்கள் உடைந்து திறத்தல் போன்ற முதன்மையான அறிகுறிகள் மூலம் அக்கியை வருவதை அறியலாம்.

மேலும் படிக்கவும் ...
வெயில் காலம் வந்தாலே அதன் கூடவே சில நோய் கிருமிகளும் வந்துவிடும். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் பல வித பாதிப்புகளை நமது உடலில் ஏற்படுத்த கூடும். பொதுவாக வெயில் காலங்களில் அம்மை, வியர்க்குரு, அரிப்பு, போன்ற பாதிப்புகள் வருவது வழக்கம். இது எதனால் வருகிறது என்று நம்மில் பலரும் அறிந்திருப்பது இல்லை.

இதை போலவே அக்கி போன்ற நோய் தாக்குதல்களும் ஏற்பட கூடும். அக்கிக்கும் அம்மைக்கும் உண்மையில் தொடர்பு உண்டா? இதற்கான அறிகுறிகள் என்னென்ன, எப்படி சமாளிப்பது என்பன போன்ற பல விஷயங்களை இனி தெரிந்து கொள்வோம்.

அக்கி :

அக்கி என்பது சின்னம்மை வைரஸ் உடலில் மீண்டும் செயல்படும் ஒரு நிலையாகும். இது வலிமிகுந்த சொறியை ஏற்படுத்தும். இது உடலில் புண்களையும், கொப்பளங்களையும் உருவாக்கும். இவை நோய்த்தொற்றால் ஏற்படுகின்றன, இது வாரிசெல்லா ஜோஸ்டர் வைரஸை (VZV) மீண்டும் தூண்ட செய்கிறது. இந்த வைரஸ் நரம்பு செல்களில் செயலற்ற நிலையை உண்டாக்கி அக்கி போல் தோன்ற வைக்கும். இந்த அக்கியானது சின்னம்மை உள்ள எந்தவொரு நபரையும் பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சொறி மறைந்த பிறகும் அக்கியில் இருந்து வரும் வலி தொடர கூடும். இது போஸ்ட் ஹெர்பெடிக் நியூரால்ஜியா எனப்படும் நிலையாகும். இதில் இருந்து நிவாரணம் பெற வைரஸ் தடுப்பு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். குழந்தை பருவத்தில் போடப்படும் சின்னம்மை தடுப்பூசி அல்லது இளமை பருவத்தில் போடப்படும் அக்கி அம்மை தடுப்பூசிகள் இதற்கு உதவும்.



காரணங்கள் :

இந்த அக்கி வருவதற்கு சில காரணிகள் உள்ளன. மோசமான நோயெதிர்ப்பு சக்தி, 50 வயதை கடந்தவர்கள், 18 மாதங்களுக்கு முன்பு சின்னம்மையில் இருந்து விடுப்பட்டவர்கள், எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளிகள், ஸ்டெராய்டுகளின் பக்க விளைவுகள், புற்றுநோய்க்கான கதிர்வீச்சு அல்லது கீமோதெரபி சிகிச்சை பெற்றவர்கள் ஆகிய காரணிகளை கொண்டவர்களுக்கு அக்கி வரக்கூடும்.

வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த 15 உணவுகளை இன்றே தவிர்த்திடுங்கள்..!

அறிகுறிகள் :

தோலில் சிவந்த புண்கள் அல்லது கொப்புளங்களை உருவாக்கும் அக்கி வருவதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். தலைவலி, வயிறு மற்றும் மார்பில் சொறி ஏற்படுதல், பிறப்புறுப்புகள், முகம் மற்றும் கண்களில் தோன்றக்கூடிய சொறி, தொடும் போது வலித்தல், காய்ச்சல், சோர்வு, அரிப்பு, திரவத்தால் நிரப்பப்பட்ட கொப்புளங்கள் உடைந்து திறத்தல் போன்ற முதன்மையான அறிகுறிகள் மூலம் அக்கியை வருவதை அறியலாம்.



உடல்நல பிரச்சனைகள் :

அக்கி வருவதால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக வலிமிகுந்த கண் தொற்றுகள், கொப்பளங்களால் அதிக வலி, மூளையில் வீக்கம் ஏற்படுதல், கேட்கும் திறனில் பிரச்சனைகள், மனநிலை மாற்றம், முகத்தில் முடக்கம் ஏற்படுதல், கொப்புளங்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பாக்டீரியா தோல் தொற்று உருவாகுதல் போன்ற உடல்நல சிக்கல்கள் அக்கியினால் தோன்றலாம்.

எனவே மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால், அவசியம் உங்களின் மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Chicken Pox, Summer Heat

அடுத்த செய்தி