சமீப காலமாக பலரையும் பாதித்து வரும் ஆட்டோஇம்யூன் நோய்களில், ஹைப்போ தைராய்டிசம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. கழுத்து பகுதியில் இருக்கும் தைராய்டு என்ற கிளாண்டில் சுரக்கும் ஹார்மோன் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் அவசியம். இந்த ஹார்மோன் குறைவாக சுரக்கும் பொழுது அல்லது ஹார்மோன் சுரக்காமல் போனால் இருக்கும் நிலை ஹைப்போ தைராய்டிசம் என்று கூறப்படுகிறது.
பயோ டெக்னாலஜி தேசிய மையத்தின் தகவல் மையத்தின் கருத்துப்படி ஐந்து சதவிகித்தினர் இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிரந்தர தீர்வு அல்லது சிகிச்சை இல்லாத நிலையில் ஹைப்போ தைராய்டிசம் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் உட்கொள்ள வேண்டிய சூழலை ஏற்படுத்தும்.
ஹைப்போ தைராய்டிசம் பாதிப்புன் முதல் அறிகுறி, உடல் எடை அதிகரிப்பு மற்றும் நாள் முழுவதும் சோர்வாக உணர்வது ஆகும். தீவிரமான முடி கொட்டுவது, குளிரான வெப்பநிலையை எதிர்கொள்ள முடியாத தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, ஆகியவை அனைவரிடமும் காணப்படும் அறிகுறிகள்.
அதேபோல தைராய்டு பாதிப்பால் மிகவும் அவதிப்படுவது, எடை அதிகரிப்பு ஏற்படுவதால் தான். எதை செய்தால் எடை குறையும் என்பது சாதாரணமாகவே மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. பொதுவாக கூறப்படும் எடை குறைப்பு வழிமுறைகள் அல்லது துப்ஸ் எதுவுமே ஹைப்போ தைராய்டிசம் நோயாளிகளுக்கு பொருந்தாது. உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு இருந்தால் இந்த வழக்கமான எடை குறைக்கும் டிப்ஸ் எதுவுமே பலனளிக்காது.
லோ-கார்ப் டயட்: பொதுவாகவே எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். லோ-கார்ப எனப்படும் கார்போஹைட்ரேட் குறைவான அளவுள்ள உணவுகள் மட்டுமே இருக்கும் டயட்டை பின்பற்றவேண்டும் என்று கூறப்படுவதுண்டு. வழக்கமாக சாப்பிடும் அளவிலிருந்தே கார்போஹைட்ரேட் உணவுகளை கொஞ்சம் குறைத்து சாப்பிட்டாலே எடையில் மாற்றம் தெரியும். ஆனால் தைராய்டு பாதிப்பு இருப்பவர்களுக்கு இது பலன் அளிக்காது. மேலும் இது பாதிப்பை அதிகரிக்கும். உடலில் இருக்கும் தைராய்டு அளவு ஏற்கனவே குறைந்துள்ளது, நீங்கள் ஆற்றல் இல்லாமல் சோர்வாக உணர்வீர்கள். அதை சமன் செய்வதற்கு கார்போஹைட்ரேட் உணவுகள் மிகவும் அவசியம். காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
தவறான டயட்… நவீன வாழ்க்கை முறை… உடல் எடை குறைப்பில் நீங்கள் செய்யும் பொதுவான தவறுகள்!
உணவு முறை மாற்றம்: ஹைப்போ தைராய்டிசம் உடலின் அனைத்து முக்கிய செயல்பாடுகளையும் பாதிக்கிறது. இதில் செரிமானமும் அடங்கும். வழக்கத்தை விட செரிமானம் மிகவும் தாமதமாகும். உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகளும் ஏற்படலாம். எனவே உணவுகளை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் சாப்பிடலாம். அதாவது வழக்கமாக மூன்று வேளை சாப்பிடுவீர்கள் என்றால் அதை நீங்கள் ஆறு அல்லது ஏழாகப் பிரித்து குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடலாம். ஆனால், இவ்வாறு செய்வது, உங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம். எனவே, இந்த முறையை பின்பற்றும் போது, கார்ப்ஸ், கொழுப்பு, வைட்டமின்கள் உள்ளிட்ட அனைத்து சத்துக்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
லோ கலோரி உணவுகள்: எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். அதாவது நீங்கள் எவ்வளவு கலோரிகள் சாப்பிடுகிறீர்களோ, அவை எரியும் அளவுக்கு உடல் உழைப்பு இருந்தால் எடை குறையும். அது மட்டுமின்றி ஆரம்ப காலத்தில் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் குறைவான கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவார்கள். ஆனால் ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு உள்ளவர்கள் எடை குறைக்கும் முயற்சியில் லோ கலோரி உணவுகளை அல்லது டயட்டை பின்பற்றக்கூடாது. ஏற்கனவே ஹைப்போ தைராய்டிசம் உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதித்து பாதித்து இருக்கிறது. இந்நிலையில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hypothyroidism, Weight loss