வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழ சாறு... உடல் எடையை சீக்கிரமே குறைக்க சிம்பிள் டிப்ஸ்..!
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழ சாறு... உடல் எடையை சீக்கிரமே குறைக்க சிம்பிள் டிப்ஸ்..!
லெமன் வாட்டர்
லெமன் ஜூஸை சற்று வெதுவெதுப்பான நீரில் கலந்தால் அதுவே லெமன் வாட்டர் ஆகும். பொதுவாக லெமன் வாட்டர் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
உடல் எடையை குறைக்க நீங்கள் டயட்டில் இருக்க திட்டமிட்டிருந்தால் நிச்சயம் எலுமிச்சை நீரை (லெமன் வாட்டர்) பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். எடை இழக்கும் பயணத்தில் பெரும்பாலும் ஊட்டச்சத்து நிபுணர்கள், உடற்பயிற்சி பயிற்சியாளர்கள், மற்றும் மருத்துவர்களால் முக்கியமாக பரிந்துரைக்கப்படுவது லெமன் ஜூஸ். உங்கள் எடை இழப்பு பயணத்தை சிறப்பாக தொடங்க தினமும் லெமன் வாட்டர் எடுத்து கொள்வது ஒரு சிறந்த வழியாகும். மேலும் எப்போது பார்த்தாலும் வெறும் தண்ணீரை குடிப்பதற்கு பதில் லெமன் ஜூஸ் கலந்த தண்ணீர் ஒரு சிறந்த மாற்றாகும்.
லெமன் ஜூஸை சற்று வெதுவெதுப்பான நீரில் கலந்தால் அதுவே லெமன் வாட்டர் ஆகும். பொதுவாக லெமன் வாட்டர் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த மேஜிக் டிரிகை காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடிக்கும் போது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது என்று பலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையில் எடையை குறைக்க உதவுகிறதா..?
குறிப்பாக சர்க்கரை சேர்க்கவில்லை என்றால் லெமன் வாட்டரில் கலோரிகள் குறைவாகவே இருக்கும். Healthify Me-யின் தரவுகளின் படி, ஒரு கிளாஸ் ஆரஞ்சுஜூஸில் இருக்கும் 110 கலோரிகளுடன் ஒப்பிடும் போது, அரை எலுமிச்சை ஜூஸ் கொண்ட ஒரு கிளாஸ் தண்ணீரில் 6 கலோரிகள் மட்டுமே உள்ளது. வைட்டமின் சி நுகர்வுக்கு எலுமிச்சை ஒரு வளமான ஆதாரம் ஆகும். இது நீரேற்றம், சருமத்தின் தரம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது. இவை அனைத்தும் எடை இழப்பு மற்றும் எடை மேலாண்மைக்கு துணை செய்கின்றன. இயற்கையில் லெமன் வாட்டர் அமிலத்தன்மை கொண்டது, ஆனால் அது செரிமான அமைப்பில் நுழைந்தவுடன் கார விளைவை கொண்டிருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
லெமன் வாட்டர் உண்மையில் எடை இழப்புக்கு உதவுகிறதா.?
எடை இழப்புக்கு லெமன் வாட்டர் ஒரு உண்மையான கூட்டாளியாகும். ஏனென்றால் இது பசியை அடக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற பிற இனிப்பு பானங்களை குடிப்பதை கட்டுப்படுத்தும். லெமன் வாட்டர் உடலில் ஹைட்ரேஷனை அதிகரிக்கவும் உதவுகிறது. முக்கிய பண்டிகைகள் மற்றும் பெரிய நிகழ்வுகளில் பங்கேற்று பல வேளை விருந்து உண்ட பிறகு லெமன் வாட்டர் எடுத்து கொள்வது நல்லது. ஏனெனில் இது நம் உடலை சரியான பாதையில் வைப்பதற்கு சிறந்த வழி என்கிறார்கள் நிபுணர்கள்.
லெமன் வாட்டர் பற்றி கூறும் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஷிவானி சிக்ரி, நாளின் துவக்கத்தில் எலுமிச்சையை சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் நாளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. பகலில் உங்கள் வயிறு நிரம்பியதாக வைத்திருக்க மற்றும் அதிகம் சாப்பிடும் ஆர்வத்தை குறைக்க லெமன் வாட்டர் உதவுவதாக ஷிவானி மேலும் கூறினார். உங்கள் காலை உணவுக்கு முன் லெமன் வாட்டரை குடிப்பது பகலில் பசியின் பசியை குறைக்கிறது. ஆக மொத்தம் குறைந்த கலோரி, வளர்சிதை மாற்றம் அதிகரிப்பு, பசி குறைப்பு, ஹைட்ரேட்டாக வைத்திருப்பது உள்ளிட்டவற்றின் மூலம் காலையில் வெறும் வயிற்றில் லெமன் வாட்டர் குடிப்பது எடை இழப்பிற்கு உதவுகிறது.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.