ஒரே வாரத்தில் 91 கிலோவிலிருந்து 90.6 கிலோவாக குறைந்த சமீரா ரெட்டி : தனது எடை குறைப்பு பற்றி இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி..!

ஒரே வாரத்தில் 91 கிலோவிலிருந்து 90.6 கிலோவாக குறைந்த சமீரா ரெட்டி : தனது எடை குறைப்பு பற்றி இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி..!

நடிகை சமீரா ரெட்டி

சமீரா எது சாப்பிடுவதாக இருந்தாலும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே சாப்பிடுகிறார்.

  • Share this:
தமிழ் திரையுலகில் வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை சமீரா ரெட்டி எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கிறார். நேற்று இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்த அவரது த்ரோபேக் புகைப்படம் நெட்டிசன்கள் இடையே வைரலானது.

ஆளே அடையாளம் தெரியாமல் குண்டாக இருக்கும் தனது த்ரோபேக் புகைப்படத்தை ஷேர் செய்த நடிகை சமீரா, எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. இந்த உருவத்தில் நான் இருந்த போது கேட்ட புண்படுத்தும் கருத்துக்களை தாண்டி செல்வது கடினமாக இருந்தது என்று கூறி சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இதனிடையே ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்கும் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்(Intermittent fasting) எனப்படும் டயட் முறை பற்றிய தனது அனுபவத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார் சமீரா.

எடை குறைப்பு என்பது எளிதான காரியமல்ல. இதற்காக பலர் பலவிதமான டயட்டுகளை கடைபிடித்து வருகின்றனர். குறைந்த நேர விரதம், நீண்ட நேர விரதம், இடைவெளி விட்டு விரதம் (இது தான் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்) உள்ளிட்ட பல முறைகள் உள்ளன. இப்போ ட்ரெண்டிங்கில் இருப்பது இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் தான். இந்த விரத முறையில் காலை அல்லது இரவு உணவு சாப்பிடாமல் 24 மணி நேரத்தை 16 மணி நேர விரதம், 8 மணிநேர உணவு என்று பிரித்து கொண்டு இருக்கலாம். எப்போதும் போல எல்லா உணவையும் சாப்பிடலாம். ஆனால் தொடர்ந்து 16 மணி நேரத்திற்கு விரதம் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

பிசிஓஎஸ் பாதிப்பு பெண்களின் தலைமுடி மற்றும் சருமத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்..?

வெள்ளிக்கிழமையான இன்று ஃபிட்னஸ் ஃப்ரைடே என்று கூறி இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ள சமீரா, தனது எடை இலக்கை அடைய இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையை முயற்சித்து பலன் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எடை குறைப்பு மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை சீர் செய்ய உதவும் இந்த முறை விரதத்தை சமீபத்தில் முயற்சித்துள்ளார் சமீரா. 
View this post on Instagram

 

A post shared by Sameera Reddy (@reddysameera)


இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் துவக்கும் முன் 91 கிலோ இருந்த சமீரா தற்போது 90.6 கிலோ எடையில் இருப்பதாக உற்சாகமுடன் இன்ஸ்டா வீடியோவில் தெரிவித்துள்ளார். தனது எடை குறைப்பு முயற்சி குறித்து இன்ஸ்டாவில் கூறி உள்ள சமீரா, "இன்று காலை களைப்புடன் எழுந்தேன், ஆனால் 45 நிமிடம் யோகா செய்தேன். எக்காரணம் கொண்டும் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கிலிருந்து பின்வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்".

சமீராவின் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்:

16: 8 என்ற விகிதப்படி இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை பின்பற்றும் சமீரா எது சாப்பிடுவதாக இருந்தாலும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே சாப்பிடுகிறார். இதில் திரவ உணவுகள் மற்றும் நீர் சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்கிறார். காலையில் ஹெர்பல் டீ அல்லது பால் மற்றும் சர்கரையின்றி பிளாக் டீ குடிக்கிறார்.

காலை 11 மணி பிற்பகல் 2 மணி மாலை 6 மணி என மூன்று முறை தேவையானதை சாப்பிட்டு கொள்வதாகவும், அதன் பின் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தான் எதுவாக இருந்தாலும் சாப்பிடுவதாகவும் சமீரா தெரிவித்துள்ளார். இந்த இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் தனக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்த இரவில் ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்த உதவியுள்ளதாக கூறி உள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published: