ஜிம்முக்கு போகாமலே உடல் எடையை இப்படியும் குறைக்கலாம்..

காட்சி படம்

நீங்கள் வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைக்க சில டிப்ஸ் இதோ..

 • Share this:
  உடல் எடையை  குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சித்தாலும் சிலருக்கு வெய்ட் மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைப்பதற்காகவே வேண்டுமென்று ஜிம் (gym) செல்வார்கள். அப்பறம் என்ன ஆகும்னு உங்களுக்கே தெரியும். அந்த ஜிம் பயணம் ஒரு வாரமோ ரெண்டு வாரமோ, அதன் பின் நோ எக்சர்சைஸ். சிலரோ தினமும் காலையில் எழுந்ததும் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றையாவது தொடர்ந்து செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள்.

  அதுவும் சில நாட்களில் தோல்வியிலேயே முடியும். ஏனெனில் இன்றைய அவசர காலத்தில், எதையும் விரைவில் முடிக்க வேண்டும் என்று வேகமாக செய்வோம். அதனால் உடல் விரைவில் சோர்வடைந்து, தூக்கம் மட்டுமே அதிகம் வரும். ஏதாவது வேலை சொன்னால், செய்ய சோம்பேறித்தனமாக இருக்கும். தொடர்ந்து அலுவலக வேலை, வீட்டு வேலையும் சேர்ந்துகொண்டு உடற்பயிற்சியை தள்ளி போடும் சூழல் வரும்.  ஸ்கிப்பிங், குதித்தல் மற்றும் ஜாக்கிங் பயிற்சி : ஸ்கிப்பிங் ஒரு சிறுவயது விளையாட்டுதான். இதற்கு வெறும் கயிறு மட்டும் போதுமானது. ஆகவே வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கும் போது, தோட்டம் அல்லது மாடியில் விளையாடலாம். ஜாக்கிங் என்று சொன்னதும் வெளியே செல்ல வேண்டும் அல்லது உடற்பயிற்சி இயந்திரங்கள் மூலம்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே, ஒரே இடத்தில் நின்று கொண்டே ஜாக்கிங் செய்யலாம். சிறுவயதில் நாம குஷியாக நண்பர்களுடன் சேர்ந்து குதித்திருப்போம். ஆனால் அத்தகைய குதிக்கும் பயிற்சியை செய்தாலும், உடலில் ஆங்காங்கு ஒட்டியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து, எடையை குறைக்கும்.


  மேற்சொன்ன பயிற்சிகள், குறைந்த நேரத்தில் அதிக பயிற்சிகளை செய்ய உதவும். நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் உங்கள் ஆற்றல் குறையவில்லை என்பதையும், சரியான தசை கொழுப்புகளை நீங்கள் குறிவைத்து இயக்குகிறீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: