எடை இழப்பு Vs கொழுப்பு இழப்பு : இரண்டிற்கும் என்ன வித்தியாசம்..? நீங்கள் எதை பின்பற்ற வேண்டும்..?

உடல் கொழுப்பு மற்றும் உடல் எடை

எடை இழப்பை விட கொழுப்பு இழப்பை நடைமுறைப்படுத்தினால் நாட்பட்ட நோய்கள், வீக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க முடியும்.

  • Share this:
அதிக உடல்எடையை குறைத்து ஒரு நல்ல உடலமைப்பை பெற வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால், எடை இழப்பு மற்றும் கொழுப்பு இழப்பு என்ற இரண்டு சொற்களையும் காட்டாயம் கேட்டிருப்பீர்கள். இரண்டுமே உடல் எடையை குறைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளன. ஆனால் இவை வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன.

எடை மற்றும் கொழுப்பு இழப்பு இரண்டும் அவற்றின் சொந்த வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இருப்பினும் உடல் எடை குறைப்பில் ஈடுபடுபவர்கள் இந்த இரண்டிற்கும் வித்தியாசத்தை முதலில் அறிந்திருக்க வேண்டும். அதிலும், இதில் எதை செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், எடை இழப்பு என்பது ஒட்டுமொத்த எடையில் கிலோ வீழ்ச்சியைக் குறிக்கிறது. இதில் நீர், எடை, கொழுப்பு மற்றும் தசை என அனைத்தையும் இழக்கிறீர்கள். மறுபுறம், கொழுப்பு இழப்பு என்பது உடல் கொழுப்பு அளவுகளில் குறிப்பிடத்தக்கது வீழ்ச்சியைக் குறிக்கிறது. கொழுப்பைக் குறைப்பதன் மூலம் எடை குறைப்பில் ஈடுபடுவது ஒரு குறிப்பிட்ட இலக்காக செயல்படுகிறது. கொழுப்பு இழப்பு மற்றும் எடை இழப்பு ஆகிய இரண்டு சொற்களும் எடை இழக்க ஒப்பீட்டளவில் முக்கியம் தான். ஆனால் உங்கள் முன்னுரிமை தேவைகள் என்ன என்பதை தீர்மானிப்பது உங்கள் இலக்குகளை விரைவாக அடையவும், நீங்கள் விரும்பும் மாற்றத்தை அடையவும் உதவும்.கொழுப்பை இழப்பது ஏன் உடல் எடையை குறைப்பதற்கு சமமல்ல?

கொழுப்பு இழப்பு மற்றும் எடை இழப்பு ஆகியவை மாறி மாறி பயன்படுத்தப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, எடை இழக்க முயற்சிக்கும் பெரும்பாலான மக்கள் அதற்காக மேற்கொள்ளப்படும் செயல்பாட்டில் உடல் கொழுப்பை இழக்க வேண்டும். இருப்பினும், உடல் கொழுப்பை இழப்பது என்பது எடை இழப்புக்கு சமமானதல்ல. இரண்டாவதாக, எடை இழப்பு போலல்லாமல், கொழுப்பு இழப்பை ஒருவரின் எடையை பயன்படுத்தி கணிக்க முடியாது. இந்த காரணத்தினாலேயே ஒருவர் உடல் எடையை குறைக்கும் போது அவர்களின் எடையை கண்காணித்து ஒருவர் தனது கொழுப்பை இழந்திருக்கீர்களா அல்லது தசையை இழந்திருக்கிறீர்களா என்று சொல்ல முடியாது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நீங்கள் எதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்?

எடை குறைப்பு என்பதைக் நீங்கள் இலக்காக கொண்டிருந்தாலும், ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பெறவேண்டுமானால், கொழுப்பு இழப்பு செயல்முறையை நீங்கள் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். எடை இழப்பு என்பது உடல் முழுவதும் நீர் மற்றும் தசை இழப்பை உள்ளடக்கியிருக்கிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மறுபுறம், எடை இழப்புக்கு மேல் கொழுப்பு இழப்பை நடைமுறைப்படுத்தினால் நாட்பட்ட நோய்கள், வீக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க முடியும்.இது தசையின் இழப்பைக் குறைக்கும் மற்றும் அதனை பராமரிக்க உதவும். கொழுப்பு இழப்பு செயல்முறையை பின்பற்றும் போது, இது உடலுக்கு ஆபத்தை தரும் அதிக கொழுப்பை அகற்ற உதவுகிறது. அதேசமயம் மெலிந்த திசு வளர்ச்சியையும் பராமரிக்கிறது. தசை திசுக்கள் கூடுதலாக, வலிமை, சுறுசுறுப்பு மற்றும் அதிக கலோரிகளை எரிக்க உதவுகின்றன. கொழுப்பு இழப்பு குறைப்பு உடலில் உள்ளுறுப்பு கொழுப்பு அளவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இது மிகவும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு ஆகும். ஒட்டுமொத்தமாக, எடை இழப்புடன் ஒப்பிடுகையில், கொழுப்பு இழப்பில் கவனம் செலுத்துவது சிறந்த உடல் செயல்பாடு மற்றும் உயிர்ச்சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

உடல் எடையை குறைக்க நடைபயிற்சி மட்டும் செய்தால் போதாது..! இதனையும் கட்டாயம் பின்பற்றுங்கள்...

கொழுப்பு இழப்பை எவ்வாறு கண்காணிக்க முடியும்?

நீங்கள் உண்மையில் எவ்வளவு கொழுப்பை இழக்கிறீர்கள் என்பதை அறியவும் அல்லது உங்கள் தசை வெகுஜனத்தை தீர்மானிக்கவும் எடை மெஷின் உதவாது. இருப்பினும், உடல் கொழுப்பு அளவுகோல் போன்ற மிகவும் துல்லியமான கண்டறிதல் வழிகளைப் பயன்படுத்துவது உங்கள் உடல் கொழுப்பு சதவீதத்தை அளவிட உதவும். மேலும் நீங்கள் அடுத்து எடுக்க வேண்டிய செயல்களை நோக்கி உங்களுக்கு வழிகாட்டும். ஸ்கின்ஃபோல்ட் கேப்பர்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதும் உடல் கொழுப்பு கலவையைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். உங்கள் சுற்றளவை சரிபார்க்க எளிய இடுப்பு-நாடாவைப் பயன்படுத்துவதும் எளிதானது என்றும், இது கொழுப்பு இழப்பைக் கண்காணிக்க ஒரு சிறந்த வழி என்றும் சிலர் நம்புகிறார்கள்.கொழுப்பை இழப்பதோடு தசை வலிமையை எவ்வாறு பராமரிப்பது?

நீங்கள் கொழுப்பு இழப்பில் கவனம் செலுத்தியவுடன், அடுத்த செயல்முறை தசை வெகுஜன இழப்பு மற்றும் பராமரிப்பை ஆதரிக்கும் வழிகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதனை நீங்கள் செய்யாவிட்டால் கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கும் சில ஹேக்குகளும் பின்வாங்கக்கூடும். இதுதவிர, எடை இழப்பு விஷயங்களில் தீவிரமாக வேலை செய்வதை விட கொழுப்பு வடிவத்திலும், அதே நேரத்தில், தசை வெகுஜனத்தைப் பாதுகாப்பதிலும் எடை இழக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேறு சில வழிகளும் உள்ளன. அவை,

* நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் போதுமான புரதம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

* குறைவான கலோரிகளைச் சாப்பிட்டு, உங்கள் உடலில் கலோரி அளவை குறைப்பதை நோக்கமாகக் கொள்ளுங்கள்

* கார்டியோ மற்றும் எடை பயிற்சி போன்ற தீவிர உடற்பயிற்சி வடிவங்களில் கவனம் செலுத்துங்கள்.

மூச்சு பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவை கோவிட் நோயாளிகளை மீட்க உதவுமா?

* நீங்கள் கொழுப்பைக் குறைப்பதன் மூலம் உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துகிறீர்கள் என்றால், ஒவ்வொரு வாரமும் 500 முதல் 700 கிராம் எடையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published: