உடல் பருமன் என்பது உலகம் முழுவதிலும் காணப்படும் பெரிய உடல் நலக் குறைபாடு ஆகும். எடை குறைப்பதற்கு, பலரும் பல்வேறு முறைகளில் முயற்சி செய்து வருகின்றனர். சமீபத்திய ஒரு ஆய்வு, எடை குறைக்க குளிர்காலம் மிகவும் ஏற்றது என்று அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட குளிர்காலம் நெருங்கி விட்ட நிலையில், எடை குறைப்பு முயற்சி ஈடுபடுபவர்களுக்கு இந்த ஆய்வு முடிவு மிகவும் நல்ல செய்தியாக வெளிவந்துள்ளது.
எடை குறைப்பது எப்படி என்ற கேள்விக்கு பல்வேறு பதில்களை நீங்கள் பெறக்கூடும். ஆனால், ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது, தொடர்ச்சியான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மற்றும் உங்கள் தினசரி பழக்கவழக்கங்களில் மாற்றம் ஆகியவை மட்டுமே. நீங்கள் செய்யும் சிறிய செயலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.
பொதுவாக, வெயில் கொளுத்தும் கோடை காலம் தான் அதிக கலோரிகளை எரிக்க உதவும். இதனால் எடை குறைப்பு முயற்சிகள் கோடைகாலத்தில் சிறந்த பலனைத் தரும் என்று பரவலாகக் கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால், செல் ரிபோர்ட்ஸ் மெடிசின் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை, குளிர் காலம் தான் எடை குறைக்க ஏற்ற காலம் என்று தெரிவித்துள்ளது.
சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருக்கும் காலத்தில் உடற்பயிற்சி செய்வது, உங்கள் உடலை வெவ்வேறு தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள உதவும். மேலும், உடலின் உள்ள அதிக கலோரிகளை எரிக்கும் கெப்பாசிட்டியும் அதிகரிக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
தட்பவெப்ப நிலைக்கும், உடல் எடை குறைப்புக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பது பற்றிய ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு....
கோபன்ஹெகன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் எட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாணவர்கள் குளிர் காலத்தில் நீச்சல் பயிற்சி செய்தனர். இரண்டு ஆண்டு அவர்கள் நீச்சல் பயிற்சி பெற்ற பிறகு, நீராவி (sauna) செஷன்களுக்கு சென்றனர். மற்றொரு குழுவினர், குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் நீச்சலுக்கு பழகினர்.
செரிமானத்தை எளிமையாக்க சாப்பிடும் போதும், சாப்பிட்ட பின்னரும் இதை செய்யுங்கள்..!
குளிர்காலத்தில் நீச்சல் பயிற்சி செய்தவர்கள், தட்பவெப்ப மாற்றத்தை எளிதாக ஏற்றுக்கொள்ளும் திறன் பெற்றிருந்தனர். அவர்களால், எளிதாக குளிர்ச்சியான சூழலில் இருந்து வெப்பமான சூழலுக்கு மாற அல்லது வெப்பமான சூழலிலிருந்து குளிர்ச்சியான சூழலுக்கு மாற முடிந்தது. மேலும், பிரவுன் ஃபேட் (brown fat) என்ற ஒரு குறிப்பிட்ட வகையான உடல் கொழுப்பும் குளிர் கால நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் உடலில் எளிதாக ஆக்டிவேட் ஆகிறது.
இந்த கொழுப்பும் குளிர்காலத்தில் அல்லது குளிரான சூழலில் உங்கள் உடலின் தட்பவெப்ப நிலையை நிர்வகிக்க உதவுகிறது. குளிர் காலத்தில், பாதுகாப்பு நடைமுறையாக உடல் அதிகப்படியான வெப்பத்தை உருவாக்கும். உடலே அதிகமாக வெப்பத்தை உருவாக்குவதால், அதிக கலோரிகள் எரிக்கப்படும். அது மட்டுமின்றி, அதிக அளவு பிரவுன் கொழுப்பு கொண்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, இதய நோய்கள், நீரிழிவு மற்றும் ஹைப்பர்டென்ஷன் போன்ற பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.
எனவே , வரப்போகும் குளிர்காலத்தை பயன்படுத்தி, ஆரோக்கியமாக உடல் எடை குறைக்கும் முயற்சியில் உங்கள் இலக்கை அடையுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.