• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • எடை இழப்பு Vs கொழுப்பு இழப்பு - இரண்டிற்குமான வேறுபாடு என்? எது சிறந்தது..?

எடை இழப்பு Vs கொழுப்பு இழப்பு - இரண்டிற்குமான வேறுபாடு என்? எது சிறந்தது..?

உடல் எடை குறைத்தல்

உடல் எடை குறைத்தல்

இரண்டுமே உடல்பருமனை குறைப்பது என்று பொருள்பட்டாலும், சற்று ஆழமாக பார்த்தால் இவை ஒரே விஷயத்தை குறிப்பவை அல்ல என்பது புலப்படும். weight loss மற்றும் fat loss இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது ஆரோக்கியமாக இருக்க உதவும்.

  • Share this:
    உடல் எடையை இழக்கும் முயற்சியில் ஈடுபடும் பலரும் கேள்விப்படும் இரு சொற்கள் "எடை இழப்பு" (weight loss) மற்றும் "கொழுப்பு இழப்பு" (fat loss). இந்த 2 சொற்களையும் கேட்கும் போது குழப்பம் ஏற்படுவது இயல்பானது. ஏனென்றால் பலரும் இந்த 2 சொற்களும் ஒரே அர்த்தம் தானே என்று நினைப்பது.

    இரண்டுமே உடல்பருமனை குறைப்பது என்று பொருள்பட்டாலும், சற்று ஆழமாக பார்த்தால் இவை ஒரே விஷயத்தை குறிப்பவை அல்ல என்பது புலப்படும். weight loss மற்றும் fat loss இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது ஆரோக்கியமாக இருக்க உதவும்.

    எடை இழப்பு & கொழுப்பு இழப்பு என்ன வித்தியாசம்?

    * எடை இழப்பு என்பது நம் உடலில் இருக்கும் தசை, நீர் மற்றும் கொழுப்பு ஆகியவற்றை குறைப்பதன் மூலம் நம்முடைய ஒட்டுமொத்த உடல் எடையும் குறைவதை குறிக்கிறது.

    * கொழுப்பு இழப்பு என்பது உடலில் தங்கி இருக்கும் கொழுப்பின் அளவு குறைப்பதன் மூலம் ஏற்படும் உடல் எடை இழப்பை மட்டுமே குறிக்கிறது. மேலும் எடை இழப்புடன் ஒப்பிடுகையில் மிகவும் குறிப்பிடத்தக்க ஆரோக்கியமான இலக்காக கொழுப்பு இழப்பு கருதப்படுகிறது.

    உடலில் இருந்து குறைவது எடையா அல்லது கொழுப்பா?

    நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் போது உங்கள் உடலில் இருந்து குறையும் சில கிலோக்களை தெரிந்து கொள்ள வெயிட் பயன்படுத்துவது என்பது பொதுவான ஒரு வழி. ஆனால் இந்த பொது முறையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் வெயிட் லாஸ் செய்துள்ளீர்களா அல்லது ஃபேட் லாஸ் செய்துள்ளீர்களா என்பதை வெயிட் மிஷின் மூலம் தெரிந்து கொள்ள முடியாது. மாறாக உடல் எடையை அளவிட பாடி ஃபேட் ஸ்கேல், பயோஎலெக்ட்ரிக்கல் இம்பெடன்ஸ் அல்லது காலிப்பர்ஸ் உள்ளிட்ட மற்ற முறைகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும். மேற்கண்டவை உங்கள் உடலில் இருந்து நீங்கள் இழந்த கொழுப்பளவின் துல்லித்தை உங்களுக்கு காட்டலாம்.



    ஃபேட் லாஸில் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும்?

    நம் உடல் கொழுப்பு, லீன் பாடி வெயிட் அல்லது ஃபேட்-ஃப்ரீ மாஸ், தசைகள், எலும்புகள், நீர், பல உறுப்புகள் போன்ற பல்வேறு கூறுகளை கொண்டவை. இவை அனைத்தும் சம விகிதத்தில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மாறாக உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரித்தால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், ஹை கொலஸ்ட்ரால், இதய நோய் உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே நம் உடலில் எப்போதும் ஆரோக்கியமான அளவில் கொழுப்பை பராமரித்து வருவது பல நாள்பட்ட நோய்கள் உண்டாகும் அபாயத்தை வெகுவாக குறைக்கும்.

    டைம் மேனேஜ்மென்ட் செய்வதில் மிகவும் சிரமப்படுகிறீர்களா..? உங்களுக்கான சில ஆலோசனைகள்...

    உடலில் இருக்கும் அதிக கொழுப்பை எப்படி குறைப்பது:

    எடை இழப்புடன் ஒப்பிடும் போது கொழுப்பை இழக்கும் முயற்சி அதிக நேரம் எடுக்கும். நம் உணவில் புரதத்தை அதிகம் சேர்த்து கொள்வது உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்கவும், கட்டுக்குள் வைக்கவும் உதவும். ஸ்ட்ரென்த்னிங் எக்ஸர்சைஸ்களை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை எரித்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும். அதிக கலோரிகளை குறைக்க கட்டாயப்படுத்தும் டயட்டை பின்பற்றாமல் எப்போதும் சீரான டயட்டையே பின்பற்ற வேண்டும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: