உடற்பயிற்சி, டயட் என கட்டுக்கோப்பாக இருந்தாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லையா? இது கூட காரணமாக இருக்கலாம்!

உடல் எடை குறைத்தல்

டயட் உணவுகளை சரிவர பின்பற்றாவிடிலும் எடையில் எந்த ஒரு மாற்றத்தையும் காண முடியாது. அதேபோல ஒருவர் சாப்பிடும் போது டிவி மற்றும் போன் போன்றவற்றை பார்த்துக்கொண்டே சாப்பிடக்கூடாது.

  • Share this:
உடல் எடையை குறைக்கும் வாழ்க்கை முறை பயணத்தை தொடங்குவதற்கு ஒருவரில் நிறைய உறுதியும் உத்வேகமும் தேவை. ஏனெனில் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் கூடுதல் எடையை குறைக்க ஒர்க்அவுட், டயட் போன்ற செயல்முறைகளில் ஈடுபட வேண்டியிருக்கும். ஆனால் பல வாரங்கள் கடின உழைப்பு மற்றும் டயட் முறைகளை ஃபாலோ செய்த பிறகும், உடல் எடையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால், அது மனச்சோர்வை ஏற்படுத்தும்.

குறைவாக சாப்பிடுவதன் மூலமும், அதிக உடற்பயிற்சி செய்வதன் மூலமும் உடல் எடையை குறைத்து விடலாம் என்பது அர்த்தமல்ல. துரதிர்ஷ்டவசமாக, தவறாக வழிநடத்தப்படும் டயட் உணவு முறைகள், வெயிட் லாஸ் தயாரிப்புகள் மற்றும் பிரபலங்களின் எடை குறைப்பு டிப்ஸ் உள்ளிட்டவை இணையத்தில் பரவி உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடற்பயிற்சி செய்தும் எடை இழக்காததற்கு சாத்தியமான காரணங்கள்

இது குறித்து, அப்பல்லோ டெலிஹெல்த்தின் மூத்த உணவியல் நிபுணர் எம்.சரோஜா நந்தம் கூறுகையில், உடல் எடை குறைப்பில் நிபுணரிடமிருந்தோ அல்லது வேறு ஏதேனும் மூலத்திலிருந்தோ ஒரு தொழில்முறை உணவு திட்டத்தை நாம் எடுத்துக் கொள்கிறோமா என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க உதவும் பல தளங்கள் தற்போது இணையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.ஒரு நபர் ஒரு தொழில்முறை உணவு திட்டத்திற்கு உட்பட்டிருந்தால், அவர் திட்டமிட்ட சரியான மதிப்பாய்வுகளுக்கு செல்கிறாரா? என்பதை கவனிக்க வேண்டும். நிறைய பேர் தங்கள் உணவியல் நிபுணரிடம் எடை குறைப்பு குறித்த விமர்சனங்களை பெற செல்வதில்லை. ஆனால் அவ்வாறு செய்வது மிகவும் முக்கியமானது. ஒரே மாதிரியான டயட் உணவுகள் நீண்ட காலத்திற்கு பின்பற்றுவது ஒரு நபரில் உடல் எடையை குறைக்க உதவாது. இந்த நிலைமைகளின் அடிப்படையில், எடை குறைப்பில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பார்க்க வல்லுநர்கள் 15 நாட்கள் அல்லது 1 மாதத்தில் மக்களை மீண்டும் மதிப்பாய்வுகளுக்கு அழைக்கிறார்கள். அதன்படி நாம் மேற்கொண்டு செய்யவேண்டிய திருத்தங்களை பின்பற்றுவது அவசியம்.

வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்த நீர் உடல் எடையை குறைக்க உதவுமா..? டிரை பண்ணி பாருங்க...

மேலும் நந்தம் கூறியதாவது, “மக்கள் எவ்வளவு நாட்கள் ஒரே டயட்-ஐ பின்பற்றுகிறார்கள் என்பது கூட அவர்களது உடலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். அதுதவிர டயட் உணவுகளை சரிவர பின்பற்றாவிடிலும் எடையில் எந்த ஒரு மாற்றத்தையும் காண முடியாது. அதேபோல ஒருவர் சாப்பிடும் போது டிவி மற்றும் போன் போன்றவற்றை பார்த்துக்கொண்டே சாப்பிடக்கூடாது எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார். ஏனெனில் அந்த சமயங்களில் நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது நமக்கே தெரியாது. சரி, உடல் எடை குறைப்பில் ஈடுபட்டிருந்தாலும், டயட் முறைகளை ஃபாலோ செய்தாலும் உடல் எடை ஏன் குறையவில்லை. அப்படியானால் உங்கள் தினசரி செயல்படுகளில் நடந்திருக்கும் முக்கிய தவறுகள் என்ன என்பதை பின்வருமாறு காண்போம்.

1. மிகக் குறைந்த கலோரி உணவுகளைப் பின்பற்றுதல்: குறைவாக சாப்பிட்டால் எடையை குறைக்கலாம் என்பது பெரும்பாலான மக்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உணவுகள் ஆரம்பத்தில் நல்ல முடிவுகளை கொடுக்கும் ஆனால் சிறிது காலம் கழித்து எடை அதிகரிப்பையே ஏற்படுத்தும். ஒரே மாதிரியான குறைந்த டயட் உணவு நீண்ட காலத்திற்குத் தொடரும்போது, ​​இந்த உணவுகள் அதிக கலோரி உணவுகளுக்கான பசியையும் அதிகரிக்கும்.

2. திடீரென டயட் பின்பற்றுவதை கைவிடுவது: குறைவாக சாப்பிட்டாலும் எடை குறைவது நின்றுவிட்டால், அது மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது. பசி மற்றும் மனஉளைச்சல் ஆகியவை பெரும்பாலும் உணர்ச்சி ரீதியாக அதிக உணவை சாப்பிட உங்களை தூண்டலாம். அந்தவகையில், கலோரி உட்கொள்ளலில் ஏற்படும் திடீர் அதிகரிப்பு எடையை மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கலாம். இதுபோன்று எடை இழப்புக்கும் எடை அதிகரிப்புக்கும் இடையில் பல முறை தோல்வியுற்ற முயற்சிகள் உடலுக்கு தீங்கை மட்டுமே கொடுக்கும். இவை ஊட்டச்சத்து குறைபாடுகள், தசை வெகுஜனத்தின் அதிகப்படியான இழப்பு, குறைந்த ஆற்றல் நிலைகள், தொடர்ந்து சோர்வு உணர்வு மற்றும் சோம்பலுக்கு வழிவகுக்கிறது.

What is Intermittent Fasting? How it helps to reduce weight?

3. போதுமான ஃபைபர் மற்றும் புரதத்தை உட்கொள்வதில்லை: நீங்களாக எடுத்துக்கொள்ளும் உணவுகளில் போதுமான அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து இல்லாமல் போகலாம். நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறைந்தாலும், அதில் கிடைக்கும் புரத சத்துக்களின் அளவு குறையக்கூடாது. புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் வயிறு திருப்தியடைகிறது. இந்த ஊட்டச்சத்துக்களை வளர்சிதைமாற்றம் செய்ய உடல் அதிக கலோரிகளை எரிப்பதால் உணவு பசி குறைந்து நிலைத்தன்மையை மேம்படுத்தும் .

4. எடை குறைப்பு தயாரிப்புகளை நம்பியிருப்பது: உடல் எடையை விரைவாக குறைப்பதற்காக, முழுமையான தீர்வு என்று விற்கப்படும் பல்வேறு எடை இழப்பு தயாரிப்புகளால் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு 2-3 கப் கிரீன் டீ/ டிடாக்ஸ் தேநீர் உட்கொள்வது அல்லது கொழுப்பு பர்னர்களை எடுத்துக்கொள்வது ஆகியவை தேவையான உடல் எடையை ஆரம்பத்தில் குறைக்கலாம். ஆனால் அவை தற்காலிகமான எடை இழப்புக்கு மட்டுமே வழிவகுக்கும்.

பேலியோ டயட்டின் போது என்னவெல்லாம் சாப்பிடலாம்..? எதை சாப்பிட கூடாது..?

உடல் எடையை குறைக்கும் போது என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும், என்னமாதிரியான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் மாறலாம். ஏனெனில், உங்களின் உடல் எடை மற்றும் பிற விஷயங்களை கணக்கில் கொண்டே எடை குறைப்பு திட்டம் வகுக்கப்படுகிறது. எனவே, நீங்களாக ஒரு டயட்டை பாலோ செய்யாமல், உடைப்பயிற்சி வல்லுனர்களிடம் அடிக்கடி ஆலோசனை பெறுவது அவசியம்.

 
Published by:Sivaranjani E
First published: