ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

6 மாதத்தில் 27 கிலோ வரை எடையை குறைக்கனுமா..? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! 

6 மாதத்தில் 27 கிலோ வரை எடையை குறைக்கனுமா..? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! 

எடை குறைப்பு

எடை குறைப்பு

தனது பழக்க வழக்கத்தில் 7 முக்கியமான மாற்றங்களை செய்த அமெரிக்க பெண்மணி ஒருவர் 6 மாதத்தில் 27 கிலோ வரை தனது உடல் எடையைக் குறைத்து சாதனை படைத்துள்ளார். 

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிக்கன் பிரியாணியில் தொடங்கி பீட்சா வரை கண்ணில் பட்டதை எல்லாம் சாப்பிட்டாலே போது சில மாதங்களிலேயே உடல் எடை ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆனால் ஜாக்கிங், வாக்கிங், எக்ஸர்சைஸ், டயட் என ஆண்டுக்கணக்கில் முயற்சி செய்தாலும் அவ்வளவு எளிதில் எடையைக் குறைக்க முடியாது.

உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சி மற்றும் டயட் உடன் சில முக்கியமான மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும். அப்படி தனது பழக்க வழக்கத்தில் 7 முக்கியமான மாற்றங்களை செய்த அமெரிக்க பெண்மணி ஒருவர் 6 மாதத்தில் 27 கிலோ வரை தனது உடல் எடையைக் குறைத்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க பெண்மணியின் சாதனை:

அமெரிக்காவைச் சேர்ந்த கரி ஹியூஸ் நியூமன் தனது கணவருடன் இணைந்து புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். புதிதாக தொடங்கப்பட்ட வணிகத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல வேண்டும் மன அழுத்தம், சாப்பிடவும், தூங்கவும் நேரமில்லாமை போன்ற காரணங்களால் அவளது உடல் எடைய 248 பவுண்டுகள், அதாவது 112 கிலோ அளவிற்கு உயர்ந்துள்ளது.

திருமண நாளான்று கணவருடன் சுற்றுலா சென்ற நியூமன் மலையேற முடியாமல் மிகவும் சிரமட்டுள்ளார். தனது அதிகப்படியான உடல் எடை காரணமாக அவரால் நடக்க முடியாமல் போயுள்ளது. தனது உடல் நிலை மோசமடைந்ததை எண்ணி வருந்திய அவர், எப்படியாவது தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

உடல் எடை அதிகரிப்பால் முழங்கால் வலி, சோம்பல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார். இதுமட்டுமின்றி நியூமனின் குடும்பத்தினருக்கு இருதய நோய், சர்க்கரை நோய் போன்றவை இருந்தது, அவரை அச்சுறுத்தியது. எனவே 2021ம் ஆண்டு புத்தாண்டு தினத்தின் போது தனது உடல் எடையை குறைக்க முடிவெடுத்தார். அதுவும் வெறும் வெயிட் லாஸாக மட்டும் இல்லாமல், ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைக்க வேண்டும் என தீர்மானம் செய்துள்ளார்.

நியூமனின் விடாமுயற்சிக்கு பலனளிக்கும் வகையில் 6 மாதத்தில் 60 பவுண்ட்கள் வரை உடல் எடையை குறைந்துள்ளது, தற்போது 100 பவுண்ட்கள் வரை எடை குறைந்துள்ள நியூமனின், வெயிட் லாஸ் டெக்னிக் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ உடல் எடையைக் குறைக்க நியூமன் என்னென்ன பழக்கங்களை பின்பற்றினார் என பார்க்கலாம்...

1. சோடாவுக்கு பதில் தண்ணீர்:

சோடா பானங்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு தண்ணீரை நிறைய குடிக்க ஆரம்பித்துள்ளார். மதுபானம் அருந்து போது கூட சோடாவிற்கு பதிலாக தண்ணீரைத் தான் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

2. நோ ஃபாஸ்ட் ஃபுட்:

உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஃபாஸ்ட் ஃபுட்கள் தான் முதல் எதிரி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே 46 வயதனா நியூமன் துரித உணவுகள் எனப்படும் ஃபாஸ்ட் புட் ஐயிட்டங்களை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துள்ளார். அதற்கு முன்பு 4 வேளை ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டு வந்த நியூமன், வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக இருந்தாலும் தானே தயார் செய்த ஆரோக்கியமான உணவு வகைகளை கையுடன் கொண்டு செல்ல ஆரம்பித்துள்ளார்.

3. நிற்காமல் தொடர்ந்த நடைபயிற்சி:

நியூமன் தினந்தோறும் டிரெட்மில்லில் நடப்பதை தனது வாழ்க்கையின் முக்கியமான பணியாக மாற்றியுள்ளார். எக்காரணம் கொண்டு தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வதை நியூமன் நிறுத்தியது கிடையாது.

4. சாப்பாட்டில் கவனம்:

உணவுக்கட்டுப்பாட்டின் மிகவும் முக்கியமான படியே நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை கண்காணிப்பது தான். அதற்கு தற்போது பல ஆப்கள் வந்துவிட்டன. அப்படி ஒரு ஆப்பை பயன்படுத்தி தான் சாப்பிடும் உணவுகளை நியூமன் கண்காணித்து வந்துள்ளார். ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவது, எண்ணெயில் பொறித்த உணவுக்கு பதிலாக பேக்கிங் மற்றும் கிரில்களைப் பயன்படுத்துவது என தனது சமையல் முறையிலும் பல மாற்றங்களை செய்துள்ளார். உடல் எடையை குறைப்பதற்காக கூடுமான வரை வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே அவர் உட்கொண்டுள்ளார்.

Also Read : உங்கள் காலை நேரத்தை மகிழ்ச்சியானதாக மாற்ற இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..!

5. கணவருடன் மலையேற்ற பயிற்சி:

நியூமன் இயற்கை விரும்பி, அவருக்கு இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தபடி நடக்கப்பிடிக்குமாம். எனவே கணவருடன் மலைப்பாதைகளில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

6. இரவு நேர மதுப்பழக்கத்திற்கு தடை:

உடல் எடை அதிகரிக்க சரியான தூக்கம் இல்லாததும் முக்கியமான காரணமாகும். எனவே நியூமன் தினந்தோறும் இரவு 10 மணிக்குள் படுக்கைக்குச் செல்வதை வழக்கமாகியுள்ளார். அத்துடன் இரவு நேரத்தில் மது அருந்துவதையும் நிறுத்தியுள்ளார். குறிப்பாக படுக்கைக்குச் செல்லும் முன்பு குடிப்பதை முற்றிலும் நிறுத்தியுள்ளார்.

7. இதுதான் ரொம்ப, ரொம்ப முக்கியம்:

எந்த ஒருவிஷயத்தையும் ஆரம்பிப்பதை விட அதனை நிலையாக செயல்படுத்துவது மிகவும் சவாலானது. இது உடல் எடை குறைப்பு விஷயத்திற்கு சரியாக பொருந்தும். நியூ இயர் அன்று வெயிட் லாஸ் ரெசல்யூஷன் எடுக்கும் பலரும், சில நாட்கள் அல்லது முதல் மாதத்திலேயே அதனை கைவிட்டுவிடுவது உண்டு. ஆனால் நியூமன் உடல் எடையைக் குறைப்பதை தனது ஆரோக்கியமாக பார்த்துள்ளார். எனவே உடல் எடையைக் குறைப்பதற்காக தொடங்கிய பழக்க வழக்கங்களை இன்று வரை பின்பற்றி வருகிறார்.

தற்போது சோம்பல், கடினமான வேலைகளைச் செய்தால் மூச்சு வாங்குவது, இதய துடிப்பு அதிகரிப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இயல்பாக வாழ்ந்து வருவதாக நியூமன் தெரிவித்துள்ளது, பலரையும் உடல் எடையைக் குறைக்க தூண்டியுள்ளது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Fitness, Weight loss