Home /News /lifestyle /

Menstrual Cup : மாதவிடாய் கப் என்றால் என்ன..? பயன்படுத்தும் முறைகளும்.. பாதுகாப்பு அமசங்களும்..!

Menstrual Cup : மாதவிடாய் கப் என்றால் என்ன..? பயன்படுத்தும் முறைகளும்.. பாதுகாப்பு அமசங்களும்..!

Menstrual Cup : மாதவிடாய் கப்

Menstrual Cup : மாதவிடாய் கப்

Menstrual Cup : ஒரு பெண்ணுக்கு பிரேசியரை தேர்வு செய்வது போல, சரியான அளவு மென்சுரல் கப்பை தேர்வு செய்ய வேண்டும். அது மட்டுமின்றி, ப்ளீடிங் எவ்வளவு அதிகமாக அல்லது குறைவாக இருக்கிறதோ, அதன் படியும், அளவை தேர்வு செய்யலாம்.

பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தில் மாதவிடாய்க்கு பெறும் பங்கு உள்ளது. மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிர்வகிக்கிறது. மாதவிடாய் காலத்தில் துணி பயன்படுத்திய சூழல் மறைந்து தற்போது சானிடரி நாப்கின் மற்றும் டாம்பான்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்ற காரணத்தால் அதற்கும் மாற்று வழி இடையிலும் இருக்கிறதா என்று பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், மீண்டும் துணி நாப்கின்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தாத மற்றும் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்காத ஒரு புதிய தேர்வாக மென்சுரல் கப் என்று கூறப்படும் மாதவிடாய் கப்புகள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு பெண் தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 16,000 பேடுகள் பயன்படுத்துகிறார் என்று ஆய்வு தெரிவிக்கின்றது. இதன் விளைவாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட சனிட்டரி நாப்கின்கள் ‘மென்சுரல் வேஸ்ட்’ என்று இந்தியா முழுவதும் காணப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்களில் டாக்ஸிக் பொருட்கள் ரசாயனங்கள் மற்றும் சிந்தடிக் மெட்டீரியல்களும் உள்ளன. இதனால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு மாற்றாகத்தான் மென்சுரல் கப் என்று கூறப்படும் மாதவிடாய் கப்புகள் பயன்பாட்டில் வந்துள்ளன.



மாதவிடாய் கப்புகளை பொறுத்தவரை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. நாப்கின்களை விட நீண்ட காலம் உழைக்கக்கூடிய தன்மையும் இருக்கிறது. ஆனால் பலருக்கும் மாதவிடாய் கப்புகள் பற்றிய சரியான புரிதல் அல்லது எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விவரங்கள் தெரிவதில்லை.

எப்படி துணி பயன்படுத்துவதில் இருந்து நாப்கின்களுக்கு மாறினார்களோ, அதேபோல நாப்கின் அல்லது டாம்பான் பயன்பாட்டில் இருந்து மாதவிடாய் கோப்பைக்கு மாறும் காலம் தொலைவில் இல்லை.

மாதவிடாய் கப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே.,

மாதவிடாய் கப்புகள் என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது?

மாதவிடாய் கப் என்பது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பெண்களுக்கான தயாரிப்பு. இது, மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரத்தில், சிலிகான் அல்லது ரப்பரால் செய்யப்படுகிறது. மெலிதான ஃபுனல் உடன் கூடிய, பெல்-வடிவத்தில் இருக்கும் கப்புகளை, டாம்பான்கள் பயன்படுத்துவது போல, யோனியில் எளிதாக இன்சர்ட் செய்யலாம். இந்த கப், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப் போக்கை சேகரிக்கும்.

மாதவிடாய் தள்ளிப் போனாலும் கர்ப்பப் பரிசோதனையில் நெகட்டிவ் வர என்ன காரணம்..?

உயர்தர மெட்டீரியலால் பயன்படுத்தப்படுவதால், இதை பல முறை பயன்படுத்தலாம். ஒவ்வொரு பெண்ணின் உதிரப்போக்குக்கு ஏற்ப, 6 முதல் 10 மணி நேரத்துக்கு ஒரு முறை, கப்பை ரிமூவ் செய்து, சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்திய பின்பு, நன்றாக கொதிக்கும் நீரில் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும்.



மாதவிடாய் கப்பை எப்படி பயன்படுத்துவது?

மாதவிடாய் கப்பை பயன்படுத்தும் முன்னும் பின்னும் கைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

மென்சுரல் கப்பை நன்றாக மடித்து, வஜைனாவுக்குள் நுழைக்க வேண்டும். கப், வஜைனாவுக்குள் பொருந்தும் வரை கொஞ்சம் கொஞ்சமாக செலாக சுழற்றிய படி உள்ளே செலுத்த வேண்டும். உள்ளே சென்றதும், கப் விரிந்து, வஜைனைவின் அளவு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப, வஜைனாவின் உட்புற சுவர்களில் பொருத்தும்படி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். இதனால் ‘லீக்’ ஆகாது, ஆடைகளில் கறை படியாது. சிலிகான் மற்றும் ரப்பர் இரண்டுமே மிகவும் நெகிழ்வாக இருப்பதால், இதை எளிதாக வஜைனாவில் பொருத்தலாம். நாப்கின்கள் மென்சுரல் பிளீடிங்கை உறிஞ்சுவது போல அல்லாமல், கோப்பையில் அது சேகரிக்கப்படும். கப்பை வெளியே எடுக்க, மெதுவாக கப்பின் அடிப்பகுதியை இழுத்தால் போதும்.



சரியான அளவை தேர்ந்தெடுப்பது எப்படி?

ஒரு பெண்ணுக்கு பிரேசியரை தேர்வு செய்வது போல, சரியான அளவு மென்சுரல் கப்பை தேர்வு செய்ய வேண்டும். அது மட்டுமின்றி, ப்ளீடிங் எவ்வளவு அதிகமாக அல்லது குறைவாக இருக்கிறதோ, அதன் படியும், அளவை தேர்வு செய்யலாம்.

இயற்கையாக, சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் (வஜைனல் டெலிவரி) பெரிய அளவு கப்பை தேர்வு செய்யலாம். மற்றவர்கள் மீடியம் அளவு மற்றும் டீனேஜ் பெண்கள் மிகச் சிறிய அளவிலான கப்பை தேர்வு செய்யலாம்.

நீங்கள் அணியும் பிரா உங்களுக்கு சௌகரியமாக உள்ளதா..? இறுக்கமாக இருந்தால் இந்த பிரச்சனை வரலாம்..!

மென்சுரல் கப்பை நீண்ட காலத்துக்கு பயன்படுத்தலாம். நல்ல தரமான கப்பை வாங்கி பயன்படுத்தினால், சானிடரி நாப்கின்களுக்காக மாதாந்திரம் செலவழிக்க வேண்டாம். நீங்கள் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம். அது மட்டுமின்றி, கப்புகள் நீண்ட நேரம் லீக் ஆகாமல் தடுக்கும். அடிக்கடி நீங்கள் பேடுகளை மாற்ற வேண்டுமென்ற அவசியமில்லை. பேடுகளை விட சுத்தமானது மற்றும் சுகாதாரமானது, தொற்று ஏற்படும் அபயம் இல்லை. மேலும், சுற்று சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுக்காக்க உதவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Menstrual Cup, Periods

அடுத்த செய்தி