ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வாய்ப்புண் எப்படி உருவாகிறது..? சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள்...

வாய்ப்புண் எப்படி உருவாகிறது..? சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள்...

வாய்ப்புண்

வாய்ப்புண்

கேன்கர் சோர்ஸ் என்று பொதுவாகக் கூறப்படும் வாய்ப்புண் (mouth ulcer) வாயைச் சுற்றி, வாயின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் தோன்றும். இதனால் எரிச்சல், வலி ஏற்படும் மற்றும் அசௌகரியமாக உணர்வீர்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கேன்கர் சோர்ஸ் என்று பொதுவாகக் கூறப்படும் வாய்ப்புண் (mouth ulcer) வாயைச் சுற்றி, வாயின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் தோன்றும். இதனால் எரிச்சல், வலி ஏற்படும் மற்றும் அசௌகரியமாக உணர்வீர்கள். சிவப்பு அல்லது லேசான மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த அல்சர், செரிமானக் கோளாறு, பாக்டீரியா தொற்று, அலர்ஜி அல்லது காயங்களால் உண்டாகும். பெரும்பாலும், வாய்ப்புண் என்பது தானாகவே சரியாகக் கூடியது மற்றும் ஆபத்தில்லாதது தான்.

ஆனால், பேசும்போது, சாப்பிடும் போது வலி மற்றும் அசௌகரியத்தை உணர்வீர்கள். மேலும், வாய்ப்புண்ணின் அளவு மற்றும் எவ்வளவு பரவியுள்ளது என்பதன் அடிப்படையில் என்ன வகையான அல்சரால் பாதிக்கப்பட்டுள்ளீர் மற்றும் என்ன சிகிச்சை தேவை என்பதையும் முடிவு செய்யலாம்.

வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள்

இந்த காரணங்களால் தான் வாய்ப்புண் ஏற்படுகிறது என்பது இது வரை உறுதியாகத் தெரியவில்லை. மவுத் அல்சர் என்பது பல விதமான காரணங்களால் உருவாகிறது.

  • தேசிய மருந்து நூலகத்தின் படி, புகைப்பிடிப்பவர்கள் பழக்கத்தை கைவிட்ட பிறகு, அவர்களுக்கு வாய்ப்புண் தோன்றும்
  • போதிய அளவு தூங்காமல் இருந்தால் வாய்ப்புண் தோன்றும்
  • எமோஷனல் ஸ்ட்ரெஸ்
  • வைட்டமின் சத்துக் குறைபாடு
  • வளர் பருவத்தில், உடல் மாற்றத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்
  • அதிக காரமான மசாலாக்கள் நிறைந்த உணவு

உஷார்... வெள்ளைப்படுதல் இந்த நிறங்களில் இருந்தால் அது தொற்றாக இருக்கலாம்...

வாய்ப்புண்ணின் வகைகள்

மைனர் அல்சர்: மைனர் அல்சர் என்பது சிறிய அளவிலான புண்களைக் குறிக்கும். இந்தப் புண்கள் 2mm முதல் 8mm வரை காணப்படும். அதிக வலி மட்டும் எரிச்சல் இல்லாதது. மேலும், சில நாட்கள் முதல் ஓரிரு வாரங்களில் தானாக சரியாகிவிடும்.

ஹெர்பெட்டிஃபார்ம் அல்சர்: இந்த வகை அல்சர் பெரும்பாலும் பெரியவர்களையே பாதிக்கும். இவை மிக மிக சிறிய அளவில் மற்றும் கூட்டமாகக் காணப்படும். இது வகை அல்சர் மீண்டும் மீண்டும் தோன்றும். ஆனால், ஓரிரு வாரத்தில் சரியாகிவிடும்.

மேஜர் அல்சர்: மற்ற வகை அல்சர்களை விட இது பெரிய அளவில் காணப்படும் மற்றும் புண் வாய் முழுவதும் ஆழமாக பரவியிருக்கும். இந்த வகை அல்சர் முழுவதுமாக நீங்க, குறைந்தது 6 வாரங்கள் தேவைப்படலாம்.

கர்ப்பத்திற்கு பிறகு பெண்கள் உடலில் ஏற்படும் 6 பொதுவான மாற்றங்கள் என்னென்ன?

வாய்ப்புண்ணை சரி செய்ய உதவும் எளிமையான வீட்டுக் குறிப்புகள்

கேன்கர் சோர்ஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் ஏற்பட்ட வாய்ப்புண்ணுக்கு, உப்புநீரை கொப்புளிப்பதே மிகச் சிறந்த தீர்வாக அமையும். ஒரு நாளைக்கு 4 முதல் 6 முறை உப்புநீரில் வாயைக் கொப்புளித்தால் மவுத் அல்சர் விரைவில் குணமாகும்.

உப்பு நீரைப் போலவே, பேக்கிங் சோடாவும் விரைவான நிவாரணம் அளிக்கும். மேஜர் அல்சருக்கும், நீங்கள் மிகவும் அசௌகரியமாக உணரும் போதும், பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கொப்புளித்தால் எரிச்சல் மற்றும் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும், இது அழற்சியைக் குறைக்கும்.

சிவந்த புண்கள், வலி மற்றும் எரிச்சலை உணர்ந்தால், நீங்கள் தேனைப் பயன்படுத்தலாம். தேனில் உள்ள மருத்துவ குணங்கள், எரிச்சலைக் குறைத்து பாக்டீரியா தொற்றுக்கு நிவாரணம் அளிக்கும்.

First published:

Tags: Home remedies, Mouth care, Mouth Ulcer