• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நெய் அல்லது தேங்காய் எண்ணெய்? இரண்டில் விரைவாக உடல் எடையை குறைக்க எது உதவும்!

நெய் அல்லது தேங்காய் எண்ணெய்? இரண்டில் விரைவாக உடல் எடையை குறைக்க எது உதவும்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

தேவையற்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதும் உடல் எடை பிரச்னைக்கு மிக முக்கியமான காரணியாக இருக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான காரியம். அதிகம் சாப்பிட்டால் உடை எடை உயரும் அளவிற்கு, கடினமாக முயற்சி செய்தால் கூட சில நேரங்களில் உடல் எடை அவ்வளவு எளிதில் குறையாது. உடற்பயிற்சிகள், சாப்பிடும் பொருட்களில் கட்டுப்பாடு, சரியான அளவு தூங்குவது, மனஅழுத்தமின்றி இருப்பது என ஒரே நேரத்தில் பல நேர்மறை விஷயங்களை தொடர்ந்து செய்தால் மட்டுமே உடல் எடை படிப்படியாக குறையும்.

தேவையற்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதும் உடல் எடை பிரச்னைக்கு மிக முக்கியமான காரணியாக இருக்கிறது. எனவே எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கும் போது, சரியான வகை உணவுகளை சாப்பிடுவது மிக முக்கியம். கூடவே அவற்றை சமைக்க நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் அல்லது பிற கொழுப்பு சத்து அடங்கிய பொருட்களையும் கவனமாக தேர்வு செய்து சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.

சமையலுக்கு பயன்படுத்த மிகச் சிறந்த மற்றும் ஆரோக்கியமான வகைகள் இருப்பதால், பெரும்பாலானோர் சுத்திகரிக்கப்பட்ட அல்லது தாவர எண்ணெய்களை பயன்படுத்தி சமைக்க விரும்புகின்றனர். எனினும் உணவு தோற்றங்களின் வெளிப்பாடு காரணமாக தற்போது பலரது கவனமும் இயற்கையில் கிடைக்கும் கொழுப்பு மூலங்கள் (natural fat sources) பக்கம் திரும்பியுள்ளது. இவற்றில் தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவற்றை சமையலில் பயன்படுத்த மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதிக சுகாதார நன்மைகள் மற்றும் மல்டிவைட்டமின்கள் அடங்கிய நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டுமே ஆரோக்கியமிக்க எண்ணெய்கள் என்றும் எடை குறைக்க உதவுவதாக அறியப்படுகிறது.

ஒருவேளை உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், இவை இரண்டில் எது வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெயின் நன்மைகள்:

இயற்கையிலேயே பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது தேங்காய் எண்ணெய். ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில், 121 கலோரிகள், 0 கிராம் புரதம் உள்ளது. சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது உங்கள் உடலில் எடை இழப்பை துரிதப்படுத்தும். வழக்கமாக கடலைஎண்ணெய், சன்பிளவர் ஆயில், பாமாயில் உள்ளிட்டவற்றில் சாப்பிட்டு விட்டு, திடீரென தேங்காய் எண்ணெயில் சமைத்த உணவு வகைகளின் சுவை சிலருக்கு பழக சிறிது நாட்கள் ஆகும்.

வித்தியாசமான சுவை தந்தாலும் இதிலிருக்கும் நன்மைகள் ஏராளம். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில், தேங்காய் எண்ணெய் தெர்மோஜெனிக் கொழுப்பை வேகமாக எரிக்கிறது. இதில் உள்ள MCT விரைவாக உடல் எடை இழக்க ஊக்குவிக்கிறது. மேலும் தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வது உடல் எடையை அதிகரிக்க உதவும் நச்சுகள் மற்றும் வியாதிகளை அகற்ற உதவுகிறது. அதிகம் பயன்படுத்தாமல் சரியான அளவில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால் நல்ல முறையில் எடை குறைக்கலாம்

நெய் ஏன் ஆரோக்கியமானது.?

நம் நாட்டில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் நெய், எடை குறைப்புக்கு செய்யும் உதவி இப்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. உயிரணுக்களில் இருக்கும் நச்சுகளை அகற்றி வளர்சிதை மாற்றத்தை நெய் மேம்படுத்துவதால் எளிதாக உடல் எடையை இழக்க முடிகிறது. ஏ, டி மற்றும் கே போன்ற கொழுப்பு கரையக்கூடிய வைட்டமின்களின் நல்ல ஆதாரமாக உள்ள நெய்யில் அதிக ஸ்மோக்கிங் பாயிண்ட் உள்ளதால் இது சமைப்பதற்கு சிறந்ததாக இருக்கிறது.

நெய்யில் உள்ள குடல் நட்பு என்சைம்கள் நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் 115 கலோரிகள், 9.3 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, 0 கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. தேங்காய் எண்ணெய், நெய் இரண்டும் எடை குறைக்க ஏற்றது என்று சொல்லப்படுவதற்கு மற்றொரு உறுதியான காரணம் இவற்றில் உள்ள medium-chain fats எனப்படும் நடுத்தர சங்கிலி கொழுப்புகள் ஆகும். இவை கொழுப்பை விரைவாக எரிக்கும் கெட்டோசிஸ் உடலுக்குள் நுழைய ஊக்குவிக்கின்றன.

எதை தேர்வு செய்யலாம்.?

தேங்காய் எண்ணெய், நெய் இரண்டுமே மிகவும் சத்தான மற்றும் எடை இழப்புக்கு மிகவும் உதவும் பொருட்கள். இதில் ஒன்றை விட ஒன்றை சிறந்தது என்று காட்டுவது சில சத்தான மதிப்புகள் மற்றும் உணவு விருப்பங்களைப் பொறுத்தது. தேங்காய் எண்ணெயில் நெய்யை விட சற்றே அதிக கலோரிகள் உள்ளன. தேங்காய் எண்ணெயை விட நெய்யும் சற்றே அதிக சத்தானதாக இருக்கிறது.நெய்யில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Also read... ஒரே வாரத்தில் 91 கிலோவிலிருந்து 90.6 கிலோவாக குறைந்த சமீரா ரெட்டி : தனது எடை குறைப்பு பற்றி இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி..!

சைவ பிரியர்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்ததாக இருக்கலாம். சில ஆய்வு முடிவுகளை பார்த்தால் தேங்காய் எண்ணெய் நெய்யை விட எடை குறைப்பதில் மிக வேகமாக வேலை செய்கிறது. இருப்பினும் ஒரு ஒருவரின் உணவு தேவைகளை பொறுத்து இவற்றை பயன்படுத்துவதில் மாறுபாடு ஏற்படுகிறது. சிலருக்கு சென்சிட்டிவான ஜீரண சக்தி இருந்தால், நடுநிலையான அல்லது அதிக அளவு நெய் (அல்லது) தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இரண்டில் எதை தேர்வு செய்தாலும் தேவைக்கு அதிகமாக பயன்படுத்த கூடாது.

ஆர்கானிக் மற்றும் பதப்படுத்தப்படாத நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உடல் எடை இழப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு சிறப்பான முடிவை தரும் என்பது இன்னொரு முக்கிய அம்சம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: