உடலை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு அனைவரும் முதலில் தேர்வு செய்து உடற்பயிற்சி தான். இதற்காகவே ஜிம்மிற்கு பெரும்பாலான மக்கள் செல்வதை நாம் பார்த்திருப்போம். பொதுவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் குறிக்கோளாக உள்ள நிலையில், இதற்கு முதலில் நீங்கள் எந்த ஒர்க் அவுட் செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
கார்டியோ பயிற்சி மற்றும் எடை தூக்குதல்:
கார்டியோவாஸ்குலர் அல்லது கார்டியா உடற்பயிற்சிகள் என்பது உங்களது இதயத்துடிப்பை நீண்ட நேரத்துக்கு அதிகரிக்கக்கூடிய பயிற்சிகளாக உள்ளது. ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவது,ஓட்டப்பயிற்சி மற்றும் நீச்சல் அடிப்பது போன்ற பல வகைகள் இதில் இருப்பதால் உடலுக்கு நல்ல பலன் அளிக்கும். இதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளையும் கரைக்கவும் உதவுகிறது.
இதே போன்று தான் எடை தூக்குதல். அதிகளவிலான எடையை நீங்கள் தூக்கி ஒர்க் அவுட் செய்யும் போது உங்களுக்கு தசைகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும். இப்படி இரண்டு பயிற்சிகளும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்றாலும் எதனை முதலில் தொடங்க வேண்டும் என சந்தேகம் அனைவருக்கும் எழக்கூடும். இதற்கான பதில் தான் இங்கே....
கார்டியோ அல்லது எடை தூக்குதல் முதலில் எந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்?
ஜிம்மிற்கு செல்லும் நீங்கள் முதலில் எடை தூக்குதல் பயிற்சியை மேற்கொண்டால் மிகவும் சோர்வடைந்துவிடுவீர்கள். எனவே முதலில் கார்டியோ பயிற்சியை செய்ய வேண்டும். பின்னர் சற்று வார்ம் அப்பிற்கு பிறகு மீண்டும் எடை தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது உடல் எடையைக்குறைப்பதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். இதோடு இரண்டு உடற்பயிற்சிகளையும் எளிதில் செய்து முடிக்க முடியும். இது போன்று நீங்கள் கார்டியோ பயிற்சி அல்லது எடை தூக்குதல் இரண்டும் உங்கள் ஆரோக்கியத்திற்கும், தசையை அதிகரிப்பதற்கும் மற்றும் உடல் கொழுப்பைக்குறைப்பதற்கும் சிறந்ததாக அமையும் என ஆய்வுகள் கூறுகின்றன.
நாம் உண்ணும் இந்த உணவுகள் தான் இதய நோய் அதிகரிக்க காரணமா..! அதிர்ச்சியளிக்கும் தகவல்
முக்கியமாக கார்டியோ மற்றும் எடைப்பயிற்சி ஆகிய இரண்டையும் நீங்கள் 100 சதவீதம் முழுமையாக செய்ய விரும்பினால், நீங்கள் அவற்றை வெவ்வேறு நாள்களில் செய்யலாம். இது உங்களது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதோடு, உங்களை மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க பெரும் உதவியாக இருக்கும். எனவே நீங்கள் உடலுக்கு ஏற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்குகள்.
உடற்பயிற்சிகள் அளவுக்கு மீறினால் ஏற்படும் பாதிப்புகள்:
உடல் சுறுசுறுப்பாக இருப்பதற்குத் தான் உடற்பயிற்சிகளை நாம் மேற்கொள்கிறோம். ஆனால் அதே வேளையில் உடற்பயிற்சிக்கானக் கால அளவு அதிகமாகவும் போது தசைகளின் வேதனையை நீங்கள் அனுபவிக்க நேரிடும். இதோடு அளவுக்கு மீறிய பயிற்சிகளை நீங்கள் செய்யும் போது, கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனை அதிகரிக்கிறது. இதனால் இரவில் தூக்கம் இல்லாமலும் தவிர்க்க நேரிடும் என ஆய்வுகள் கூறுகிறது. மேலும் காலையில் மிகவும் சோர்வாகவும் இருக்கக்கூடும்.
பொதுவாக நாம் எந்தவொரு உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும், ஆரம்பத்தில் சற்று சோர்வாகத் தான் இருக்கும். எனவே நம் உடலுக்கு ஏற்றவகையில் கொஞ்சம் கொஞ்சமாக உங்களது உடற்பயிற்சி செய்யும் கால அளளை நீட்டித்துக்கொள்ளுங்கள். அதே சமயம் அளவுக்கு மீறி பயிற்சி செய்வதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.