• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உடல் எடையை குறைக்கும்போது சொல்லப்படும் இந்த விஷயங்கள் உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்

உடல் எடையை குறைக்கும்போது சொல்லப்படும் இந்த விஷயங்கள் உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்

உடல் எடை குறைத்தல்

உடல் எடை குறைத்தல்

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் அது சார்ந்து சொல்லப்படும் கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துகள் பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியம்.

  • Share this:
தற்காலத்தில் வாழ்க்கை முறை பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக பலரும் அனுபவிக்கும் பொதுவான பிரச்சனை உடல் எடை அதிகரிப்பு. தங்களது அதிகரித்த உடல் எடையை குறைக்க போராடி வருவோருக்கு தெரியும் அது எவ்வளவு கடினமானது என்று. உடல் எடையை குறைக்க நினைக்கும் பெரும்பாலானோர் தங்கள் டயட்டில் இருந்து கார்போஹைட்ரேட்டுகளை நீக்குவது மற்றும் தினமும் கிரீன் டீ குடிப்பது உள்ளிட்ட சில அடிப்படை விஷயங்களை செய்கிறார்கள்.

சிலர் விரைவாக உடல் எடையை இழக்கும் முயற்சியில் பல விஷயங்களை முயற்சிக்கிறார்கள். உண்மையில் உடல் எடையை குறைக்க புத்திசாலித்தனமான டயட், சீரான வொர்கவுட் மற்றும் நிறைய பொறுமை தேவை..

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் அது சார்ந்து சொல்லப்படும் கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துகள் பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியம்.

கட்டுக்கதை நம்பர் 1 : உங்களுக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் தவிர்த்து விட வேண்டும்

வெயிட் லாஸிற்கு முயன்றால் சிலர் சொல்வது போல அனைத்து கார்போஹைட்ரேட் உணவுகள், உங்களுக்கு பிடித்த வறுத்த உணவுகள், கொழுப்பு உணவுகள் உள்ளிட்டவற்றை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும் என்பதில்லை. உடல் எடையை குறைக்க நீங்கள் ஒரு சீரான டயட்டை கடைபிடிக்க வேண்டும். இதில் கார்போஹைட்ரேட்டுகளும் அடக்கம். டயட்டில் இருந்து கார்போஹைட்ரேட்டுகளை முற்றிலுமாக நீக்குவது சோர்வடைய செய்யும்.

எனவே உங்கள் டயட்டில் கார்போஹைட்ரேட் 40% வரை இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். எதை சாப்பிட்டாலும் மிதமான அளவில் எடுத்து கொண்டால் அது எடை இழப்பு பயணத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.



கட்டுக்கதை நம்பர் 2 : குயிக் ஃபிக்ஸ் டயட் பயனுள்ளது..

quick fix diets சில கிலோ கிராம் எடையை குறைக்க உதவும் என்பது உண்மை தான். ஆனால் இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். வாரத்திற்கு 500 முதல் 750 கிராம் உடல் எடை இழப்பது என்பது இயல்பானது. மிகக்குறைவான கலோரிகளை எடுத்து கொள்வது, முழு உணவு வகைகளை டயட்டில் இருந்து நீக்குவது மற்றும் குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று உங்களை நீங்களே கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை உடலுக்கு தீமை செய்யும்.

ஏனென்றால் உங்கள் அடுத்த சமச்சீர் உணவை எப்போது சாப்பிடுவீர்கள் என்பது உங்களுக்கே தெரியாத நிலையில், உங்கள் உடல் conservation mode-க்கு நீங்கள் சாப்பிடும் அனைத்து உணவையும் கொழுப்பாக மாற்றுகிறது.

நீண்ட ஆயுளுக்கு சூப்பர் ஃபார்முலா- கியாரண்டி தரும் உணவுகளின் செக்லிஸ்ட்!

கட்டுக்கதை நம்பர் 3 : தீவிர உடற்பயிற்சி மட்டுமே எடையை இழக்க வைக்கும்..

வியர்க்க விறுவிறுக்க செய்யப்படும் உடற்பயிற்சிகளால் மற்றும் வெயிட் லாஸ் செய்ய முடியும் என்பதில்லை. குறைந்த தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளும் கூட எடை இழப்புக்கு உதவும். பசியையும் கொழுப்பையும் உண்டாக்கும் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை குறைந்த தீவிரம் கொண்ட வொர்க்கவுட்கள் குறைக்கின்றன.



கட்டுக்கதை நம்பர் 4: கஷ்டப்பட்டு இழந்த எடை மீண்டும் ஏறிவிடும்..

எடை குறைக்கும் முயற்சியில் சரியாக சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் மட்டுமே உண்மையாகுமே தவிர மற்றபடி இது முழு பொய். அதே போல நீங்கள் முதலில் குறைக்கும் சில கிலோகிராம் எடைக்கு தண்ணீர் காரணமாக இருக்கலாம் அந்த எடை மீண்டும் ஏறலாம். ஆனால் சீரான டயட் மற்றும் போதுமான வொர்கவுட் செய்து சரியான வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்களை பின்பற்றினால் சரியான உடல் எடையை பராமரிக்க முடியும்.

கட்டுக்கதை நம்பர் 5: உடலில் குறிப்பிட்ட பகுதியை டார்கெட் செய்து எடை குறைக்கலாம்.!

உங்கள் உடலில் நீங்கள் விரும்பும் இடத்தில் இருக்கும் கொழுப்பு திசுக்களை குறைப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை. டயட் மற்றும் வொர்க்கவுட்களில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஒட்டு மொத்த எடையை குறைக்கலாம். ஒருசில வொர்க்கவுட்கள் தசைகளை டோன் செய்து குறிப்பிட்ட உடல் பாகங்களை ஸ்லிம்மாக காட்டலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: