ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நீங்கள் இந்த 3 விஷயங்களை செய்தாலே உடல் எடையை குறைத்துவிடலாம்..!

நீங்கள் இந்த 3 விஷயங்களை செய்தாலே உடல் எடையை குறைத்துவிடலாம்..!

உடல் எடையைக் குறைப்பது என்பது தோற்றத்திற்கானது மட்டுமல்ல. அது உங்கள் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. எனவே உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாதீர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உடல் எடையை குறைப்பது என்பது சவாலான விஷயம். இந்த பயணத்தில் சிலர் வெற்றி காண்பதுண்டு. சிலர் பாதியிலேயே நிறுத்துவிட்டு தோல்வியும் காண்பதுண்டு. எதுவாயினும் உடல் எடையைக் குறைப்பது என்பது தோற்றத்திற்கானது மட்டுமல்ல. அது உங்கள் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. எனவே உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாதீர்கள்.

இன்று உடல் எடையை குறைக்கும் வழிகளில் பல முறைகள் வந்துவிட்டன. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஊட்டச்சத்து நிபுணர் அஸ்ரா கான் 3 எளிமையான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவை என்னென்ன பார்க்கலாம்.

உடல் எடையை குறைப்பதற்கான மூன்று வழிகள் :

எடை பயிற்சி :

இந்த பயிற்சியில் உங்கள் தசைகளை அதிகரிக்கச் சொல்கிறார். இதன் மூலம் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க முடியும். இதனால் எளிதில் தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க முடியும் என அறிவுறுத்துகிறார்.

தினமும் ஊறவைத்த பாதாம், திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

இன்டெர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் :

இன்டெர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என்பது உணவை மூன்று வேலையாக அல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து இடைவேளை விட்டு சாப்பிடுவதாகும். இது ஒரு வேளை உணவை 5 முறை 6 முறை என சௌகரியத்திற்கு ஏற்ப பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். இதனால் கொழுப்பும் சேராது. செரிமானமும் எளிதாக இருக்கும். நினைத்த உடல் எடையை குறைக்கவும் முடியும்.

1 கிலோ உடல் எடைக்கு 1 கிராம் புரோட்டீன் :

ஃபிட்டாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் புரதச்சத்தைதான் அதிகமாக எடுத்துக்கொள்வார்கள். புரதமானது உடல் எடையை குறைக்கவும் அதேசமயம் நாள் முழுவதும் ஆற்றலுடனும் வைத்துக்கொள்ள உதவும். நீண்ட நேரம் பசியும் எடுக்காது. எனவேதான் ஊட்டச்சத்து நிபுணரும் உங்கள் ஒவ்வொரு 1 கிலோ எடைக்கும் 1 கிரம் புரோட்டீனை எடுத்துக்கொள்ளுங்கள் என பரிந்துரைக்கிறார்.

First published:

Tags: Fitness, Weight loss